Pages

Thursday, July 10, 2014

[vallalargroups:5511] திருவடிப் பெருமை - பாகம் 4 : சின்னக்கோடும் பெரிய கோடும்

திருவடிப் பெருமை - பாகம் 4 : சின்னக்கோடும் பெரிய கோடும்

சூரியன் முன்
மின்மினிப் பூச்சி ஒன்றுமில்லை போலும்

பெரிய நெருப்புக் கோளம் முன்
ஒரு தீக்குச்சியின் திறன் ஒன்றுமில்லை போலும்

ஒரு பெரிய கோட்டின் முன்
ஒரு சிறிய கோட்டின் திறன் ஆகும்

நம் அறியாமையினால்
அந்தக்கரணங்கள் - கோள்களின் சக்தி
வினைகளின் ஆற்றல் அதிகம் என்று புலம்புகின்றோம்

அதன் முன்
நம் முயற்சிகள் பலிதம் ஆகவில்லை என்று வருந்துகின்றோம்
நம் திறன் பயனற்றவை என்று அங்கலாய்க்கின்றோம்
உண்மை தான்

இவைகள் சிறிய கோடுக்கு ஒப்பாகும்

அதன் பக்கத்தில்
" திருவடி என்ற பெரிய கோடு கிழித்தால் "
இவைகள் யாவும்
சூரியன் முன் பனி போல் விலகி விடும்
வினைகள் யாவும் ஒதுங்கி வழி விடும்
மலங்கள் நசித்துப் போகும்

தலைவன் கட்டளைக்கு
அடி பணியும் தொண்டர்கள் போல்
இவைகள் யாவும்
நம் முன் நிற்காது ஒளிந்து கொள்ளும்
அதன் ராஜ்ஜியம் பூஜ்ஜியம் ஆகிவிடும்

நாம் பற்ற வேண்டியது திருவடி
நாம் சிரசில் சூட வேண்டியது திருவடிக் கிரீடம்
சூடினால்
ஆன்மாவாகிய நாம் தான் அரசன்
உடலாகிய அஸ்தினாபுர நாடு
நம் ஆட்சியின் கீழ்

உடல் நம் சொற்படி நடக்கும்
உடல் நம் கட்டளைக்கு அடி பணியும்


வெங்கடேஷ்








No comments:

Post a Comment