Pages

Friday, May 30, 2014

[vallalargroups:5460] தூங்காத தூக்கம் - யோக நித்திரை

தூங்காத தூக்கம் - யோக நித்திரை :

சித்தர் பாடல் :

ஆங்காரத்தை உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்கமலே தூங்கி சுகம் பெறுவது எக்காலம் ??

பெருமாள் ஸ்ரீ ரங்கத்தில் யோக நித்திரை செய்து கொண்டிருப்பதாக கூறுவர்

நாம் தினமும் இரவில் தூங்குகின்றோம் - அது என்ன - எப்படி என்று தெரியும் ??

அதென்ன தூங்காத தூக்கம் ??

தூங்காமலே தூங்குவது என்பது தான் நாம் செய்ய வேண்டிய சாதனை - பயிற்சி

நாம் தூங்கும் போது, பொறி புலன்கள், உணர்வு , உடல் எல்லாம் அடங்கி போகின்றது - அது செத்த சவத்திற்கு சமம் - அதனால் தான் தூங்குவது போலும் சாக்காடு ( மரணம் ) என்கிற்து குறள்

தூங்காமலே தூங்குவது என்பது - தூக்கம் போல் எல்லாம் நடக்கும் - ஆனால் , உணர்வு மட்டும் தூங்காமல் , விழிப்பு நிலையில் இருக்கும் - அந்நிலையில் - பஞ்ச இந்திரியங்களும் ஒன்றாகக் கூடி இருக்கும் - அதனால் மனமானது அலைபாயாமல் இருக்கும் - அதனால் இந்த நிலையை - தூங்காத தூக்கம் என்கின்றனர் நம் யோகிகள்

மனம் செயலற்றுப் போவதால் , அந்நிலையில் மிகவும் சுகமாக இருப்பதனால், தூங்காமலே தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என்று கேட்கின்றனர் ??




வெங்கடேஷ்





No comments:

Post a Comment