பசித்திரு ! தனித்திரு ! விழித்திரு !
அருட்பெருஞ்சோதி ! அருட்பெருஞ்சோதி !
தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி !
கொல்லாவிரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
ஜீவகாருண்யமே மோட்சவீட்டீன் திறவுகோல் !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு ! பகுதி -6-
அன்புஉள்ளம் கொண்ட ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம் நாம் நம் வாழ்க்கையில்
உணர்ந்துகொள்ளவேண்டிய தத்துவபாடல் சிலவற்றை கொடுத்துள்ளோம் எனவே அன்பர்களே
நாமும் ஜீவகாருண்ய தயவோடு வாழ்ந்து பெறவேண்டியதை விரைவில் பெற்றுக்கொள்வோம்
அருட்பெருஞ்சோதி ! அருட்பெருஞ்சோதி !
தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி !
கொல்லாவிரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
ஜீவகாருண்யமே மோட்சவீட்டீன் திறவுகோல் !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு ! பகுதி -6-
அன்புஉள்ளம் கொண்ட ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம் நாம் நம் வாழ்க்கையில்
உணர்ந்துகொள்ளவேண்டிய தத்துவபாடல் சிலவற்றை கொடுத்துள்ளோம் எனவே அன்பர்களே
நாமும் ஜீவகாருண்ய தயவோடு வாழ்ந்து பெறவேண்டியதை விரைவில் பெற்றுக்கொள்வோம்
51, காலனை வென்றிட முப்புவே ஈசன் !
ஞாலத்தால் கதிர்மதி சேர்ந்திட பிரகாசன் !
ஆலத்தை உண்ட அமிர்த லிங்கேசன்!
மேலான சிதம்பரம் மேவும் நடராசன் !
52, உடலுயிர் முப்புவால் பிரியாமல் வைத்தான் !
திடம்பெற வாசியால் ஜோதிநிலை தந்தான் !
கூடலால் ஆண்பெண்ணால் உலகத்தை படைத்தான் !
ஆடலால் அனைத்தையும் இயங்கிட செய்தான் !
53, சிவசக்தி இரண்டுமே சேர்ந்திடில் சித்தி !
சிவகங்கை அமிர்தத்தை உண்டாலே முக்தி !
தவம்செய்யும் பெரியோரை பணிந்தாலே பக்தி !
சிவமான மலைஜோதி கண்டாலே முக்தி !
54, காரத்தை கண்டாலே கனகம் சித்தியாகும் !
சாரத்தால் சண்டன் துயர்விட்டு போகும் !
வீரமாம் வெள்ளை கல்லுப்பு வேதையாகும் !
பூரமாம் பூநீர் வழலையால் வாழ்வாகும் !
55, சித்த ஸ்தலம்தனில் தெய்வம் இருந்திடும் !
மத்த ஸ்தலங்களில் மகிமை நீ அறிந்திடும் !
பித்தன் சிவன்ஜலம் சிரசினில் தங்கிடும் !
சுத்த ஜலமதால் சரக்கெல்லாம் வெளுத்திடும் !
56, கெந்தி ரசத்தினால் கீர்த்திநாம் பெறலாம் !
தொந்திக்க வகைஉனர்ந்தால் முக்தி அடையலாம் !
மந்திமனம் அடக்கினால் தவத்தில் இருக்கலாம் !
இந்திரன் போல்என்றும் சொர்கத்தில் வாழலாம் !
57, மண்ணில் விளைந்தது தண்ணீரில் பூப்பே !
தண்ணீரில் விளைந்தது நீர்மேல் நெருப்பே !
விண்ணில் கூத்தனாம் குதம்பையின் சிரிப்பே !
கண்ணில் நாட்டியம் நடராசன் களிப்பே !
58, அண்டமாய் நின்றது பிண்டத்தின் மகிமையே !
பிண்டமாய் வந்தது அண்டத்தின் தன்மையே !
தண்டலை விளங்கும்தில்லை நடராசன் உண்மையே !
வண்டல் இரண்டினால் சொர்ணத்தின் நிலமையே !
59, குப்பை வழலையால் கோடிவாதம் காணலாம் 1
அப்பை மையாக்கி அட்டமாசித் தாடலாம் !
உப்பை அகற்றினால் உடல்குற்றம் நீக்கலாம் !
கைப்பை நீக்கினால் கடவுளை காணலாம் !
60, விண்ணிலாடும் சொக்கன் உப்பினில் சூட்ச்சம் !
கண்ணிலாடும் விமலன் சுண்ணாம்பினால் மோட்சம் !
என்னிலாடும் கூத்தன் தவத்தின் கடாட்ச்சம் !
மண்ணிலாடும் வித்தன் பூனீர்க்கு ரவிசூட்ச்சம் !
(இப்பாடலை இயற்றியவர் பொ. அன்பழக சாமி ,நெ .15,7,வது சந்து ,
பேய் கோபுர வீதி ,திருவண்ணாமலை )
எனவே அன்பர்களே நாமும் நம் வாழ்வில் ஜீவகாருண்ய சிந்தனையோடு கொல்லாவிரதமதை
கடைபிடிக்கவேண்டும் நாம் நம் வாழ்வில் நமமைவிட வலியவரகளை கண்டு பொறாமை
என்னும் தீய சிந்தனையால் அவதியுற்று கஷ்டபடுகிறோம் இதற்க்கு காரணம் யாதெனில் நம்முடைய
மனம் பக்குவமில்லாமல் இருப்பது தான் ,நெசவு தொழில்செய்யும் தொழிலாளி பரமானந்தம்
தான் பிறந்த ஊரில் தன்னைவிட ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு தன்னால் இயன்றவரை
உதவிகள் செய்தும் மற்றும் நாள்தோறும் ஒருவருக்காவது பசியாறறுவித்தல் செய்து பின்னர்
தான் உணவு அருந்துவாராம் இவ்வாறு செய்துவந்த பரமானந்த நெசவு தொழிலாளியின் வாழ்க்கை
நமது வடலூர் வள்ளல்பெருமான் வணங்கிய எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி
ஆண்டவரின் கருணையினால் சீரும் சிறப்புமாக நடந்து கொண்டிருந்தது.
