Pages

Tuesday, October 8, 2013

Re: [vallalargroups:5116] இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு ! பகுதி -9-

அன்புடன் அனைவருக்கும்,
அருட்பெருஞ்ஜோதி இன் தனிப்பெருங்கருணையால் வணக்கம்,
திருஅருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர்களின் அறிவுரைகளின் படி ஏண் பிணங்களை புதைக்கவேண்டும் ஈமச்சடங்குகளை செய்ய கூடாது "
விளக்கம் தேவை..
நன்றி..


2013/9/14 ELAVARASAN ANNAMALAI <elavarasansumathi@gmail.com>
 
 
 
 
 
                                     
 
                  
                      பசித்திரு !               தனித்திரு !               விழித்திரு !
 
 
                               அருட்பெருஞ்சோதி !  அருட்பெருஞ்சோதி !
                               தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி
!
 
      கொல்லாவிரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
      ஜீவகாருண்யமே மோட்சவீட்டீன் திறவுகோல் !
 
     எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 
    இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு !                பகுதி -9-
 
    அன்புஉள்ளம் கொண்ட ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம் நாம் நம் வாழ்க்கையில்
   உணர்ந்துகொள்ளவேண்டிய தத்துவபாடல் சிலவற்றை கொடுத்துள்ளோம் எனவே அன்பர்களே
 நாமும்   ஜீவகாருண்ய தயவோடு வாழ்ந்து பெறவேண்டியதை   விரைவில் பெற்றுக்கொள்வோம்
 
 
           81,   மெய்வாய் கண்மூக்கு செவியோடு ஐந்தும் !
                   மெய்யில் பொருந்தும் ஞானேந் திரியம் !
                   மெய்பாதம் பானிபாயுரு வாக்கு உபஸ்தம் !
                   மெய்யில் ஐந்தும் கர்மேந் திரியம் !
 
          82,   மனம் புத்தி ஆங்காரம் சித்தமே வீடு !
                  ஞானத்தால் கரணங்கள் நான்கே தெளிந்திடும் !
                  மனதில் அவஸ்தை ஐந்து மலமது மூன்றோடு !
                  தினம்தினம் துயர்தீர்ந்திட அருளதையே நாடு !
 
         83,   துரியம் சொப்பனம் சுழித்தியோடு சாத்திரம் !
                 துரியாதீதம் ஐந்தும் அவஸ்த்தையின் ஆதாரம் !
                வீரிய ஆணவம் மாயையோடு காமியம் !
                கூரிடும் மும்மலம் வென்றாலே மெய்ஞானம் !
 
        84,   ஆதாரம் ஆறினில் முதலில் மூலாதாரம் !
                அதன்மேல் அமைந்ததே சுவாதி ஸ்டானம்!
                இதன்மேல் மனிபூரகம் அடுத்துமே அநாதகம் !
                அதன்மேல் விசுத்தி விளக்கொளி ஆக்ஞையாம் !
 
       85,    மண்டலம் அக்கினி ஆதித்தன்  சந்திரனாம் !
               பிணிமூன்றும் வாத பித்த சிலோத்தும !
               குணமூன்றும் சாத்வீகம் ராஜதம் தாமதம் !
               உண்டிடும் அமிர்தம் உன்னுள்ளே எப்போதும் !
 
       86,   விகாரம் காமக்ரோத லோபமத மாச்சரியம் !
               மோகம் இடும்பை அசூயையோடு எட்டாம் !
              தேகத்தில் இரதம்இரத்தம் மூளைதோல் சுக்கிலம் !
               பாகத்தில் வலுஎலும்பும் நரம்பேழும் தாதுதாம் !
 
       87,   தஞ்சம் அன்னபிரான மனோ மயத்தோடு !
               விஞ்ஞான ம்யமாச்சே ஆனந்த ம்யமோடு !
               அஞ்சாத கோசமைந்தால் ஆனந்தத்தை தேடு !
              நெஞ்சில் ஞானத்தை உணர்ந்திட நாடு !
 
       88,   கண்காது மூக்கு ஓட்டைகள் ஆறாம் !
               உண்டிடும் வாயொன்று குயயத்தோடு குதம்மூன்றாம் !
              உன்னில் ஒன்பது ஓட்டைகளை என்றும் !
              மூன்றோடு ஆறுஓட்டை அடைத்தாலே நன்றாம் !
 
      89,   தத்துவம் உடல்கூறு தொன்னூற்றி ஆறு !
             சித்தத்தில் தெளிந்திட்டால் அழியாது உடல்கூறு !
             வித்தான தவநிலை தத்துவத்தின் கூறு !
             முத்தான மோனத்தின் சுழிமுனையில் தேறு !
 
     90,   நிதியோக தருமசிற்ப மந்திரம் வைத்தியம் !
            சோதிடம் சகுனஉருவ  சாஸ்திரங்கள் ஒன்பதாம் !
            இதிகாசம் காவியம் அலங்காரம் நாடகம் !
            இதில்வீணை வேணுநாதம்  மிருதங்கம் தாளமெட்டாம் !
 
