Pages

Tuesday, October 2, 2018

[vallalargroups:6016] வள்ளலாரின் சிந்தனைகள்::: காமம், வெகுளி, மயக்கம்

🍒 திருக்குறள். 🍒
●●●●●●●●●●●●●●●●

🍒 காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் 
நாமம் கெடக் கெடும் நோய். 🍒

🍒 காமம்,  வெகுளி,  மயக்கம்  என்னும் இவை மூன்றின் பெயர்களைக் கூட  உள்ளத்திலிருந்து அறவே நீக்கிவிட்டால் பிறவித் துன்பமும் கெடும். 🍒

🍒 வள்ளுவர். 🍒
●●●●●●●●●●●●●●

🍇 திருவருட்பா. 🍇
●●●●●●●●●●●●●●●●

🍇 மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய 
வாதனை எனுங் கள்வர் தாம் 
வந்து மன  அடிமையை எழுப்பி அவனைத் தமது 
வசமாக உளவு கண்டு 
மேயமதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது 
மெய்ந்நிலைச் சாளிகை எலாம் 
வேறுற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளை கொள 
மிக நடுக்குற்று நினையே 
நேயம் உற  ஓவாது கூவுகின்றேன் சற்றும் 
நின் செவிக் கேற இலையோ
நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் 
நிறைவும் இலையோ என் செய்கேன். 🍇

🍇 காமப் புடைப்புயிர் கண்தொடரா வகை 
ஆமற  அடக்கும் அருட்பெருஞ்ஜோதி. 🍇

🍇 பொங்குறு வெகுளிப் புடைப்புகள் எல்லாம் 
அங்கற  அடக்கும் அருட்பெருஞ்ஜோதி. 🍇

🍇 மதம்புரை மோகமும் மற்றவும் ஆங்காங்கு
அதம்பெற  அடக்கும் அருட்பெருஞ்ஜோதி. 🍇

வடுவுறு அசுத்த வாதனை அனைத்தையும் அடற்பற  அடக்கும் அருட்பெருஞ்ஜோதி. 🍇

🍇 வள்ளலார். 🍇
●●●●●●●●●●●●●●●●

No comments:

Post a Comment