கையேந்தி நிற்கிறோம்!!!
வான்வெளி உமது சொந்தமென்று
வாழும் உயிர்களை வாட்டுகிறாயோ?
போயிங் 777 எம்.எச் 370 விமானம்
காணாமல் போனதா? கேட்பாறற்று போனதா?
இறைவா! எங்களை ஆண்டு கொண்டவனே!
உன் பொறுமைக்கு அளவும் உண்டோ!
உன் தயவுக்கு தடையும் உண்டோ!
தயை கொண்டு பாருமையா
தாங்கி நிற்பவர் நீரல்லவா!
யார் தவறு செய்தாலும்
தண்டனை உண்டென்றால்
உம்மால் தவறு நேர்ந்ததென்றால்
நாங்கள் எங்கே செல்வோம்?
யாரிடம் கையேந்தி நிற்போம்?
239 பயணிகளும் உன் குழந்தையல்லவா?
உதவிக்காக காத்திருக்கும் ஜீவனல்லவா?
எங்களை கைவிடமாட்டாய் என்று
உறுதி கூறுவாயா? இல்லை!
உயிர்பலி ஆகிவிடுவோமா?
ஏதும் அறியலையே! இன்று
ஏங்கி நிற்கிறோம் உமது
அன்பே வடிவான அருட்பெருஞ்ஜோதியின்
தனிப்பெருங்கருணையான வாழ்வு வேண்டி .......
அன்பர் வடிவேலு (மலேசியா)
No comments:
Post a Comment