ஆனால் அதே ஊரைசேர்ந்த செலவந்தர் எதிர்வீட்டு நாராயணன் இவரிடம் செல்வம்
மலைபோல் கொட்டிக்கிடந்தது ஆனால் இவரிடம் தருமசிந்தனை கடுகளவும் கிடையாது
அதற்க்கு மாறாக மது மாது போன்ற தீய பழக்கவழக்கங்கள்தான் ஆனால் இவர் அன்பர்
பரமானந்தத்தை பார்த்து இவர் இந்த ஏழ்மை நிலையில் நெசவு தொழிலை செய்து
அதில்கிடைக்கும் குறைந்த வருவாயில் தன்னால் இயன்றதான தருமங்களை செய்வதை
கண்டு பொறாமை கொள்வாராம் ஒருநாள் தானும் அன்பர் பரமுவைவிட நிறைய அன்னதானம்
செய்து நல்லபெயர் எடுக்கவேண்டும் என நினைத்து தான் பிறந்த ஊர் மட்டுமில்லாமல் பக்கத்து ஊரை
சேர்ந்தவர்களுக்கும் தன் வீட்டில் அன்னதானம் வழங்கப்படும் என ஊர்முழுக்க விளம்பரம்
செய்துவிட்டு உணவு தயாரிக்கும் வேளையில் மும்முரமாக இறங்கி பொரியல் ,அவியல்,கூட்டு
சாம்பார் ,வத்தகுழம்பு ,மோர் ,அப்பளம் ,பாசம் என அனைத்து அறுசுவை உணவுவகைகளை
தயார் செய்து வைத்துவிட்டு அன்பர்களை எதிர்பார்த்தவண்ணம் இருந்தான் நாராயணன் ஆனால்
நெடுநேரம் ஆகியும் ஒருவரும் வரவில்லை நேரம் கடக்க கடக்க இவன் மனம் தவித்துக்கொண்டு
இருந்தது சற்று தொலைவில் வெள்ளைநிற ஆடைபோர்த்திய அடிகளார் வருவதை கண்டு அவரை
எதிர்கொண்டு அழைத்து உபசரித்து உணவு அருந்துவதற்க்கு பணித்தான் ஆனால் அடிகளாரோ
இங்கே அறுசுவை உணவு நிறையயிருக்கிறது ஆனால் இவைகளை சாப்பிடயாரும் வரவில்லையே
காரணம் தெரியுமா உனக்கு உன்னிடம் நிறைய செல்வம் இருக்கலாம் ஆனால் உன்னிடம் நல்லபக்குவபட்ட
மனம்மில்லை தற்பெருமைக்காக இச்செயலை செய்கிறாய் ஆகையால் தான் ஒருவரும் வரவில்லை
என்றார் அடிகளார் ,நாராயணன் தான் முன்பு நடந்துகொண்ட விதத்தை நினைத்து வெட்கத்தால்
தன்முகம் நிலம் பார்த்தபடியே ,ஐயா நான்முன்பு செய்த பிழை அனைத்தையும் பொருத்தருளவேண்டும்
என்மனம் இப்பொழுது தெளிந்த நீரோடையில் ஓடுகின்ற நீரைபோல் தெளிவடைந்துவிட்டது ஆகையால்
தாங்களும் தங்களைசேர்ந்த அடியாகளும் அடியேன் இல்லத்தில் பசியாரவேண்டும் எனபணித்தான்
திருந்திய உள்ளத்தோடு நின்ற நாரயணின் வேண்டுகோளை ஏற்று அன்பர்கள் அனைவரும் பசியாறி
வயாரவழ்த்தினார்கலாம் ஆகையால் இந்த உடல் அழியககூடியது ஆனால் ஆன்மாவிற்க்கு
அழிவில்லை அழியகூடிய இந்த உடலை அழியாத ஒளிதேகமாக மாற்றும் உபாயம் நம்மிடம் உள்ளது
அதுதான் தூய உள்ளத்தோடு செய்யும் அன்னதானம்
எனவே சான்றோர் பெருமக்களே சற்றே சிந்தித்து பாருங்கள் பொறாமை குணங்களை விட்டு
நற்சிந்தனையோடு நமது மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்கவேண்டாம்,ஆகவே நமது வடலூர் வள்ளல்பெருமான் கூரிய உயிர் நேயத்தையும் பசிப்பிணி போக்குதளையும் நாம் நம் வாழ்வில் இலட்சியமாக கொண்டு வாழ்ந்து வருவோமேயானால் எல்லாம் வல்ல
அருட்பெருஞ்சோதி ஆண்டவர் நம்முள்ளே காரியப்டுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை .
பசி என்று வருவோர்க்கு உணவுகொடு அதுவே ஜீவகாருண்யம் !
ஜீவகாருண்யமே மொட்சவீட்டீன் திறவுகோல் !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொள்ளா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
ஆன்மநேய .அ.இளவரசன்
வள்ளலார் உயிர்வதை தடுப்பு இயக்கம்
நெ.34,அண்ணா தெரு,
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை -6000 043
கைபேசி:9940656549
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
No comments:
Post a Comment