Pages

Friday, April 11, 2014

[vallalargroups:5366] சுத்த சன்மார்க்கத்தில் "நாதம்" ? - Please give your answers - மு.பா


 

சுத்த சன்மார்க்கம் என்பது மூன்று  படிகள் கொண்டது. அதாவது சமய சன்மார்க்கம்,மத சன்மார்க்கம், சுத்த சன்மார்க்கம்.

 சமய சன்மார்க்கம் என்பது ஆறு சத்துவ குணங்களை அடைவது. கொல்லாமை,பொறுமை,சாந்தம்,அடக்கம்,இந்திரிய நிக்கிரகம் ஆகியவை. மத சன்மார்க்கம் என்பது நிர்குண லட்சியம் கொண்டது. அடுத்தது சுத்த சன்மார்க்கம். இது இரண்டு பிரிவுகள் ஆகும்.சாதகர்கள், சாத்தியர்கள். சாதகர்கள் சாதனை செய்வார்கள்.தக்க அசாரியனைக் கொண்டு நெற்றிக் கண்ணைத் திறந்துகொள்ளவேண்டும். பின்னர் மனதை எந்தவித ஆபாசத்திலும் செலுத்தாமல் புருவ மத்தியில் நிற்கச் செய்யவேண்டும். அவ்வாறு மனதை நிறுத்தும் முயற்சியில் இருந்தால் நெற்றி நடுவே ஓர் அசைவு தோன்றும். அங்கேயே ஊன்றி நின்றால் மெல்லியதாக நாதம் கேட்கும். இதை வள்ளலாரின் கீர்த்தனைப் பாடலில் உள்ள "வானத்தின்மீது மயில் ஆடக் கண்டேன் மயில் குயில் ஆச்சுதடி" என்ற வரிகளைக் காண்க. அகவலிலும் வள்ளலார் தவ அனுபவத்தை வரிசைப்படுத்தி உள்ளார்.

அறிபவை எல்லாம் அறிவித்து என்னுள்ளே பிறிவற  விளங்கும் பெரிய சற்குருவே.....வரி 1056. இது குருவின்மூலம் தவம் செய் முறையை அறிவது.

கேட்பவை எல்லாம் கேட்பித்து என்னுள்ளே வேட்கையின் விளங்கும் விமல சற்குருவே......வரி 1058...இதுதான் நாத அனுபவம்.

காண்பவை எல்லாம் காட்டுவித்து எனக்கே மாண்பதம் அளித்து வயங்கு சற்குருவே.....1060.  இது ஒளியைக் காணும் அனுபவம்.

செய்பவை எல்லாம் செய்வித்து எனக்கே உய்பவை அளித்தெனுள் ஓங்கு
ஓங்கு சற்குருவே..... வரி 1062..... இது தேக மாற்றத்தைக் குறிப்பது.

உண்பவை  எல்லாம் உண்ணுவித்து என்னுள் பண்பினில் விளங்கும் பரம சற்குருவே.......வரி 1064   இது அமுதம் உண்ணும் அனுபவம்,

சாகாக் கல்வியின் தரமெலாம் கற்பித்து ஏகாக் கரப்பொருள் ஈந்த சற்குருவே.   வரி  1066   இது மரணமிலாப் பெருவாழ்வு.

வள்ளலார் தரும் தவ விளக்கம்: இது பலப் பலப் பாடல்களில் ஊர்சிதம் செய்யப்படுகிறது. உதாரணமாக நான்காம் திருமுறை "சுற்றது மற்றவ்வழி மாசூதது" என்ற பாடலைப் பார்க்கலாம். நாதம் என்பது தவத்தின் ஆரம்பத்திலே சிறியதாகத் தோன்றிப் பின்னர் பரநாதம் என்னும் நாதாந்த மாக அனுபவப்படும். இதை அனுபவமாலைப் பாடலில் "அரசு வருகின்றதென்று அறைகின்றேன்  என்று ஆரம்பிக்கும் பாடலில் முரசு, சங்கு ,வீணை முதல் நாத ஒலி மிகவும் முழங்குகின்ற" என்று சொல்லப்பட்டுள்ளது.இதைத் தச நாதம் என்றும் சொல்வார்கள். இது சன்மார்கத்தில் தவம் என்ற சாதனை செய்வோருக்கு ஏற்படக்கூடிய அனுபவம்.  இவ்வாறு சாதனை செய்து சாதகர்கள் சாத்தியர்கள் ஆனால் அவர்கள் கேட்டல், சிந்தித்தல், தெளிதல்,நிஷ்டை கூடல்,ஆகியவை கடந்து ஆரூடராக நிற்பார்கள் என்கிறார் வள்ளலார். 

நன்றி வந்தனம்.
முபா

.


2014-04-08 13:05 GMT+05:30 Maheshkanna <maheshkanna007@gmail.com>:

நாதம் .. அதி சூக்கும நாடி ஒன்று பிரம்மம் முதல் சகஸ்கிரதளம் தொட்டு தொங்கிக்கொண்டு இருக்கும்.. இதனை நல்ல ஆசாரியார்களால் மட்டுமே இயக்கிவைத்து காட்டுவித்து 
அருளமுடியும் அன்றி வேறெவ்வகையிலும்  இயலாத காரியம் ஆகும் . இதுவே நாதம் என்று சொல்லப்படுவதும் ஆகும். 




2014-04-08 11:53 GMT+05:30 Vallalar Groups <vallalargroups@gmail.com>:

சுத்த சன்மார்க்கத்தில் "நாதம்"  எவ்வாறு கையாளப்படுகின்றது?

அனைவரும் தங்கள் கருத்தை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகின்றது. 



web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி




--
Regards
Mk


No comments:

Post a Comment