Pages

Tuesday, May 13, 2014

[vallalargroups:5433] ozhivil odukkam - part 4

ஒழிவில் ஒடுக்கம் - பாகம் 4

சரியை கழற்றி - கிரியை கழற்றி - தொடர்ச்சி

1. தினமும் காலை மாலை குளிப்பார்
பூஜை புனஸ்காரம் செய்வார்
இறைவனுக்கு நைவேத்தியம்
படைத்த பின்பே உண்பார்
மந்திரம் ஜெபிப்பார்
நன்னாளில் உபவாசம் இருப்பார்
வேத சாத்திரம் பாராயணம் செய்வார்

அனுதினமும் இதையே மாற்றமின்றி செய்பவர்
தோல் ஓடு மட்டுமே உண்டு
பழத்தை புறந்தள்ளுபவர் ஒப்பார்

கலியாணச் சடங்கை மட்டும் செய்துவிட்டு
சாந்தி முஹூர்த்தத்திற்கு செல்லாதவர் ஒப்பார்

இவர் சரியையாளர்

2. சரியை கிரியை புறந்தள்ளி
தன்னை அறியும் யோகத்தில் புகுந்து
தியான சமாதிகள் புரிந்து
" அஹம் பிரம்மாஸ்மி " எனத் தெளிந்து
" நான் பிரம்மம் " என கர்விப்பான் யோகி


தன்முனைப்பால்
ஆணும் பெண்ணும் நேர் நின்று
" நாம் இருவரும் சமம் " என்று கூறுவதில்
யாருக்கும் இன்பம் இல்லை என்பது போல்
நானும் பிரம்மமும் சமம் என்று
போதம் அடங்காது கூறுவதில்
யோகிக்கு என்ன லாபம் ?? என்ன இன்பம் ????

இவன் பசுவின் மடியில் இருந்தும்
பாலை உண்ணாது
இரத்தம் உறிஞ்சும் உண்ணிகள் ஒப்பார்

 
3 ஆணும் பெண்ணும் சங்கமித்தபோது
ஆனந்தம் உண்டானாற்போல்

தன் போதம் முழுதும் ஒழித்து
சிவத்துள் அடங்கியிருந்து கலந்து
ஆனந்தம் அனுபவிப்பவனே மெய்ஞ்ஞானி - சுத்த சன்மார்க்கி

இவரே
தோலைத் தள்ளி பழத்தை உண்பவர்
இரத்தம் விடுத்து பால் உண்பவர்
மெய்யின்பத்தை மெய்யாகவே
மெய்யில் அனுபவிக்கும் மெய்ஞ்ஞானி



வெங்கடேஷ்




No comments:

Post a Comment