Pages

Saturday, April 26, 2014

[vallalargroups:5413] Thiru Neeru திருநீறு - சில விளக்கம்


திருநீறு - சில விளக்கம்
"நீறில்லா நெற்றி பாழ் " என்பது சான்றோர் வாக்கு

நாம் எல்லோரும் நெற்றியில் மூன்று பட்டை நீறு அணிவது வழக்கம்

குறைந்த பட்சம் - நெற்றிப் பொட்டில் , சின்னதாக நீறு அணிவோம்

ஏன் என்று வினவினால் -

1 . ஒரு நாள் நாமும் இது மாதிரி நீறாய் போவோம் என்பதை நினைவு படுத்தத் தான் என்று கூறுவர் சிலர்


2. பலர் கூறும் காரணம் - இது அணிவதால் , நெற்றியில் " நீர் சேராது - " ஜலதோஷம் - சளி" அண்டாது என்றும் கூறுவர்

இரண்டாவதாகக் கூறும் காரணம் அறிவியல் அடிப்படை - அது எல்லோரும் அறிந்த ஒன்று.



உண்மையான காரணம் :
திருநீறு எப்படி செய்யப் படுகின்றது ??

பசுவின் சாணத்தை ( மலம் ) எரித்து அதிலிருந்து நீறு தயாரிக்கப்படுகின்றது

அது போலவே , பசுக்களாகிய ஜீவர்கள் நாமும் , நம் ஆன்மாவை மறைத்துக் கொண்டிருக்கின்ற மலங்களை எரித்தால், அதிலிருந்து , சிறு சிறு வெண்மைப் பொடிகள் உண்டாகி, சாதகன் உடம்பில் வீசும். அதுவே அருள் என்னும் வெண்ணீற்றுப் பொடி - அதுவே அருட்கலை- அது ஆன்ம நிலையிலிருந்து வருவதால், அதனை - " ஆலவாயன் நீறு" என்று திருஞான சம்பந்தர் பாடுகின்றார் - பெருமைப் படுத்துகின்றார்.

அது எல்லாம் வல்லது - நிறைய பெருமைகள் உடையது என்பதால் - அதற்கு ஒரு தனிப் பதிகமே பாடி - " வெண்ணீற்றுப் பதிகம் " பாடி பெருமைச் சேர்க்கின்றார் சம்பந்தர் பெருமான்.

நீறு அணிவது உடல் ஆரோக்கியத்துக்கு என்பது முதன்மையான காரணம் அன்று - அது இரண்டாம் பட்சமே - அது எல்லாம் வெளிப்படையான காரணம் - physical level and plane )


உண்மையான காரணமாகிய - மும்மலக் கழிவு - ஆன்ம தரிசனமே - முதன்மைக் காரணமாகும் - இதனை "அடையாளமாகக் " காட்ட - " மூன்று பட்டை" நீறு அணியச் சொன்னர் நம் முன்னோர். இது சூக்கும நிலை = subtle plane and level

சாதாரண நீறாக இருந்திருந்தால் , அதற்கு ஏன் " ஆலவாயன் நீறு " என்று கூற வேண்டும் ?? ஆன்ம நிலையில் ( ஆல வாய் - மதுரை - 12வது நிலை - துவாதசாந்தம் ) இருந்து விழுவதால் , அவ்வாறு பெயரிட்டு அழைக்கின்றார்
சம்பந்தர் பெருமான்.




வெங்கடேஷ்

No comments:

Post a Comment