Pages

Friday, October 18, 2013

Re: [vallalargroups:5145] Re: திரு-நீறு அணியலாமா? வள்ளலார் பதில்:

அய்யா....

தங்கள் திருநீறு அணிவதும்,அணியாதும் தங்கள் விருப்பம்...
அணிபர்களை தடுக்காதீர்கள்.

"உண்மையான சன்மார்க்கத்தில் உள்ளவர்கள் உலகில் உள்ள அனைவரையும் தாய்போல் அனைத்து உரைப்பார்கள்.
துன்மார்கிகள் நாய் போல் குறைப்பார்கள்"    - வள்ளலார்

என்னுடைய சில கேள்விகளுக்கு "சுத்த சன்மார்கிகள்"  என்று கூறுவது எவ்வாறு சரியாகும்? 

1. வள்ளலார் எழுதிய முதல் ஐந்து திருமுறையை ஒதுக்கியவர்கள் சுத்த சன்மார்க்கிகளா?

2. திரு நீறு அணியாதீர்கள் என்று  கூறுபவர்கள் சுத்த சன்மார்க்கிகளா?

3. வள்ளலார் சிலையையோ / படத்தையோ வணங்காதீர்கள்  என்று  கூறுபவர்கள் சுத்த சன்மார்க்கிகளா?
 
"சாகதவனே சன்மார்க்கி"

இங்கு "சுத்த சன்மார்கிகள்" என்று சொல்லி கொண்டு அலைபவர்களில் (சாகவரத்தை) அல்லது (சுத்த தேகத்தை) பெற்றவர்களை காட்டுங்கள்.

வள்ளலார் கூரிய நான்கு ஒழுக்கத்தையும் முழுமையாக கடை பிடித்து , பூர்த்தி அடைந்து விட்டார்களா?

"சுத்த சன்மார்கிகள்" என்று சொல்லி கொண்டு ஒருவரையும் தடுக்காமல், அனைவரையும் சன்மார்க்கத்திற்கு அழையுங்கள்.
வள்ளலாரை காட்ட முயற்சி செய்யுங்கள்.திருநீரை மட்டும் வைத்து கொண்டு, சன்மார்க்கத்திற்கு மற்ற  மார்கங்களில் இருந்து வருபவர்களை விரட்டி அடிக்காதீர்கள்.

தாய் போல் அணைக்க கற்று கொள்வோம். எக்காலத்தும் , எவ்விடத்தும் , எத்துணையும் தடைபடாது  "ஆன்ம நேய" ஒருமை பாட்டினை வளர்த்து கொள்வோம். மற்றவர்கள் அணியும் சின்னகளை வைத்து எடை போடாமல், வாதம் செய்யாமல் , அந்த ஆன்மாவில் நடம் செய்யும் இறைவனை வணங்க முயற்சி செய்வோம்.

Senior Sanmarkka anbargal ( Please Share your thoughts)


Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி




2013/10/18 Maruthapillai <mahalakshmi.m@gmail.com>
Vanakkam Ayyah,,
                    My Humble clarification in this Regards.In many places Perumanaar says."Saathiyum, Samayamum, Poi endru Aathiyil Kooriya ArutperumJothi"
Perumanaar Samayathai Kadathavar.Though using Thiruneeru is sacred, but because , it will expose Sanmarghis as a group still attached with Saiva Samayam, I think, Perumanaar, after writing 6 th Thirumurai, tried to see that, "HE WANTED TO ENSURE THAT SANMARGHIS ARE BEYOND SAMAYAM,SAATHI,SAATHIRAM,KOTHIRAM".
So I think he had stopped putting Thiruneer,to avoid , being branded.Looks he went towards BRANDLESS, and showed that ALL ARE ONE , NOT ATTACHED WITH ANY RELIGION,AND WE ARE ALL BEYOND AND ABOVE  RELIGION
So can anyone please clarify this so that we can be made clear on this regards.
I am sure amny are confused in this aspect.
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
Anbudan Maruthapillai

On Tuesday, June 18, 2013 9:18:43 PM UTC+8, VallalarGroups wrote:
Dear Sanmarkka Anbargale!!!

திரு-நீறு அணியலாமா? வள்ளலார் பதில்:

எவ்வாறு திருநீறு அணிய வேண்டும் என வள்ளலார் கீழே  குறிபிடுகின்றார்.
"சிவாயநம"  என்றிடு நீறு....

