Pages

Tuesday, August 13, 2013

[vallalargroups:5032] Fwd: இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு ! பகுதி -8-


                                
 
                பசித்திரு !               தனித்திரு !               விழித்திரு !
 
 
                               அருட்பெருஞ்சோதி !  அருட்பெருஞ்சோதி !
                               தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி
!
 
      கொல்லாவிரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
      ஜீவகாருண்யமே மோட்சவீட்டீன் திறவுகோல் !
 
     எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 
    இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு !                பகுதி -8-
 
    அன்புஉள்ளம் கொண்ட ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம் நாம் நம் வாழ்க்கையில்
   உணர்ந்துகொள்ளவேண்டிய தத்துவபாடல் சிலவற்றை கொடுத்துள்ளோம் எனவே அன்பர்களே
 நாமும்   ஜீவகாருண்ய தயவோடு வாழ்ந்து பெறவேண்டியதை   விரைவில் பெற்றுக்கொள்வோம்
 
                  71,   தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மைபோல் !
                         பார்க்க மதிரவி சுழிஜோதி  உண்மைபோல் !
                         கார்க்க உடலினில் உயிர்நிற்கும்  தன்மைபோல் !
                         யார்க்கும் உப்பு சுண்ணாம்பே  மொட்சம்போல் !
 
                 72,   கூரிடும் சரக்கு அறுபத்து நான்கையும் !
                        நீறிடும் நவலோகம் நீற்றும் தன்மையும் !
                        வீறிடும் மேனி பொன்னாகும் உண்மையும் !
                        ஏறிடும் வாசியால் தவயோக தன்மையும் !
 
                73,   எட்டெட்டும் கட்டி தீதனில் நிற்குமே !
                        விட்டோடி நோய்கள் கடலினில் புக்குமே !
                        கெட்டிடும் மேனிக்கு முப்பிணி அறிந்துமே !
                        கூட்டிடு வழலையால் எப்பினியும் ஓடுமே !
 
               74,    ஆயுள் வேதப்படி அவிழ்தம் முடித்திடு !
                       மாயும் நோய் எல்லாம் மகிமை அறிந்திடு !
                       காயத்தில் தாதுவகை சப்தம் தெரிந்திடு !
                       தூய வையத்தின் மருந்துநீ கொடுத்திடு !
 
               75,   நாடி வகைதசம் நன்காய அறிந்திடு !
                      ஓடிடும் பிணிஎல்லாம் உண்மை தெரிந்திடு !
                      கூடிடும் தசவாயு குணமதை அறிந்திடு !
                      நாடிடும் நோய்நிலை மருந்தாலே நீக்கிடு !
 
              76,   அந்தமும் ஆதியும் ஆனதோர் அருள்ஜோதி !
                     விந்துவே நாதமாய் விளைந்தது திருஜோதி !
                     சிந்தையில் காரசாரம் அறிந்திட வாமஜோதி !
                     முந்தியே நின்றது அண்டபிண்ட நிலைஜோதி !
 
             77,   இருவிழி மூடினால் இருள் அழியா பொருள் !
                    உருவற்ற இறைவன் என்றும் அழியா பொருள் !
                    உருவான உடம்பினில் உயிரழியா பொருள் !
                    அருள்தரும் மூப்புவால் தங்கம் அழியா பொருள் !
 
            78,   கலையாகும் அபானன் கரிகரன் சமானன் !
                    அலைமோதும் நாகன் கூர்மன் வியானன் !
                   நிலையாகும் தேவதத்தன் தனஞ்சயன் உதானன் !
                   சிலைபோல் தவம்புரிய தசவாயுவில் பிராணன் !
 
            79,   நாடிகள் இடகலை பிங்கலை சுழிமுனையாம் !
                   கூடிடும் காந்தாரி சிங்குவை சங்கினியாம் !
                   ஓடிடும் அத்திரி அலம்புடை குருவோடாம் !
                   வாடிடும் தற்புருடன் நாடிவகை த்சமாகும் !
 
           80,   நிலம் நீர் நெருப்பு காற்றோடு விசும்பாம் !
                   உலகத்தில் பூதமைந்தால் எடுத்திட்ட உடம்பாம் !
                  தலத்தினில் சத்தம்பரிசம் ரூபம்ரசம் கந்தமாம் !
                  புலனைந்தும் அடங்கிடும் தவத்தினால் வாழ்வாம் !
     
