Pages

Thursday, April 25, 2013

Re: [vallalargroups:4865] Fwd: இன்றைய சத விசார கேள்வி : (மரம் - மனிதன்)

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


அய்யா, தாவரங்கள் பெரிய கொடையாளிகள் என்று சொல்வதே தவறு. உண்மையில் நாம் அவற்றை ஏமாற்றி அவர்களது உடைமையைப் பறித்துக் கொள்கிறோம். பூக்கள் மற்றும் கனிகள்  அவர்களது இனப்பெருக்கத்திற்காக மட்டுமே உள்ளன. அவற்றின் கிளைகள் தண்டுகள் வேர்கள் பலமாக இருப்பது அவர்களது நீண்ட வாழ்வுக்குத் தேவையாக உள்ளது. கனிகளில் விதைகள் பத்திரமாக இருக்கவும்,  தக்க சூழ்நிலை ஏற்படும் போது தேவையான ஊட்டச் சத்துக்காகவும் சதைப்பற்றோடு காணப்படுகின்றன. அவை பலமான உடலைக் கொண்டிருப்பது நமது வீட்டு சாளரத்துக்கும், கதவுக்கும் ஆவதற்கு அல்ல.

மற்றபடி, தாவரங்கள் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு உயிர் வாயுவை வெளியிடுவது அவற்றின் இயல்பு. அவை வளர்வதற்கு கரியமில வாயு தான் தேவையாக உள்ளது. மண்புழு மண்ணை உண்டு அதன் கழிவான உரத்தை வெளியிடுவதைப் போல.

தாவரங்களிடமிருந்து அனைத்தையும் ஏமாற்றிப் பறித்துக் கொண்டு, ஏமார்ந்தவைகளை கொடையாளிகள் என்று சொல்லி அவமானப் படுத்தாதீர்கள்.

சிந்தித்துப் பாருங்கள். தாவரங்களையே இப்படி ஏமாற்றுகிறோம் என்றால் கால்நடைகளின் (முக்கியமாக பசுக்கள்) கதி அதோ கதி தான்.

இயற்கையிலிருந்து நேரடியாக ஆற்றலைப் பெறும் (எந்த உயிரையும் துன்புறுத்தாமல்) தாவரங்கள் தான் உண்மையான நேர்மையான நல்லுயிர்கள்.

நன்றி.

பிரசாத்.




2013/4/25 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Vallal Malaradi Vaalga Vaalga

அன்புடையவர்களே ,
இன்றைய சத விசார கேள்வி :
 
ஏதேனும் ஒரு மரத்தை எடுத்து கொள்வோம்:
பொதுவாக மரமானது , ஓரறிவை கொண்ட உயிரினமாகும்.
அது ஓரறிவாக இருந்தாலும் , அது கலங்காமல் பிறர்ருக்கு கொடுத்து கொண்டே இருக்கிறது.
அதாவது, பகல் முழுவதும்  நிழல்  கொடுக்கிறது.
இரவு முழுவதும் காற்று கொடுக்கிறது .
வாழ்நாள் முழுவதும் காய், கனிகள் கொடுக்கிறது .
இது கொடுபவர்களிடம் இருந்து எதனையும் எதிர் பார்க்கவில்லை.
வாழ்நாள் முடிந்த பிறகு , நமக்கு கதவாகவும் / சன்னல்கலாகவும் பயன்படுகிறது.

1.Question : இது ஓரறிவை கொண்ட உயிரினமாக இருந்தாலும் , எவ்வாறு வாழ்நாள் முழுவதும் கொடுக்க முடிகிறது ?

ஒரு மனிதனை    எடுத்து கொள்வோம்:
ஆறு அறிவு இறைவனால் கொடுக்க படுகிறது .
2.Question : ஆறு அறிவு இருந்தாலும் , ஓரறிவை கொண்ட மரங்களை போல கொடுத்து கொண்டே இருக்க முடியவில்லை ஏன்?

3.Question : சிறிது கொடுத்து விட்டாலும் , நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது ஏன்?

With KindRegards,
Karthikeyan.J

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
 
 

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
 
 

No comments:

Post a Comment