ஜீவனும் பசுவும்
" பசுவிற்கு நிகரான பிராணி இல்லை "
" கோமாத பூஜைக்கு மேல் பூஜை இல்லை "
" பசுவதைக்கு இணையான பாவம் இல்லை "
என்று பசுவிற்கு ஏற்றம் கொடுக்கின்றோம்
ஏன் என்று கேட்டால்
வேதங்கள் கூறுகின்றன என்கின்றார்
சூக்குமமாக சொன்னப் பொருளை
உண்மை அறியாமல் ஏதேதோ செய்கின்றோம்
சான்றோர் உரைத்த பசு
" உலகில் நடமாடும் கால்நடை அல்ல "
தேகத்தில் உலாவிடும் ஜீவன் "
" ஜீவனுக்கு மும்மல பந்தம் உண்டு"
இதை காட்டவே
புறத்திலே நடமாடும் பசுவிற்கு
மூக்கணாங்கயிறு கட்டிக் காட்டினர்
ஜீவன் வாழும் குடிலாம் தேகத்தில்
" எல்லா தெய்வங்களும் உள "
" எல்லா பர செல்வங்களும் உள "
என்று சூக்குமப் பொருளைக் கூறினால்
கால்நடைப் படத்தை வரைந்து
அதில் சகல தெய்வங்களை பொருத்தி வணங்குகின்றோம்
நம்மை வழிபடத் தெரியாமல்
நம் தேகத்தைப் போற்றாமலே
ஊன் உடம்பில் இறைவன் இருப்பதை அறியாமலே
" எல்லோரும் சமம் "
இறை முன்பு என்றிருக்க
ஒரு கால்நடை உயிருக்கு மட்டும்
இவ்வளவு ஏற்றம் கொடுப்பாரோ ஐயன் ???
BG Venkatesh
No comments:
Post a Comment