வள்ளுவர் கூறும்
உடைமைகள் - எது உடைமை ?
நமக்குச் சொந்தமனவைகளை ' உடைமை ' எனச் சொல்கிறோம் ;கருதுகிறோம் .அவற்றின் மீது உரிமை கொண்டாடுகின்றோம்.இவர் என் அன்னை ; இது என் பள்ளி என்று உரிமையோடு கூறுகின்றோம் . இவற்றை மட்டுமல்ல ;நம் பெற்றுள்ள செல்வம் ,வீடு ,தோட்டம் ,வயல் ,பொன் ,பொருள் அனைத்தையும் 'உடைமை' என்று அவற்றின் மீது பற்று கொள்கின்றோம். ஆனால் இவை அனைத்தும் அழியும் உடைமைகள் .
நமக்குச் சொந்தமனவைகளை ' உடைமை ' எனச் சொல்கிறோம் ;கருதுகிறோம் .அவற்றின் மீது உரிமை கொண்டாடுகின்றோம்.இவர் என் அன்னை ; இது என் பள்ளி என்று உரிமையோடு கூறுகின்றோம் . இவற்றை மட்டுமல்ல ;நம் பெற்றுள்ள செல்வம் ,வீடு ,தோட்டம் ,வயல் ,பொன் ,பொருள் அனைத்தையும் 'உடைமை' என்று அவற்றின் மீது பற்று கொள்கின்றோம். ஆனால் இவை அனைத்தும் அழியும் உடைமைகள் .
வள்ளுவர் கூறும்
உடைமைகள் என்றும் அழியாதவை ;
அவர் குறிப்பிடும் உடைமைகள் யாவை ?
அவர் குறிப்பிடும் உடைமைகள் யாவை ?
1 அடக்கமுடைமை
2 அருளுடைமை
3 அறிவுடைமை
4 அன்புடைமை
5 ஆள்வினைஉடைமை
6 ஊக்கமுடைமை
7 ஒழுக்கமுடைமை
8 நாணுடைமை
9 பண்புடைமை
10
பொறையுடைமை
மனிதனாகப்
பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்தப் பத்து உடைமைகளும் மிகமிகத் தேவையானவை .
ஒருவர் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துச் செல்வங்களையும் அனைத்து வசதிகளையும் பெற்றிருந்தாலும் ,'அடக்கம் 'என்னும் ஆக்கம் ,அதாவது செல்வம் அவரிடம் இல்லாவிடில் பயனில்லை . மெய் ,வாய்,கண் ,மூக்கு,செவி,ஆகிய ஐம்புலன்களையும் அடக்கிக் காத்தலே அழியாத புகழை ஈட்டித்தரும் .
ஒருவர் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துச் செல்வங்களையும் அனைத்து வசதிகளையும் பெற்றிருந்தாலும் ,'அடக்கம் 'என்னும் ஆக்கம் ,அதாவது செல்வம் அவரிடம் இல்லாவிடில் பயனில்லை . மெய் ,வாய்,கண் ,மூக்கு,செவி,ஆகிய ஐம்புலன்களையும் அடக்கிக் காத்தலே அழியாத புகழை ஈட்டித்தரும் .
நாவை
ஒருவன் அடக்கிக் காக்க வேண்டும் . 6 அங்குள நீளமுள்ள நாக்கு 6 அடி உயரம் உள்ள மனிதனையே
கொல்லும் ஆற்றலுடையது.நம்முடைய நாவினால் பிறர் மனம் புண்படும்படி சொற்களைப் பேசக் கூடாது
.இதனையே வள்ளுவர் ,
"யாகாவர் ஆயினும் நாகாக்கக்
காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப்
பட்டு .
என்கிறார்
.சொற்குற்றத்திற்கு ஆளாகாமல் நம் நாவை அடக்கிப் பழக வேண்டும் (அடக்கமுடைமை).
பொருட்செல்வம்
மிக இழிந்தவர்களாகிய திருடன் ,கொள்ளைக்காரன் ஆகியவரிடம் கூட கோடிக்கணக்காகக் குவிந்திருக்கலாம்
.ஆனால் , 'அருட்செல்வமே' உயர்ந்த செல்வமாகும் .எல்லா உயிரினத்திலும் கருணை கொண்டு
அவற்றைக் காப்பதே அருள்உடைமை .
