Pages

Monday, December 30, 2013

[vallalargroups:5254] ஞானேந்திரியங்கள் - குறிப்புகள்


ஞானேந்திரியங்கள்
 சார்பு/பற்றுக்கோடு  
உறுப்பாகிய  இடம் 
அறியப்படும் புலன்
செவி
 சத்த தன்மாத்திரை  
  செவி
ஓசையாகிய புலனை
தோல்
 பரிச தன்மாத்திரை  
  தோல்
 ஊறு என்ற புலனை
கண் 
 உருவ( ரூபம்) தன்மாத்திரை  
  கண் 
 உருவம் என்ற விடயத்தை
நாக்கு
 இரத தன்மாத்திரை  
  நாக்கு
  சுவையாகிய புலனை
மூக்கு
 கந்த தன்மாத்திரை  
  மூக்கு
  மணமாகிய விடயத்தை
செவி : செவி என்னும் இந்திரியம் (உறுப்பாகிய காதில் நிற்கும்) சத்த
            தன்மாத்திரையைப்  பற்றி நின்று   ஓசையாகிய புலனை அறியும்.
தோல் : தோல் என்னும் இந்திரியம்(உறுப்பாகிய தோலில் நிற்கும்) பரிச
             தன்மாத்திரையைப்  பற்றி நின்று  ஊறு என்ற புலனை அறியும்.
கண்  : கண் என்னும் இந்திரியம் (உறுப்பாகிய கண்ணில் நிற்கும்)உருவ
             தன்மாத்திரையைப்   பற்றி நின்று   உருவம் என்ற விடயத்தை அறியும்.
நாக்கு :நாக்கு என்னும் இந்திரியம் (உறுப்பாகிய நாக்கில் நிற்கும்) இரத
            தன்மாத்திரையைப்   பற்றி நின்று  சுவையாகிய புலனை நன்றாக அறியும்
மூக்கு :  மூக்கு என்னும் இந்திரியம் (உறுப்பாகிய மூக்கில் நிற்கும்) கந்த
             தன்மாத்திரையைப்  பற்றி நின்று மணமாகிய விடயத்தை அறியும்.

No comments:

Post a Comment