                                                                                           தொடரும் ......
                                                         
                                                             (இப்பாடலை இயற்றியவர் பொ. அன்பழக சாமி,
                                                              நெ.15,7,வது சந்து,பேய் கோபுர வீதி ,திருவண்ணாமலை )
 
          அன்பர்களே ஒருசமயம் திருபெருந்துறை என்ற ஊரில் அன்பர் அறிவானந்தம் தனது இல்லதின்னையில் அமர்ந்து  ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்  அவ்வழியாக சென்ற ஆறுமுகம்  
அறிவானந்தத்தை பார்த்து தாங்கள் தெய்வசிந்தனை மற்றும் தயவுமணம் தருமசிந்தனை
கொண்டவர் ஆயிற்றே, தங்களின் இந்த ஆழ்ந்த சிந்தனைக்கு என்ன காரணம் என்று அடியேன்
அறியலாமா என்றார் ஆறுமுகம். அதற்க்கு அறிவானந்தம் நாம் இந்த உலகத்தில் எதற்க்காக
பிறப்பெய்தினோம் என்பதை அறியாமல் சில மனிதமாக்கள் தன மனம் போனபோக்கில் கள்ளுண்டு ,
மாமிசமலையை உண்டு  காமசேற்றில் முழ்கி களியாட்டங்கள் போட்டு இந்த உலகத்தில்
தான்வந்ததின் நோக்கத்தை அறியாமல் வீணே அழிந்து போய்கொண்டிருக்கிரார்களே என்று அடியேன் 
சிந்தித்து கொண்டிருந்தேன் என்றார்.
 
இவற்றை கேட்ட ஆறுமுகம் இதுமட்டும் தனா செய்கிறார்கள் இவற்றுக்கும் மேலாக சிலர் தன்
 நாவின் சுவைக்காக சிறு தெய்வங்களுக்கு ஆலயம் அமைத்து  அந்த  தெய்வத்தின்  பெயரால்  வாய்பேசா உயிரிணங்களை கொன்று அவற்றின் வாரிசுகளை அனாதைகளாக்கிவிடுகிரார்கள்.
தெய்வங்கள் நம்மை காப்பதற்க்கே அன்றி அழிப்பதற்க்கு அல்ல. என்கிற உண்மையை உணராமல்
தங்களின் வயிற்றை ஒருமயான காடாகமாற்றி கொண்டிருக்கிறார்கள் என்றார் ஆறுமுகம்.
 
இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் அவ்வழியாக வந்த  வெண்ணிற ஆடை 
அணிந்த துறவி இருவரின் அருகில் சென்று தாங்கள் இருவரின் மனக்கவலைக்கும் மருந்து 
கிடைக்கும் இடம் எதுவென்றால் அதுதான்  வாடியபயிரை கண்டபோது எல்லாம் வாடிய நமது 
சிதம்பரம் இராமலிங்கம் சாலை அமைத்த வடலூர் பெருவெளியாகும்.அங்குசென்று நாம் அனைவரும் 
அவரிடம் முறையிடுவோம் என்று மூவரும் வடலூர் சென்று நமது வள்ளல்பெருமான் அமைத்த 
தருமசாலையிலெ பசியாறி ஞானசபையில் அமர்ந்து அருட்பெருஞ்சோதி அகவல் பாராயணம் செய்து 
வழிபட்டார்கள்  இவ்வாறு இவர்கள் இங்கே உண்மை அன்பால் வேண்டியபடிக்கு  வேண்டுவோர்ர்க்கு வேண்டும வரமளிக்கும் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்   அங்கே அவர்கள் வாழ்ந்த 
திருப்பெருந்துறையை  திருவருளாலர்கள் வாழும்  அருள்துரையாக மாற்றி அருள்பாலித்தார்கள்.
 
 
எனவே அன்பர்களே நாமும் நம் வாழ்வில் பல அறிய சாதனைகளை செய்யவேண்டும் என்றால் 
நம்மைவிட நலிந்தவர்ற்கு உதவிகள் புரிந்து பசி என்று வருவோர்க்கு உணவுஎன்னும் மருந்தை கொண்டு 
அவர்தம் பசிப்பிணி போக்கிவந்தால் நாம் நம் வாழ்வில் எல்லா நலமும் பெற்று சீரும் சிறப்புடனும் 
வாழ்வோம் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை  அகவலை படிப்போம் தகவலை தெரிந்துகொள்வோம் .
 
   
  பசி என்று வருவோர்க்கு உணவுகொடு அதுவே ஜீவகாருண்யம் !
   ஜீவகாருண்யமே மொட்சவீட்டீன் திறவுகோல் !
 
   எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

     
 
  கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
 
  என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
  ஆன்மநேய .அ.இளவரசன்
  வள்ளலார் உயிர்வதை தடுப்பு இயக்கம்
  நெ.34,அண்ணா தெரு,
   திருவள்ளுவர் நகர்,
   ஜமின் பல்லாவரம்
   சென்னை -6000 043
   கைபேசி:9940656549
     
 
         
 
 

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/

No comments:

Post a Comment