Pages

Friday, October 5, 2018

[vallalargroups:6020] வள்ளலார் சிந்தனை ::நல்வினை, தீவினை

🍁 திருக்குறள்.  5. 🍁
●●●●●●●●●●●●●●●●●●

🍁இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 🍁

🍁 இறைவனது உண்மையான புகழை விரும்பி எப்போதும் அன்பு செலுத்துவாரிடத்தில் அறியாமையால் வருகின்ற நல்வினை,  தீவினை ஆகிய  இருவினைகளும் சேர்வதில்லை. 🍁

🍁 வள்ளுவர். 🍁
•••••••••••••••••••••••••••

🍀 திருவருட்பா. 🍀
●●●●●●●●●●●●●●●

🍀 வன்பெரு நெருப்பினைப் புண்புழுப் பற்றுமோ 
வானை ஒரு மான் தாவுமோ 
வலியுள்ள புலியை ஓர் எலி சீறுமோ பெரிய 
மலையை ஓர் ஈச்சிறகினால் 
துன்புறு அசைக்குமோ வச்சிரத் தூண் ஒரு 
துரும்பினால் துண்டமாமோ 
சூரியனை இருள் வந்து சூழுமோ காற்றில் மழை 
தோயுமோ இல்லை அதுபோல் 
அன்புடைய நின் அடியர் பொன் அடியை உன்னும் அவர் 
அடிமலர் முடிக்கணிந்தோர்க்
கவலமுறுமோ காமம் வெகுளி உறுமோ  மனத் 
தற்பமும் விகற்பமும் உறுமோ. 🍀

🍀 தத்துவச்  சேட்டையும் தத்துவ துரிசும்  
அத்தகை அடக்கும் அருட்பெருஞ்ஜோதி. 🍀

🍀 கரைவின் மாமாயைக் கரும்பெரும் திரையால் 
அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி. 🍀

🍀 வள்ளலார். 🍀
●●●●●●●●●●●●●●●

No comments:

Post a Comment