சீரக சம்பா அரிசி:
"முதற்பக்ஷம் சீரகச்சம்பா அரிசி அன்றிப் புன்செய் விளைவும் காரரிசியுந் தவிர நேரிட்ட அரிசியின் வகைகள் - ஆகும்". - நித்தியா கருமவிதி.
மேற்கண்ட இடத்தில் சீரக சம்பா அரிசி உண்ணலாமா ? அல்லது உண்ணுதல் கூடாதா? என எழும் ஐயத்திற்கு கீழே உள்ள பெருமானின் நித்தியா கருமவிதி சிறப்பு விதியே பதிலாக அமைகின்றது.
9. பழஞ்சோறு, பழங்கறி, எருமைப்பால், எருமைத்தயிர், மோர், நெய், செம்மறிப்பால், தயிர், மோர், நெய், கேழ்வரகு,
வரகு, தினை, சாமை, பருப்புவகை, அதிரசம், அப்பம், சுகியம் முதலிய சிற்றுண்டி, தயிர்ச்சோறு, புளிச்சோறு
முதலிய சித்திரான்னம் காரரிசிச்சோறு, முளைக்கீரை, அகத்திக்கீரை, முன்னை முதலான இலைக்கறி, சுரை,
பூசுணை, பறங்கி, பீர்க்கு, புடல், பாகல், கடுகு, நல்லெண்ணெய், புளி, புகையிலை, கள், சாராயம், கஞ்சா, புலால்,
மாமிசம் முதலிய விலக்குகளை நீக்கி, விதித்தவைகளை யனுசரித்தல்.
காரரிசிச்சோறு நீக்கி, சீரக சம்பா அரிசியை உண்ணலாம் என்பது தெளிவு.
மேற்குறித்த பகுதி தொடர்பாக அன்பர்களின் கருத்து வரவேற்கப்படுகின்றது.
Regards,
--
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment