மனித வாழ்க்கை. !
மனித பிறப்பு உயர்ந்த பிறப்பு என்று எல்லோரும் சொல்லுகிறார்கள்.
ஏன் மனிதன் பிறக்கிறான். வளர்கிறான்.படிக்கிறான்.சம்பாதிக்கிறான்.திருமணம் செய்து கொள்கிறான்.
குடும்பம் நடத்துகிறான்.குழந்தை குட்டிகளைப் பெற்றுக்கொள்கிறான்.
அவர்களை வளர்க்கிறான்.அவர்களுக்கும் படிப்பு.பொருள்.திருமணம் குடும்பம் நடத்த கற்றுக் கொடுக்கிறான்.
பின் வயது முதிர்ந்து நோய்வாய்ப் பட்டு மாண்டு போகிறான்.
இதுவா ? மனிதனின் உயர்ந்த பிறப்பின் ரகசியம்...
இதற்காகவா மனித பிறப்பு இறைவனால் கொடுக்கப்பட்டது .என்பதை ஒரு நாளாவது சிந்திக்கும் அறிவு தெளிவு மனிதனுக்கு தோன்றி உள்ளதா ? என்றால் இன்று வரையில் தோன்றவில்லை..
வள்ளலார் வந்து தான் மனித பிறப்பின் ரகசியத்தை வெளிப்படையாக சொல்லி உள்ளார். மரணம் வந்து மாண்டு போவதற்காக மனித பிறப்பு கொடுக்கப் படவில்லை..
மனிதனும் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற்றிக் கொள்ள வேண்டிய தகுதி மனிதனுக்கு மட்டுமே உண்டு.
அவற்றைப் பெறுவதற்கே மனித பிறப்பு கொடுக்கப் பட்டதாகும்.
பொருளைத் தேடும் மனிதன். அருளைத் தேடவே மனிதப் பிறப்பு இறைவனால் கொடுக்கப் பட்டுள்ளது..
இந்த மெய்ப்பொருள் உண்மையைச் சொல்ல வந்தவர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்கள்.
வள்ளலார் எழுதி வைத்துள்ள திருஅருட்பாவை முழுமையாக படித்து பார்த்து .அதில் உள்ள உண்மைகளை அறிந்து.தெரிந்து.புரிந்து.கொண்டு.வாழ்ந்து.மனித பிறப்பின் உண்மை ரகசியத்தை.தெரிந்து கொள்ள வேண்டுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
.
வள்ளலார் பாடல் !
கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எலாம் பழுதே !
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே!
உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே !
உலகயலீர் இது வரையில் உண்மை அறிந்திலிரே !
விண்டதனால் என் இனி நீர் சமரச சுத்த சன்மார்க்க
மெய் நெறியைக் கடைப்பிடித்து !
மெய்ப் பொருளை நன்கு உணர்ந்தே !
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின் !
இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.
No comments:
Post a Comment