Pages

Tuesday, June 3, 2014

[vallalargroups:5462] ஒழிவில் ஒடுக்கம் - பாகம் 5

ஒழிவில் ஒடுக்கம் - பாகம் 5

1. ஆடை கழற்றி
ஆணும் பெண்ணும் கூடுவது
உலக வழக்கு - உலக இயற்கை

இது புறச் செயல் - அனுபவம்

ஜீவனுக்கு 36 தத்துவங்களே ஆடைகள்
அதை கழற்றினால் தான்
ஆன்மாவுடன் கலக்க முடியும்
இது அகத்தில் ஆற்றும் செயல் - அனுபவம்

புற அனுபவம்
எல்லோர்க்கும் கிட்டும்
எல்லோரும் அனுபவிப்பர்

அக அனுபவம்
எல்லோர்க்கும் கிட்டுவது எளிதல்ல
ஏனெனில் - அது ஏறா நிலை
சாமானியரால் ஆற்ற முடியா செயல்


2. ஒரு மனைவி
தன் கணவனுக்கு மட்டும்
தன் அழகை
வெளிபடுத்தி கூடுவாள்
இது உலக வழக்கு - உலக இயற்கை

அது போல்
பக்குவப்பட்ட ஆன்மாவிடமே
சத்தினிபாதம் விளங்கும் ஆன்மாவிடமே
அருள் தன்னை வெளிப்படுத்தி
தன்னை உணர்த்தி
ஆன்மாவிற்கு வழி காட்டி
சிவத்திடம் கலக்க வைக்கும்

இது அகச் செயல் - அனுபவம்

புறத்திலே தெரியும் பொருட்களும்
விளங்கும் செயல்களும்
அகத்தின் வெளிப்பாடு அல்லாது வேறிலை


தான் அகத்திலே
36 தத்துவங்களைக் கடந்ததையே
36 தத்துவங்களைக் கழற்றியதையே
புறத்திலே காட்ட
நிர்வாணமாக ஆடையின்றி நிற்கின்றார்
பாஹுபலி - சிரவணபெலகொலாவில்


2. தற்போத வொழிவு

ஏற முடியாததில் ஏறிவிடலாம்
அடைய முடியாததை அடைந்துவிடலாம்
தொட முடியாததை தொட்டுவிடலாம்
காணமுடியாததை கண்டுவிடலாம்


எல்லாம் ஒன்றில் அடங்கிய சூட்சுமம்
தற்போதம்


வெங்கடேஷ்


No comments:

Post a Comment