19. மாற்றனுக்கு மெட்டா மலர்க்கழலோய் நீயென்னைக் கூற்றனுக்குக் காட்டிக் கொடுக்கற்க!
20. கடற் புவியில் நானின்னும் வன்பிறவிப் பந்தக் கடலழுந்தப் பண்ணற்க!
21. முந்தை நெறி நின்றேயுன் பொற்றாள் நினையாதார் பாழ்மனையில் சென்றே உடலோம்பச் செய்யற்க!
22. நன்றே நின்றோங்கு நெறியோர் உளத்தமர்ந்தோய் என்றன்னைத் தீங்கு நெறியில் செலுத்தற்க!
23. வாழி யெனத்தான் வழுத்தினும் என் சொற்கடங்கா ஏழைமனத்தால் இளைக்கின்றேன்.
24. பொல்லாக் குரங்கெனவே பொய்யுலகக் காடேறு நெஞ்சாற் கலங்குகின்றேன்.
25. மாயையெனும் உட்பகையார் காமமெனும் கள் அறியாதுண்டு கவல்கின்றேன்.
26. நின்தாள் கமலங்களை வழுத்தா மண்ணனையார் பாற்போய் மயங்குகின்றேன்.
27. துன்பக் கவலைக் கடல் வீழ்ந்தே ஆதரவொன்றின்றி அலைகின்றேன்.
28. அடியார் தமைக்கண்டு நாத்திகஞ் சொல்வார்க்கு நடுங்குகின்றேன்.
29. பாத்துண்டே உய்வ தறியா உளத்தினே னுய்யும்வகை செய்வதறியேன் திகைக்கின்றேன்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment