Pages

Thursday, June 6, 2013

[vallalargroups:4958] Fwd: வணக்கம் அன்பர்களுக்கு ஓர் செய்தி....



---------- Forwarded message ----------
From: Thiru Arul <vallalarjothi@yahoo.fr>
Date: 2013/6/6
Subject: வணக்கம் அன்பர்களுக்கு ஓர் செய்தி....
To: "mupa1937@gmail.com" <mupa1937@gmail.com>, "ariviyaltamilmandram@gmail.com" <ariviyaltamilmandram@gmail.com>, A-V-A-T-A-R-A-M <indran_withme@yahoo.com>, Senthil Maruthaiappan <senips@gmail.com>, SIVAKUMAR SINGAPORE <siva@vallalar.org>, VallalarGroups Vallalar <vallalargroups@gmail.com>, Gandhirajan Janagiraman <vallalartrust@gmail.com>, Muru Gan <vallalar_murugan@rediffmail.com>, Ramalingam Vallalar <atrioventricular@hotmail.com>, Vallalar Eyakkam <vallalar.eyakkam@gmail.com>, Vallalar Gurugulam <vallalargurugulamtrust@gmail.com>, VallalarGroups Vallalar <vallalargroups@googlegroups.com>, VallalarSpace ArutperunJothi <contactus@vallalarspace.com>, "vallalarblogs@gmail.com" <vallalarblogs@gmail.com>



  வணக்கம்  அன்பர்களுக்கு  ஓர்  செய்தி....

உண்மையை  துணிந்து  சொல் ...

நப்பிக்கை  இருந்தால்  இச்செய்தியை  நம்புங்கள் ...


மகன் தந்தையுடன் இறைவனின்  உண்மையை  விசாரம்  செய்தல் .



அப்பா இந்த உலகத்தை யார் உண்டாக்கினார்கள்.

கடவுள்தான் உண்டாக்கினார்.

கடவுளா யார் அது?

நாம் தினமும் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுகின்றோமே அந்தக் கடவுள்.

அப்பா கோயிலிலே போனால் பிள்ளையார்,முருகர்,சிவன்,காமாட்சி,நடராஜர் இப்படி எத்தனையோ சாமி கும்பிடுகின்றோம் இல்லையா?

ஆமாண்டா கண்ணா

பக்கத்து வீட்டுக்காரங்க நம்ம கோயிலுக்கு வர்றதில்லையே ஏன்?

அவங்க வேறே கோயிலுக்குப் போவாங்க.

அதுதான் ஏன்னு கேக்கிறேன்? 

அவங்க கிரித்துவங்க.நம்ம கோயிலுக்கு வரமாட்டாங்க.நம்ம சாமியையும் கும்பிடமாட்டாங்க.

அவங்க எந்த சாமியைக் கும்பிடுவாங்க?

அவங்க கர்த்தரை வணங்குவாங்க 

எதிர் வீட்டுத் தாத்தா எந்த சாமியைக் கும்பிடறார்.?அவரும் நம்ம கோயிலுக்கு வர்றதில்லையே.?

அவர் அல்லாவைத்தான் கடவுளா வணங்குவார்.அவர் இஸ்லாமியர். 

அப்பா நாம கும்பிடற சாமி நடராஜர்,சிவன்,பிள்ளையார்,முருகன் இப்படி நெறைய இருக்கு.அவங்க கும்பிடுற கர்த்தர்,அல்லா போன்ற சாமியும் இருக்க. இவங்கள்ள எந்த சாமி இந்த உலகத்தை உண்டாக்கிச்சு?

நாம பிரம்மா படை ச்சாருன்னு சொல்லுவோம்.கிறித்துவர்கள் பரமபிதாதான் படைச்சாருன்னு சொல்லுவாங்க.இஸ்லாமியர் அல்லாதான் படை ச்சாருன்னு சொல்லுவாங்க. 

அப்பா உண்மையிலே யார்தான் படைச்சது?

அதிலே ஒரு உண்மை யாருக்கும் தெரியாம இருக்குது.

அது என்ன உண்மை எனக்குச் சொல்லுங்க அப்பா?

உலகம் இருப்பதோ ஒன்று. அதை மூணு நாலு பேர் சேர்ந்தா படைச்சிருப்பாங்க.ஒருத்தர்தான் இந்த உலகத்தைப் படைச்சார்.அந்த ஒருத்தர்தான் கடவுள்.

ஒருத்தர்தான் கடவுள் என்றால் இத்தனை பேர் எப்படி வந்தது?

நாம தமிழர் தண்ணீர் என்று சொல்லுகிறோம்,மலையாளிகள் வெள்ளம் என்று தண்ணீரைச் சொல்லுவாங்க. அதே தண்ணீரை தெலுங்கர் நீலு என்றும்,வட நாட்டில் பானி என்றும்,ஆங்கிலத்தில் வாட்டர் என்றும் சொல்லுவார்கள். இப்படி எந்த மொழியில் எப்படிச் சொன்னாலும் தண்ணீரைத்தானே சொல்லுகிறோம்.நம்முடைய உடம்பில் உயிர் எப்படி ஒன்றுதான் இருக்கமுடியுமோ அதேபோல் இந்த உலகத்திலும் கடவுள் ஒருவர்தான் உண்டு. சிவன்,நாராயணன்,சக்தி,முருகன்,விநாயகன்,கர்த்தர்,அல்லா  இப்படி சொல்லப்பட்ட எல்லாப் பெயர்களும் அந்தக் கடவுளுக்கு ஞானிகளால் வைக்கப்பட்ட பெயர்கள்தான்.

ஒரே கடவுளுக்கு இத்தனை பெயர்கள். அப்படித்தானே?

ஆமாண்டா கண்ணா இதுதான் உண்மை.

உனக்கு  எப்படித் தெரிந்தது?

நம்ப ராமலிங்க ஐயா வள்ளலார்தான் சொன்னார். 

அவர் சொன்ன பாட்டைச் சொல்லுங்க அப்பா?

பெருகிய பேர் அருளுடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திருப்பேர் புகல் என்கின்றாய்
அருகர் புத்தர் ஆதி என்பேன் நாராயணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன்
பருகு சதாசிவம் என்பேன் சக்தி சிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன்
துருவு சுத்த பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன் சுத்த சிவம் என்பேன் இவை சித்து விளையாட்டே


அப்பா இந்த உண்மையை ஒவ்வொரு சமயத்தவரும் உணர்ந்தால் சமயச் சண்டையே வராதல்லவா?

வராது, 

சரி இந்தச் சமயங்கள் ஏன் உண்டாச்சி?

கடவுளின் உண்மையை வெளியாக்கவே உண்டாச்சி.

எந்த உண்மை?எனக்குப் புரியும்படி சொல்லப்பா?

கங்கை நதி வட நாட்டில் ஓடுகிறது.கோதாவரி ஆந்திர நாட்டில் ஓடுகிறது.காவிரி தமிழ் நாட்டில் ஓடுகிறது.நதிகளின் பெயர்கள் வெவ்வேறாக இருக்கலாம். எங்கெங்கோ தோன்றி எங்கெல்லாமோ ஓடலாம். ஆனால் எல்லாம் கலப்பது வங்காளவிரிகுடாக் கடலில் தான். அதேபோல் எல்லாச் சமயங்களும் என்னென்ன கூறினாலும் அவை அனைத்தும் அந்தக் கடவுளையே சாரும்.

இதையும் வள்ளளார்தான் சொன்னாரா?

ஆமாண்டா கண்ணா.

அவர் பாடலைச் சொல்லுங்கப்பா>

பொங்குபல சமயமெனும் நதிகள் எல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்கு கரை காணாத கடலே எங்கும் கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்க நிழல் பரப்பி மயர்ச்சோடை எலாம் தணிக்கின்ற தருவே பூந்தடமே ஞானச்
செங்குமுதம் மலர வரும் மதியே எல்லாம் செய்ய வல்ல கடவுளே தேவ தேவே.


இந்த உலகத்தில் கடவுள் ஒருவரே. எல்லா உருவங்களும் எல்லாப் பெயர்களும் அந்த ஒருவரையே குறிக்கும். இந்த உண்மை உணராமல் பலப்பல தெய்வங்கள் இருப்பதாக எண்ணுவோர் திருவருள் விளக்கம் இல்லாதவர்களே.

தெய்வங்கள் பல பல சிந்தை செய்வோரும் சேர்கதி பல பல செப்புகின்றோரும்
பொய் வந்த கலை பல புகன்றிடுவோரும் பொய்ச் சமாதியை மெச்சுகின்றோரும்
மெய் வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார் மேல் விளைவு அறிகிலார் வீண் கழிக்கின்றார்
எய் வந்த துன் பொழித்து அவர்க்கு அறிவு அருள்வீர் எனைப் பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே.


நன்றி ...    WWW. VALLALARSPACE.COM

இத்தகவலை  அளித்தவர் ..

M.BALASUBRAMANIAN alias mupa,
Plot No 98,Neru street,
Alwar Thirunagar,
E.Mail ID: mupa1937@gmail.com,
Chennai, Tamil Nadu, India,
Postal Code: 600087,
Phone: 9444450601
 
 









--



Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
 
 

No comments:

Post a Comment