Pages

Tuesday, December 24, 2013

[vallalargroups:5245] ஞான தீப விளக்கம்

ஸ்ரீமுக கார்த்திகை புனர்பூச நட்சத்திரத்தில் உள்ளிருந்த விளக்கை , திருமாளிகை புறத்தில் வைத்து "தடைபடாது ஆராதியுங்கள்". இந்தக் கதவை சாத்தி விடப் போகின்றோம். இனி கொஞ்ச காலம் எல்லாரும்,ஆண்டவர் இப்பொழுது தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் உங்களுடைய காலத்தை விணிற் கழிக்காமல்,

"நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந்து ஊற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே" 

            என்னும் 28 பாசுரங்கள் அடங்கிய பாடலிற் கண்டபடி, தெய்வ பாவனையை இந்த தீபத்தில் செய்யுங்கள்.நாம் இப்போது இந்த உடம்பில் இருக்கிறோம். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம்.   


Refer 28 songs with Audio : http://ninaindhuninaindhu.blogspot.com/


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

No comments:

Post a Comment