Pages

Monday, April 21, 2014

[vallalargroups:5380] suththa sanmargam vs religion - part 2

சுத்த சன்மார்க்கம் : சமய மதங்களும் ஓர் ஆய்வு - பாகம் 2

இந்த கட்டுரையில் எங்கெல்லாம் மேற்கூறிய சமய மதங்கள் சுத்த சன்மார்க்கத்துடன் ஒத்துப் போகின்றன என்று பார்ர்க்கலாம்


1. ஜோதி தரிசனம் :

சுத்த சன்மார்க்கம் : சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்கின்ற நேரத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப் படுகின்றது

சமய மதங்கள் : சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்கின்ற நேரத்தை வந்தனம் செய்து ( வாழ்த்தி ) வணங்குகின்றார் பிராமணர்கள் - இதனை "சந்தியா வந்தனம் " என்று குறிப்பிடுகின்றார்கள்

உட்பொருள் : சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்கின்ற இடத்தில் தெய்வம் இருக்கின்றது என்று பொருள்


2. ஆன்ம தரிசனம் :

சுத்த சன்மார்க்கம் : ஏழு திரை நீக்கினால் ஆன்ம ஒளியின் தரிசனம் கிட்டும் என்கின்றது

சமய மதங்கள் :

சைவம் : திரிபுர தகனமாக - மாயை , கன்மம் மற்றும் ஆணவ மலங்களின் அழிவாக சித்தரிக்கிறது

கௌரவர்களின் அழிவாக சித்தரிக்கிறது

கௌமாரம் - சூரசம்ஹாரமாக - பத்மாசுரனை வதம் செய்ததாக சித்தரிக்கிறது

உட்பொருள் : மலங்கள் தான் திரைகளாகவும் , திரிபுரமாகவும் , சூரனாகவும் சித்தரிக்கப்பட்டிருகிறது




3. மும்மலக் கழிவு :

சுத்த சன்மார்க்கம் : சுத்த உஷ்ணத்தினால் அல்லாது, வேறு எதனாலும் திரைகளை நீக்க முடியாது என்கின்றது

சமய மதங்கள் :

சைவம் : சிவன் கண்ணுதல் ( நெற்றிக்கண்) திறந்து மும்மலத்தை அழித்ததாக சித்தரிக்கிறது

கௌமாரம் : முருகன் வேல் கொண்டு சூரனை சூரசம்ஹாரம் செய்ததாகச் சித்தரிக்கிறது

உட்பொருள் : சுத்த உஷ்ணம், நெற்றிக்கண், வேல் - ஒன்றைக் குறிக்கின்ற பொருள் - அது ஆன்மா ஆகும்


4. திருவடி :

சுத்த சன்மார்க்கம் : திருவடியை தன் சிரசில் சூடினேன் என்று வள்ளலார் கூறுகின்றார்

சைவம் : தாள்தலை என்று கூறுகின்றது - பொருள் - தாளை தலையில் சூட வேண்டும் என்று பொருள் பட கூறுகின்றது

வைணவம் : திருவடி சிரசில் இருக்கின்றது என்பதை அடையாளமாக காட்ட " சடாரியின் மேல் இரு தாள்கள் " வைத்துக் காட்டி இருக்கின்றார்கள்


5. ஆகாய கங்கை :

சுத்த சன்மார்க்கம் : வள்ளலார் இதனை அருளமுதம் , ஞானமுதம், மேலைப்பாற்சிவகங்கை என்றும் கூறுகின்றார்


வைணவம் : மூன்று உளுந்து பிராமணமுள்ள சுத்த கங்கையை புசிக்க வேண்டும் என்பதை அடையாளமாகக் காட்ட பெருமாள் கோவில்களில் மூன்று முறை தீர்த்தம் கொடுக்கின்றார்கள்.

உட்பொருள் : தீர்த்தம் என்பது அமுதம்



6. ஆன்ம நிலை :

சுத்த சன்மார்க்கம் : இரண்டும் ஒன்று என்கின்ற பெரிய நிலை என்றும், ஒருமை என்றும், ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை என்றெல்லாம் வள்ளலார் கூறுகின்றார்

சமய மதங்கள் :

நடுவு நிலைமை , இடை நிலை என்றும் , தராசு என்றும் கூறுகின்றார்கள்

வேதம் : ஸ்திதப் பிரக்ஞன் என்று கூறுகின்றது

வள்ளுவர் : ஒத்த விடம் என்று கூறுகின்றார்



பாகம் மூன்றில் ,சுத்த சன்மர்க்கம் சமய மதங்களுடன் எந்தெந்த விதங்களில் வேறு பட்டும், உயர்ந்தும் இருக்கின்றது என்று பார்ர்க்கலாம்


BG Venkatesh

No comments:

Post a Comment