- எல்லா அண்டங்களையும் ,
- எல்லா உலகங்களையும் ,
- எல்லா உயிர்களையும் ,
- எல்லா பொருள்களையும் ,
- மற்ற எல்லாவற்றையும்
- தோற்றுவித்தும் ,
- விளக்கம் செய்வித்தும் ,
- துரிசு நீக்கு வித்தும் ,
- பக்குவம் வருவித்தும் ,
- பலன் தருவித்தும்
{எங்கும் பூரனராகி விளங்குகின்ற ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் , அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்யின் , {"அக்கடவுள் திருவருள்"} நமது கருத்தின் கண் வெளிப்பட்டு விளங்கும் என்றும்}
அத திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி , மூப்பு, பயம் , துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் , எவ்விடத்தும் , எவ்விதத்தும் , எவ்வளவும் தடை படாத பேரின்ப சித்தி பேரு வாழ்வை அடைதல் கூடும் என்றும் , எங்கள் அறிவில் தேவரீர் திருவருளால் உண்மை பட உணர்த்தி அருள பெற்றோம் அவ்வுணர்ச்சியை பெற்றது தொடங்கி ,
- கடவுள் வழிபாடு எஞ்ஞான்று செய்வோம் ?
- கடவுள் திருவருள் விளக்கம் எந்நாள் அடைவோம் ?
- மரணம் , பிணி , மூப்பு முதலிய அவத்தைகள் எப்போது நீங்கும் ?
- என்றும் அறியாத பேரின்ப சித்தி எக்காலம் கிடைக்கும் ?
என்று எண்ணி- எண்ணி , வழி துறை தெரியாமல் வருந்தி நின்ற தருணத்தே...,
[REFERENCE : VALLALAR HANDWRITTEN SIRU VINNAPPAM]
Anbudan,
Vallalar Groups
web : http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups.
No comments:
Post a Comment