Pages

Friday, May 17, 2013

[vallalargroups:4917] தெய்வமணிமாலை: கைப்பற்றிக் கொள்ளாதபடி அருள் செய்தல் வேண்டும் : வள்ளலாரின் "பேருபதேசம்"



தெய்வமணிமாலை

காமவுட் பகைவனுற் கோபவெங் கொடியனும்
        கன
லோப முழு மூடனும்
        கடு
மோக வீணனும் கொடு மதமெனும் துட்ட
        கண் கெட்ட ஆங்காரியும்
    ஏமமறு
மாச்சரிய விழலனும் கொலையென்
        றியம்பு பாதகனுமாம் இவ்
        வெழுவரும் இவர்க்குற்ற வுறவான பேர்களும்
        எனைப்பற் றிடாம லருள்வாய்
    சேமமிகு மாமறையி னோமெனும் மருட்பதத்
        திறனருளி மலய முனிவன்
        சிந்தனையின் வந்தனை யுவந்த மெய்ஞ்ஞானசிவ
        தேசிக சிகாரத்னமே
    தாமமொளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.

உரை:
        காம மென்னும் உட்பகைவனும், கோப மென்னும் கொடியவனும், கனத்த லோபம் என்னும் முழுத்த மூடனும், மிக்க மோகம் எனப்படும் வீணனும், கொடிய மதம் எனப்படும் துட்டத்தனமும் குருட்டுத் தன்மையுமுடைய ஆங்கார வுருவினனும், காப்பற்ற மாற்சரிய மென்னும் விழலனும், கொலை எனப்படும் பாதகனுமாகிய எழுவரும் இவர்கட்கு உறவினரான பிறரும் என்னைச் சூழ்ந்து தம் கைப்பற்றிக் கொள்ளாதபடி அருள் செய்தல் வேண்டும்



































Anbudan,

Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
 
 

No comments:

Post a Comment