Pages

Thursday, January 9, 2014

[vallalargroups:5275] ஆன்மாவின் “சிறுமையை விசாரிக்கும்” வள்ளலாரின் வாசகங்கள்

 

 

வள்ளலாரின் பேருபதேசம்  "நமது சிறுமையை விசாரித்தல்" :


1.    எழுவினும் வலிய மனத்தினேன்.

2.    மலஞ்சார் ஈயினும், நாயினும் இழிந்தேன்.

3.    புழுவினும் சிறியேன்.

4.    பொய்விழைந் துழல்வேன்.

5.    புன்மையேன் .

6.    புலைத் தொழிற்கடையேன்.

7.    வழுவினும் பெரியேன்.

8.    மடத்தினும் பெரியேன்.

9.    மாண்பிலா வஞ்சக நெஞ்சக் குழுவினும் பெரியேன்.

10. அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென் கடவேனே...

11. கற்றமேலவர் தம் உறவினைக் கருதேன்.

12. கலகர் தம் உறவினிற் களித்தேன்.

13. உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன்.

14. உலகியற் போகமே உவந்தேன்.

15. செற்றமே விழையும் சிறுநெறி பிடித்தேன்.

16. தெய்வம் ஒன்றெனும் அறிவறியேன்.

17. குற்றமே உடையேன்.

18. அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென் கடவேனே...

19. கடுமையேன் .

20. வஞ்சக் கருத்தினேன்.

21. பொல்லாக் கல் மனக் குரங்கனேன் கடையேன்.

22. நெடுமைஆண் பனைபோல் நின்றவெற்றுடம்பேன் நீசனேன்.

23. பாசமே உடையேன்.

24. நடுமை ஒன்றறியேன்.

25. கெடுமையிற் கிளைத்த நச்சு மாமரம் எனக்கிளைத்தேன்.

26. கொடுமையே குறித்தேன்.

27. அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென் கடவேனே..

28. நிலத்திலும், பணத்தும், நீள்விழி மடவார் நெருக்கிலும் பெருக்கிய நினைப்பேன்.

29. புலத்திலும் புரைசேர் பொறியிலும் மனத்தைப் போக்கி வீண்போது போக்குறுவேன்.

30. நலத்தில் ஓர் அணுவும் நண்ணிலேன்.

31. கடைய நாயினுங் கடையனேன் நவையேன்.

32. குலத்திலும் கொடியேன்.

33. அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென் கடவேனே...

34. செடிமுடிந் தலையும் மனத்தினேன் .

35. துன்பச் செல்லினால்அரிப்புண்ட சிறியேன்.

36. அடிமுடி அறியும் ஆசை சற்றறியேன்.

37. அறிந்தவர் தங்களை அடையேன்.

38. படிமுடி வழித்துக் கடிகொளும் கடையர் பணத்திலும் கொடியனேன்.

39. வஞ்கக் கொடி முடிந்திடுவேன் .

40. அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென் கடவேனே..

41. அரங்கினிற் படைகொண்டு உயிர்க்கொலை புரியும் அறக்கடையவரினுங் கடையேன் .

42. இரங்கில் ஓர் சிறிதும் இரக்கம் உற்றறியேன்.

43. இயலுறு நாசியுட் கிளைத்த சிரங்கினிற் கொடியேன் .

44. சிவநெறி பிடியேன் .

45. சிறுநெறிச் சழக்கையே சிலுகுக் குரங்கெனப் பிடித்தேன் .

46. அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே...

47. வாட்டமே உடையார் தங்களைக் காணின் மனஞ்சிறிதிரக்கமுற் றறியேன் .

48. கோட்டமே உடையேன்.

49. கொலையனேன்.

50. புலையேன்.

51. கூற்றினும் கொடியனேன் .

52. மாயை ஆட்டமே புரிந்தேன்.

53. அறத்தொழில் புரியேன்.

54. அச்சமும் அவலமும் இயற்றும் கூட்டமே விழைந்தேன்.

55. அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.

56. கலைத்தொழில் அறியேன்.

57. கள்உணுங் கொடியேன்.

58. கறிக்குழல் நாயினும் கடையேன் .

59. விலைத்தொழில் உடையேன்.

60. மெய்எலாம் வாயாய் விளம்புறும் வீணனேன்.

61. அசுத்தப் புலைத்தொழில் புரிவேன்.

62. பொய்யனேன் .

63. சீற்றம் பொங்கிய மனத்தினேன் .

64. பொல்லாக் கொலைத்தொழில் புரிவேன்

65.  அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.

66. பணமிலார்க் கிடுக்கண் புரிந்துணுஞ் சோற்றுப் பணம்பறித் துழல்கின்ற படிறேன்.

67. எணமிலா தடுத்தார்க் குறுபெருந்தீமை இயற்றுவேன் .

68. எட்டியேஅனையேன்.

69. மணமிலா மலரிற் பூத்தனன்.

70. இருகால் மாடெனத் திரிந்துழல் கின்றேன்.

71. குணமிலாக் கொடியேன்.

72. அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே...

73. கடியரில் கடியேன்.

74. கடையரில் கடையேன்.

75. கள்வரில் கள்வனேன்.

76. காமப் பொடியரில் பொடியேன்.

77. புலையரில் புலையேன்.

78. பொய்யரில் பொய்யனேன்.

79. பொல்லாச் செடியரில் செடியேன்.

80. சினத்தரில் சினத்தேன்.

81. தீயரில் தீயனேன்.

82. பாபக் கொடியரில் கொடியேன்.

83. அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே



web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Post a Comment