இதைப்
பெற வேண்டுமாயின் ஒருவருக்கு அறிவுடைமை தேவை .அறிவு என்பது பல நூல்களைப் படித்தால்
மட்டுமே வருவதன்று .எவற்றை எவர் கூறினாலும் .அதில் உள்ள உண்மைப் பொருளை ஆராய்ந்து அறிவதே
அறிவுடைமை .
உலகில்
இன்புற்று வாழ வேண்டும் எனில் அனைத்து உயிர்கள் மீது அன்புடையவர்களாக விளங்க வேண்டும் .உள்ளத்தில் அன்பு இல்லாதவர்கள் வரும்
தோற்றத்தால் மட்டுமே மனிதர் என்று குறிப்பிடுவர்.பொம்மைகள் போன்றவர்கள் அன்பில்லாதவர்கள்.(
அன்புடைமை)
நம்மால்
முடியும் என்று நம்பிக்கையுடன் ஒரு செயலைச் செய்வதே ஆள்வினையுடைமை .''செய்வன திருத்தச் செய்'' என்னும் பழமொழிகேற்ப எந்த
செயலையும் திறன்பட ,திருத்தமாக ,நன்றாகச் செய்ய வேண்டும் .இல்லையேல் ,அரைக்கிணறு தாண்டுவது
போல் அச்செயல் ஆபத்தில் முடிந்து விடும்.
"வெள்ளத்
தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்
தனைய துயர்வு ."
தண்ணீரின்
அளவுதான் அதில் மலர்ந்திருக்கும் தாமரை தண்டின் உயரமும் இருக்கும் .நம் உள்ளத்தில்
"ஊக்கம் "எந்த அளவு உயர்ந்திருக்கிறதோ அந்த அளவு நம் வாழ்க்கையும் உயர்ந்து
விளங்கும் .எதை நினைத்தாலும் உயர்ந்தவற்றையே நினைக்க வேண்டும் .உள்ளத்தில் ஊக்கமில்லையேல்
,நாம் வாழ்கையில் உயர்வில்லை .கல்வி கற்க உரம் போன்றது ஊக்கமுடைமையே .
தமக்கு
பழி வராதவாறு வாழ்வதே நாணுடைமை .உலகம் பலிக்கும் இழி செயல்களைச் செய்யாமல் இருப்பதே
நாணுடைமை .நாணம் உடையவர்கள் பண்பின் உறைவிடமாவர்.
நல்ல
குணங்களைப் பெற்றிருப்பதே பண்புடைமை .'பண்பு 'என்னும் சொல்லுக்கு நல்ல குணங்கள் என்று
பொருள் .நல்ல நிலத்தில் விதை விதைத்தால்தான் பயிர் நன்கு வளரும் .இளம் பிள்ளைகளின்
உள்ளம் கள்ளம் கபடம் அற்றது .நல்ல எண்ணங்கள் அவர்கள் உள்ளத்தில் நன்கு பதியும் .எல்லோரிடமும்
எளிமையாகப் பழகுவதே பண்புடைமை .
"ஒழுக்கம்
உயிரைக் காட்டிலும் மேலானது ."பெரியோர்களும் அறநூல்களும் காட்டும் நேரிய பாதையில்
செல்வதே ஒழுக்கமுடைமை .
நல்ல
நடத்தையினால் உயர்வு ஏற்படும்.தீய நடத்தையால் பழி வந்து சேரும் .தகாத சொற்களை ஒரு போதும்
தவறியும் கூறிவிடக் கூடாது .தீயோர் நட்பை விலக்க வேண்டும்
ஒருவர்
நமக்குத் தீமை செய்தாலும் ,அதனைப் பொறுத்துக்கொண்டு மீண்டும் அவர்களுக்கு நன்மையே செய்ய
வேண்டும் .தீமையை வெல்ல நம்மையே மருந்து. பொறுமையே சிறந்த வழி.(பொறையுடைமை)
எனவே
,வள்ளுவர் கூறிய -மேற்காட்டிய பத்து உடைமைகளைப் பெற்று உலகில் புகழோடு வாழ்வோமாக
No comments:
Post a Comment