 
                                                                                                                       தொடரும் ......
                                                         
                                                             (இப்பாடலை இயற்றியவர் பொ. அன்பழக சாமி,
                                                              நெ.15,7,வது சந்து,பேய் கோபுர வீதி ,திருவண்ணாமலை )
 
 அன்பர்களே ஆசைதான் துன்பத்திற்க்கு காரணம் எனவே ஆசை என்னும் தீயை நீராலும் அனைக்கமுடியாது.பொங்கிவரும் கடல் அலைபோல் மனிதனின் மனதை நிலைமாற
செய்யும்,மனிதன் மனதில் ஆசை இருந்தால் ஆன்மாவைவிட்டு நற்பண்புள்ள மனம்
விலகிக்கொண்டே  போகும் .ஆகையால் ஆன்மா ஒன்றே நிலையானது என்ற உண்மையை 
உணர்ந்து மனமதை நம்வசபடுத்தவேண்டும்.
 
நிலையற்ற பணத்திற்க்காக பேராசையோடு அலையும் மக்களையும் நாம் நம் வாழ்வில் 
பார்த்திருக்கிறோம்.புத்தி தடுமாறி பகுத்தறிவையும் மறந்து தன விருப்பம்போல் செயல்படுகிறது 
.பஞ்சமா பாதகங்களையும் செய்யவும் தூண்டுகிரது ,அதாவது காமம்.குரோதம் மதம் மாச்சரியம்.
பொய் பேசுதல் முதலிய பாபங்களை செய்ய துண்டுகிறது இவற்றை அறிவிப்பவன் பரமாத்மா 
இந்த பரமாத்மா அறிவிப்பதை வியாக்கியானம் செய்வது மனிதனின் மனதோடு கூடிய ஜீவாத்மா 
.இவற்றை தான் நமது வடலூர் வள்ளல் பெருமானார் தன்மனதை பார்த்து கேள்விகேட்கிறார் 
எவ்வாறெனில்.   மனம்மெனும் பேய்குரங்கு மடபயலே நீதான் , மற்றவர்போல் நினைத்து
 எனை ம்ருட்டதே கண்டாய் இனமுறவே என்சொல்வழி இருத்திஎனில் சுகமாவாய் ,
ஏற்றிலை யானாலோ திணையளவு உனது அதிகாரம் சொலவோட்டேன்  
 யாறேனயிங்கிருந்தாய் ஞானசபை தலைவனுக்கு  நல்லபிள்ளை நானே .             
 
ஆகையால்  நிலையற்ற பொன்பொருள் மீது பற்று வைக்காமல். மனதில் உள்ள தீய எண்ணங்களை விடுத்து பெறுதற்கரிய இந்த மனித தேகத்தை பெற்ற நாம் நற்சிந்தனையோடு
வாழ்ந்து பிற உயிரினங்கள் படும் துன்பங்களை நம்துன்பமாக பாவித்து கருணை உள்ளத்தோடு
அவற்றின் துயர்நீக்கி வாழ்ந்து வந்தால் எல்லா நற்காரியங்களும் கைகூடும்  
     
    எனவே நற்சிந்தைனை கொண்ட சான்றோர் பெருமக்களே சற்றே சிந்தித்து பாருங்கள் நமது  வடலூர்  வள்ளல்பெருமான் கூரிய உயிர் நேயத்தையும்  பசிப்பிணி போக்குதளையும் நாம் நம் வாழ்வில் இலட்சியமாக கொண்டு வாழ்ந்து வருவோமேயானால்  எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவர்  நம்முள்ளே காரியப்டுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை .
 
 
   பசி என்று வருவோர்க்கு உணவுகொடு அதுவே ஜீவகாருண்யம் !
   ஜீவகாருண்யமே மொட்சவீட்டீன் திறவுகோல் !
 
   எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

     
 
  கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
 
  என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
  ஆன்மநேய .அ.இளவரசன்
  வள்ளலார் உயிர்வதை தடுப்பு இயக்கம்
  நெ.34,அண்ணா தெரு,
   திருவள்ளுவர் நகர்,
   ஜமின் பல்லாவரம்
   சென்னை -6000 043
   கைபேசி:9940656549



--



Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/

No comments:

Post a Comment