Pages

Wednesday, November 13, 2013

[vallalargroups:5200] திருஅருட்பாவை புரிந்து கொள்ள சைவ சித்தாந்தம் அவசியமா ?

திருஅருட்பாவை புரிந்து கொள்ள சைவ சித்தாந்தத்தின் சில அடிப்படை கருத்துக்களை சன்மார்க்க அன்பர்கள் அறிய வேண்டியது அவசியம் தான்.

அதன் அவசியத்தை சற்று சிந்திப்போம்!

1. திரு அருட்பாவில் பல பகுதிகளில் நுற்றுக்கும் மேற்பட்ட சைவ சித்தாந்த கலை சொற்கள் இடம் பெற்றுள்ளது, அதன் பொருள் தெரிந்தால் மட்டும் தான் நம்மால் அந்த செய்யுளின் பொருளை உணர முடியும் (அனுபவத்தால் அறிவது வேறு)

எ . கா :

திருவடிப்புகழ்ச்சியின் சில பகுதிகள் :

"மன்னும் " வினையொப்பு " "மலபரிபாகம்" வாய்க்க "மாமாயையை" மிதிக்கும்பதம்"

• இருவினை ஒப்பு

• மலபரிபாகம்

• மா மாயை

முதலியவற்றின் பொருளை சைவ சித்தாந்தத்தின் சில அடிப்படை கருத்துக்களை அறிந்திருந்தால் புரிந்து கொள்ளலாம்.


2. திருஅருட்பாவின் உயிர் என்று சொல்லப்படும் அருட்பெருஞ்சோதி அகவலை முழுமையாக உணரவும் சைவ சித்தாந்தத்தின் சில அடிப்படை கருத்துக்களை அறிந்திருத்தல் அவசியமாகின்றது.

எ . கா :

"பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம்
மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே"

பதி (சொருப ரூப சுபாவம்)

பசு (சொருப ரூப சுபாவம்)

பாசம் (ஆணவம் கன்மம் மாயை ஆகியவற்றின் சொருப ரூப சுபாவம்)

போன்றவற்றை அறிய சைவ சித்தாந்தத்தின் சில அடிப்படை கருத்துக்களை அறிந்திருத்தல் அவசியமாகின்றது.


 "தத்துவச் சேட்டையுந் தத்துவத் துரிசும்

   அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி"

தத்துவச் சேட்டை

தத்துவத் துரிசு

தத்துவ நிலைகள் (36 தத்துவம்)

போன்றவற்றை அறிய சைவ சித்தாந்தத்தின் சில அடிப்படை கருத்துக்களை அறிந்திருத்தல் அவசியமாகின்றது.

இதை விரிக்கில் பெருகும்,

வள்ளல் பெருமான் சில சைவ சித்தந்த கருத்துக்களை தம் உரை நடை பகுதியில் விளக்கி உள்ளார்கள் உதாரணமாக சிவ குணமும் - ஜீவ குணமும் என்னும் பகுதி தரப்பட்டுள்ளது (Image File)அன்பர்கள் காண்க.

எனவே சன்மார்க்க அன்பர்கள் சைவ சித்தாந்த கலை சொற்களையும் அதன் அடிப்படை கருத்துக்களையும் அறியும் பொருட்டு சைவ சித்தாந்த அடிப்படை கருத்துக்கள் அடங்கிய (PDF) நூற்களை இங்கு இணைத்துள்ளோம், அன்பர்கள் படித்து பயன் பெருக !




Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups.

No comments:

Post a Comment