Here தக்க சற்குரு is only our Ramalinga Swamigal Only (இராமலிங்க சுவாமிகள் )
No Need to search Outside...2014-04-29 12:10 GMT+05:30 <venkatesh@precot.com>:
உண்மை பாரதம்
மஹாபாரதம் - சன்மார்க்க விளக்கம்
1.கண்ணன் பிறப்பும் இரகசியமும்
கண்ணன் என்றவுடன்
கோகுலத்தில் லீலை புரிந்தவனையும்
பிருந்தாவனத்தில் குழல் ஊதியவனையும்
நினைவு கொள்கின்றோம்
இந்த மாயன் மணிவண்ணன் பற்றி
சில உண்மைகள் சொல்ல விழைந்தனன்
கண்ணன் " எட்டாவது " குழந்தை
" அஷ்டமி " திதியில் பிறந்தான்
எட்டு அகரத்தைக் குறிக்கும்
இரு முட்டைகள் சேர்த்தால் எட்டாகும்
இது ஒரு இரகசியம்.
தக்க சற்குரு மூலம் தெரிந்து கொள்ளவும்
கண்ணன் ஆண்ட நகரம் "துவாரகை"
அது கடல் நடுவே அமைக்கப்பட்டிருந்தது
பெயர் இரகசியமும் ஊர் இரகசியமும்
தக்க சற்குரு மூலம் தெரிந்து கொள்ளவும்
உடம்பினில் மேலேறும் மூச்சுக் காற்று
" ஹம் " என்ற ஓசையுடன் செல்லும்
" சம் " என்ற ஓசையுடன்
உடலை விட்டு வெளியேறும்
இந்த " ஹம்சத்தையே " " கம்சன் " என்று உருவகித்தனர்.
இடை பிங்கலை நாடிகளில்
மூச்சை செலுத்தாமல்
" இடை " நாடியாம் " சுழிமுனையில் "
செலுத்தினான் என்பதையே
கண்ணன் கம்சனை கொன்றான் என்பது.
ஹம்சத்தைக் கடந்து சென்றதையே
கம்சனைக் கொன்றது என்று புனைந்தனர்
மூச்சை இடை நாடியில் செலுத்தியதால்
" இடையன் " என்று அழைத்தனர்.
கண்ணன் குழல் ஊதினான் என்றும்
அதைக் கேட்டு
கோபியர் மயங்கி
தங்களை மறந்து இருந்தனர் என்பது,
குழல் என்பது சுழிமுனை நாடி
மூச்சினை சுழிமுனை நாடியில் செலுத்தி
நாதம் உண்டாக்கினான் என்று கொள்ள வேண்டும்
2. மஹாபாரதப் போர்:
பஞ்ச பாண்டவர்கள் என்பது
பஞ்ச இந்திரியங்கள் என்று கொள்ள வேண்டும்
தேவ சத்திகள் என்று கொள்ள வேண்டும்
திரௌபதி என்பது ஜீவன்.
ஜீவன் பஞ்ச இந்திரியங்களுடன்
எப்பொழுதும் தொடர்பு கொண்டு
உலக இன்பம் அனுபவிக்கின்றது
" ஒருத்திக்கு ஐவர் " என்றதும் இதனாலே
இந்திரியங்கள் சேர்ந்து ஆட்சி செய்வதால்
பாண்டவர்கள் ஆண்ட நாட்டை
"இந்திரப்பிரஸ்தம் " என்று பெயரிட்டனர்.
"இந்திரப்பிரஸ்தம் " என்பது
இந்திரியங்களின் இருப்பிடம் ஆன " சிரசு "
ஜீவனான திரௌபதி
இந்திரப்பிரஸ்தத்தின் மஹாரணி
திருதராஷ்டிரன் என்பது மனம்
அவனுக்கு எதுவும் தெரியாது என்பதால்
அவன் குருடாகச் சித்தரிக்கப் பட்டான்
அவனுக்கு அனத்தையும் அறிவிப்பது சஞ்சயன்
சஞ்சயன் என்பது தெளிவு
மனத்தின் கண்ணுள்ள
ஆசை, காமம் , குரோதம், துவேஷங்களையே
திருதராஷ்டிரனின் நூறு புதல்வர்களாகச் சித்தரித்தனர்.