25.புண்ணிய விளக்கம்

#834. பாடற் கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற் கினிய அடியவர்தம் கூட்டம் அளிக்கும் குணம்அளிக்கும்
ஆடற் கினிய நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தேடற் கினிய சீர் அளிக்கும்
சிவாயநம என் றிடுநீறே

#835. கருமால் அகற்றும் இறப்பதனைக் களையு நெறியும் காட்டுவிக்கும்
பெருமால் அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசைஅறுக்கும்
அருமால் உழந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திருமால் அயனும் தொழுதேத்தும்
சிவாயநம என் றிடுநீறே

#836. வெய்ய வினையின் வேர்அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டிலடைந்
துய்ய அமல நெறிகாட்டும் உன்னற் கரிய உணர்வளிக்கும்
ஐயம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செய்ய மலர்க்கண் மால்போற்றும்
சிவாயநம என் றிடுநீறே

#837. கோல மலர்த்தாள் துணைவழுத்தும் குலத்தொண் டடையக் கூட்டுவிக்கும்
நீல மணிகண் டப்பெருமான் நிலையை அறிவித் தருளளிக்கும்
ஆல வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சீலம் அளிக்கும் திருஅளிக்கும்
சிவாயநம என் றிடுநீறே

#838. வஞ்சப் புலக்கா டெறியஅருள் வாளும் அளிக்கும் மகிழ்வளிக்கும்
கஞ்சத் தவனும் கரியவனும் காணற் கரிய கழல்அளிக்கும்
அஞ்சில் புகுந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செஞ்சொல் புலவர் புகழ்ந்தேத்தும்
சிவாயநம என் றிடுநீறே

#839. கண்கொள் மணியை முக்கனியைக் கரும்பைக் கரும்பின் கட்டிதனை
விண்கொள் அமுதை நம்அரசை விடைமேல் நமக்குத் தோற்றுவிக்கும்
அண்கொள் வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்கொள் முனிவர் சுரர்புகழும்
சிவாயநம என் றிடுநீறே.

#840. நோயை அறுக்கும் பெருமருந்தை நோக்கற் கரிய நுண்மைதனைத்
தூய விடைமேல் வரும்நமது சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்
ஆய வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சேய அயன்மால் நாடரிதாம்
சிவாயநம என் றிடுநீறே

#841. எண்ண இனிய இன்னமுதை இன்பக் கருணைப் பெருங்கடலை
உண்ண முடியாச் செழுந்தேனை ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும்
அண்ண வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்ண மளிக்கும் திறம்அளிக்கும்
சிவாயநம என் றிடுநீறே

#842. சிந்தா மணியை நாம்பலநாள் தேடி எடுத்த செல்வமதை
இந்தார் வேணி முடிக்கனியை இன்றே விடைமேல் வரச்செயும்காண்
அந்தோ வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செந்தா மரையோன் தொழுதேத்தும்
சிவாயநம என் றிடுநீறே

#843. உள்ளத் தெழுந்த மகிழ்வைநமக் குற்ற துணையை உள்உறவைக்
கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்தை விடைமேல் கூட்டுவிக்கும்
அள்ளல் துயரால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தெள்ளக் கடலான் புகழ்ந்தேத்தும்
சிவாயநம என் றிடுநீறே

#844. உற்ற இடத்தில் உதவநமக் குடையோர் வைத்த வைப்பதனைக்
கற்ற மனத்தில் புகுங்கருணைக் கனியை விடைமேல் காட்டுவிக்கும்
அற்றம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செற்றம் அகற்றித் திறல் அளிக்கும்
சிவாயநம என் றிடுநீறே

#1294. நாடும் சிவாயநம என்று நாடுகின்றோர்
கூடும் தவநெறியில் கூடியே - நீடும்அன்பர்
சித்தமனைத் தீபகமாம் சிற்பரனை ஒற்றியூர்
உத்தமனை நெஞ்சமே ஓது

#2260. நான்செய்த புண்ணிய மியாதோ சிவாயநம எனவே
ஊன்செய்த நாவைக்கொண் டோதப்பெற் றேன்எனை ஒப்பவரார்
வான்செய்த நான்முகத் தோனும் திருநெடு மாலுமற்றைத்
தேன்செய்த கற்பகத் தேவனும் தேவருஞ் செய்யரிதே

#2285. காரே எனுமணி கண்டத்தி னான்பொற் கழலையன்றி
யாரே துணைநமக் கேழைநெஞ் சேஇங் கிருந்துகழு
நீரே எனினுந் தரற்கஞ்சு வாரொடு நீயுஞ்சென்று
சேரேல் இறுகச்
சிவாயநம எனச் சிந்தைசெய்யே

#2371. கான்போல் இருண்டஇவ் வஞ்சக வாழ்க்கையில் கன்னெஞ்சமே
மான்போல் குதித்துக்கொண் டோடேல் அமுத மதிவிளங்கும்
வான்போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுறச்செந்
தேன்போல் இனிக்கும்
சிவாயநம எனச் சிந்தைசெய்யே

#2400. மருக்கா மலர்க்குழல் மின்னார் மயல்சண்ட மாருதத்தால்
இருக்கா துழலுமென் ஏழைநெஞ் சேஇவ் விடும்பையிலே
செருக்கா துருகிச்
சிவாயநம எனத் தேர்ந்தன்பினால்
ஒருக்கால் உரைக்கில் பெருக்காகும் நல்லின்பம் ஓங்கிடுமே







Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallala...@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups.



--


--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups.

No comments:

Post a Comment