Pages

Thursday, December 19, 2013

[vallalargroups:5241] இந்திரிய ஒழுக்கம் - கன்மேந்திரியம்

வாக்கு என்ற இந்திரியம் (வாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) சத்த தன்மாத்திரையைப் பற்றி நின்று பேசுதலைச் செய்யும். பாதம் என்ற இந்திரியம் (கால் ஆகிய உறுப்பில் நிற்கும்) பரிச தன்மாத்திரையைப் பற்றி நின்று போக்குவரவு செய்யும். பாணி என்ற இந்திரியம் (கை ஆகிய உறுப்பில் நிற்கும்) உருவ தன்மாத்திரையைப் பற்றி நின்று ஏற்றல் இடுதலைச் செய்யும். பாயு என்ற இந்திரியம்(எருவாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) இரத தன்மாத்திரையைப் பற்றி நின்று மலம் முதலியவற்றை வெளிப்படுத்தும். உபத்தம் என்ற இந்திரியம்(கருவாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) கந்த தன்மாத்திரையைப் பற்றி நின்று விந்தினை வெளிப்படுத்தி இன்பம் செய்யும்.

இந்திரிய ஒழுக்கம்

1.    கன்மேந்திரியம்

2.    ஞானேந்திரியம்

இடம்  

இந்திரிய ஒழுக்கம்

 வாய்  

இன்சொல்லாடல்

 கால்  

பெரியோர்கள் எழுந்தருளியிருக்கும் இடங்களுக்குச் செல்லுதல்

 கை  

நன்முயற்சியில் கொடுத்தல் எடுத்தலாதி செய்தல் , மித ஆகாரம் செய்தல்

 எருவாய்  

   மலஜல உபாதிகளை அக்கிரமம் அதிக்கிரமம் இன்றிக் கிரமத்தில் நிற்கச் செய்வித்தல்
    கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால், ஒளஷதி வகைகளாலும், பெளதிக மூலங்களாலும் சரபேத, அஸ்தபரிச தந்திரத்தாலும், மூலாங்கப் பிரணவத் தியான சங்கற்பத்தாலும், தடை தவிர்த்துக் கொள்ளல். இன்றிக் கிரமத்தில் நிற்கச் செய்வித்தல்

 கருவாய்  

  மந்ததரம்; சுக்கிலத்தை அக்கிரம அதிகிரமத்தில் விடாது நிற்றல்
   தீவிரதம்; எவ்வகையிலும் சுக்கிலம் வெளிப்படாமல் நிறுத்தல்

கன்மேந்திரியங்கள்

 சார்பு/பற்றுக்கோடு  

"பூதத்தின்" கூறு

இடம்  

செய்யும் தொழில்  

வாக்கு  

 சத்த தன்மாத்திரை  

ஆகாயம்

 வாய்  

 பேசுதல்

பாதம்  

 பரிச தன்மாத்திரை  

காற்று

 கால்  

 போக்கு வரவு செய்தல்

பாணி  

 உருவ தன்மாத்திரை  

அக்னி

 கை  

 ஏற்றல் இடுதல்

பாயு  

 இரத தன்மாத்திரை  

நீர்

 எருவாய்  

 மலம் முதலியன வெளிப்படுத்தல்

உபத்தம்  

 கந்த தன்மாத்திரை  

மண் (பார்)

 கருவாய்  

 சுக்கில சோணிதங்களை வெளிப்படுத்தல்

வாக்கு என்ற இந்திரியம் (வாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) சத்த தன்மாத்திரையைப் பற்றி நின்று பேசுதலைச் செய்யும். பாதம் என்ற இந்திரியம் (கால் ஆகிய உறுப்பில் நிற்கும்) பரிச தன்மாத்திரையைப் பற்றி நின்று போக்குவரவு செய்யும். பாணி என்ற இந்திரியம் (கை ஆகிய உறுப்பில் நிற்கும்) உருவ தன்மாத்திரையைப் பற்றி நின்று ஏற்றல் இடுதலைச் செய்யும். பாயு என்ற இந்திரியம்(எருவாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) இரத தன்மாத்திரையைப் பற்றி நின்று மலம் முதலியவற்றை வெளிப்படுத்தும். உபத்தம் என்ற இந்திரியம்(கருவாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) கந்த தன்மாத்திரையைப் பற்றி நின்று விந்தினை வெளிப்படுத்தி இன்பம் செய்யும்.

Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

No comments:

Post a Comment