மனம் உடம்பை ஆள்வதால்
திருதராஷ்டிரன் ஆண்ட நாட்டிற்கு
" அஸ்தினாபுரம் " என்றுப் பெயரிட்டனர்
மனம் எப்பொழுதும்
ஆசை, காமம் வயப்பட்டிருப்பதால்
ஒருதலைப் பட்சமாக துரியோதனன் பக்கமாகவே
நடந்து கொண்டான் என்றும்
அறிவு பூர்வமாக பாண்டவர்கள் பக்கம்
இருக்கவில்லை என்றுக் காட்டினர்
துரியோதனன் சூதில் வென்றான் என்பது
காமக் குரோதங்களின் வலிமை பெருகி
இந்திரியச் சக்திகளை வென்று அடிமை செய்ததைக் குறிக்கும்
பாரதப் போர் என்பது
"இந்திரப்பிரஸ்தத்திற்கும் அஸ்தினாபுரத்திற்கும்
சிரசிலுள்ள இந்திரியச் சக்திகளுக்கும்
மனதிலுள்ள இருள் குணங்களுக்கும்
இடையே ஆன போராகும்
இதனையே மஹாபரதமாகச் சித்தரித்தனர்
அறிவில் சிறந்த சான்றோர்
பாண்டவர்கள் கைவிட்ட பிறகு
திரௌபதி துகில் உரியப்பட
அவள் கண்ணனை சரணடைய
துகில் நீண்டு வளர்ந்து
அவளைக் காப்பாற்றியது என்பது
ஜீவன் பஞ்ச இந்திரியங்களையும்
விட்டுப் பிரிந்து
தனித்து நின்று
" தற்போதம்" இழந்து
"ஆன்மாவே கதி " என்று சரணடைய
ஆன்மா ஜீவனை ஆட்கொண்டது ஆகும்
12 வருட வனவாசம் என்பது
இந்திரியச் சக்திகள் உலக இன்பங்களில்
ஈடுபடாமல் தவம் இயற்றின என்பதாகும்
பஞ்ச இந்திரியச் சத்திகளும்
சுழிமுனை நாடியில் வாசம் செய்ததையே
ஒரு வருட அஞ்ஞாத வாசமாகச் சித்தரித்தனர்
அர்ஜுன் அலிவேடம் பூண்டான் என்பது
அக்கினி அலி நாடியாம் சுழிமுனையில் வாசம் செய்ததையேக் குறிக்கும்
அக்கினி பிரணவ வில்லை வளைத்ததும்
அதில் விளைந்த ஓசையைக் கேட்டு
எல்லா தீய சத்திகளும் பயந்தன என்பதையும்
அதிலிருந்து கிளம்பிய ஒளி
எல்லா தீய சத்திகளும் ஒழித்தது என்பதையே
அர்ஜுன் காண்டீபத்தை வளைத்தான் என்றும்
அதிலிருந்து கிளம்பிய நாதத்தைக் கேட்டு
துரியன் உள்ளிட்டோர் நடுங்கினர் என்றும்
காண்டீபத்திலிருந்து புறப்பட்ட சரங்கள் மூலம்
அவர்களை அழித்தான் என்றுக் காட்டினர்
மூலாக்கினி சுழிமுனையில் மேலேறி வந்ததையே
திருஷ்டத்யும்னன் துரோணரைக் கொன்றான் என்பது
பஞ்ச இந்திரியங்களும்
ஆன்மா துணைக் கொண்டு
மனத்தின் கண்ணுள்ள
எல்லா இருள் குணங்களையும் வென்றன என்பதையே
பாமரர்களுக்கு புரிய வைக்க
கதை வடிவமாக
ஒவ்வொரு தத்துவமாக உருவகப் படுத்தினர்
நாம் வெறும் கதையாக மட்டும் பார்த்துவிட்டு
உட்கருத்தை காற்றில் பறக்க விட்டிருக்கின்றோம்
3. அசுவமேத யாகம்:
இந்திரப்பிரஸ்தத்தை மீட்ட பிறகு
பஞ்ச பாண்டவர்கள்
இந்த யாகம் செய்தனர் என்பது
எல்லா இருள் குணங்களையும் ஒழித்தப் பிறகு
உடல் முழுமையும்
தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததைக் குறிக்கும்
முற்றிற்று
BG Venkatesh
--
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment