Pages

Saturday, June 14, 2014

[vallalargroups:5474] இதுவும் அதுவும் ஒன்று

இதுவும் அதுவும் ஒன்று

1. காண்டீபமும் கோதண்டமும்

அழகு முருகன் கையலங்கரித்த சக்திவேலும்
அர்ஜுன் வளைத்த காண்டீபமும்
ஸ்ரீராமன் கையேந்திய கோதண்டமும் ஒன்றே
அது எல்லா தீய சக்திகளையும் இருள் குணங்களையும்
அழிக்கவல்ல அறிவாகிய " பிரணவம் "
 
2. காண்டவதகனமும் இலங்காதகனமும்

பாரதப் போருக்கு முன்
அர்ஜுன் காண்டவ வனத்தை
தீக்கிரையாக்கினான் என்பதும்

அனுமன் இலங்கையை எரித்தான் என்பதும்

"கண்"ணகி மதுரை எரித்தாள் என்பதும் ஒன்றே

அது அஞ்ஞானமாகிய
இருள் காட்டை அழித்ததைக் குறிக்கும்
 
3. சூரசம்ஹாரமும் திரிபுரதகனமும்
அழகு முருகன்
ஆனைமுகாசுரன் பதுமாசுரன் சிம்மமுகாசுரன்
சம்ஹாரம் செய்தது என்பதும்

கங்கை தரித்தோன் கண்ணுதல் திறந்து
திரிபுரதை எரித்தான் என்பதும் ஒன்றே

அது ஜீவனை பந்தித்திருக்கும் மும்மலமாம்
மாயை - கன்மம் - ஆணவ அழிவைக் குறிக்கும்

 
இந்த மும்மலங்களையே வள்ளலார் " திரைகளாக " வடலூரில் காட்டியிருக்கின்றார்


வெங்கடேஷ்













No comments:

Post a Comment