பசித்திரு
தேகம் நீடிக்க அளவோடு உண்ணல் , சுத்த ஆகாரத்தை பசித்த போது கொள்ளல் .
அமுதமாயினும் அதிகம்
புசியாதிருத்தல் . ஆண்டவர் அருளமுதம் அருந்த அருட்கணல் ஏற்றி அவாக் கொள்ளுதலே பசித்திருத்தல் - முழுமை சித்தி அடையும்வரையில்
ஆன்மப் பசியுடன் இருத்தல் ஆகும்.
தனித்திரு :
ஆசாபாசங்களில் அறிவை அழுந்த
விடாமல் பற்றற்றான் பற்றினையே பற்றிக்கொண்டிருத்தல் , எவ்வித
கூட்டுறவுகளில் கலந்திருந்த
போதிலும் சீவன் பரமனை பற்றி
இருத்தலே தனித்திருத்தல் - மனம்
தனித்து அமைதி நிலையில் இருத்தல்
ஆகும்.
விழித்திரு :
மனம் , புத்தி ,சித்தம் ,அகங்காரம் முதலிய காரணங்களை அன்புக்குரிய நன்முயற்சியில் ஈடுபடுத்தி பொய் ,
பொறாமை, காமம் , குரோதம் , லோபம் , மோகம், மதம், மாச்சரியம் முதலான துவேச உணர்வுகளிலிருந்து
தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல் -
விழித்திருத்தல் எனப்பெறும் அறிவுடன் இருத்தல் ஆகும் .
' வள்ளல் பெருமான்' இராமலிங்க அடிகள்
🌞🔥🌝🌞🔥🌝🌞🔥🌝🌞🔥🌝
No comments:
Post a Comment