Pages

Monday, March 11, 2013

[vallalargroups:4800] இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு !

 
                                       
 
                             பசித்திரு !         தனித்திரு !           விழித்திரு !
 
 
                               அருட்பெருஞ்சோதி !  அருட்பெருஞ்சோதி !
                               தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி !
 
      கொல்லாவிரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
      ஜீவகாருண்யமே மோட்சவீட்டீன் திறவுகோல் !
 
     எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 
    இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு !                பகுதி -2-
 
    அன்புஉள்ளம் கொண்ட ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம் நாம் நம் வாழ்க்கையில்
   உணர்ந்துகொள்ளவேண்டிய தத்துவபாடல் சிலவற்றை கொடுத்துள்ளோம் எனவே அன்பர்களே
 நாமும்   ஜீவகாருண்ய தயவோடு வாழ்ந்து பெறவேண்டியதை   விரைவில் பெற்று கொள்வோம்
 
     11,   உணவில்லை என்றாலே உயிருக்கு கேடு !
           கனவிலும் நனவிலும் கடவுளை நாடு !
           மனதினில் ஞானத்தின் மார்க்கத்தை தேடு !
           தினம்தினம் இறைவனை துதித்து கொண்டாடு !
 
     12,  ஆதாரம் ஆறாக அமைந்ததே தேகம் !
           நாதவிந்து காரசாரம் கலந்தாலே போதும் !
           வேதத்தின் மந்திரம் உன்னுள்ளே இப்போதும் !
           நாதனை நம்முள்ளே காணலாம் எப்போதும் !
 
     13,  பெட்டியில் பொருள்வைத்து சாவியால் பூட்டு !
           கெட்டியாய் பாதுகாக்கும் அறிவில்லா மட்டி !
           கூட்டினில் ஆவிபோகாமல் சாவிகொண்டு பூட்டி !
           விட்டோடாமல் பாதுகாக்க வழியறிந்தால் கெட்டி !
 
     14,  ஆவிக்கு இவ்வுடல் சாவியில்லாத பூட்டு !
           சாவிக்கு பூட்டுகள் கணக்கெல்லாம் கூட்டு !
           பாவிக்கு ஜென்மங்கள் எத்தனையோ காட்டு !
          ஜீவிக்க உடலுயிர் மூப்புவில் மாட்டு !
 
      15,  மானிடர் என்று மண்மேலே வந்தோமே !
            ஆணிபொன் அம்பல வாணனை மறந்தோமே !
            கணவுக்கு நிகரான வாழ்க்கை எடுத்தோமே !
            உணவுக்கு பொருள்தேடி ஓயாமல் அலைந்தோமே !
 
      16,  பிறவிக்கு துன்பம் பேராசையில் மாட்டிட்டால் !
            துறவிக்கு இன்பம் மூவாசையை வெறுத்திட்டால் !
            உறவுக்கு உயர்வு வள்ளலாய் வாழ்ந்திட்டால் !
            திறவுகோல் மெய்ஞானம் குருதேட நினைத்திட்டால் !
 
      17,  அலைகடல் துரும்புபோல் அலைந்துநாம் வாழ்ந்தோமே !
             நிலையில்லா வாழ்க்கையில் நிம்மதி இழந்தோமே !
             வலையென்ற பாசத்தின் உறவினால் அழிந்தோமே !
             விலையில்லா மாணிக்கம் அருள்ஜோதி மறந்தோமே !
 
       18,  விதிக்குதான் மனிதன் விளையாட்டு பொம்மை !
              மதியாலே மூவாசை வெறுத்திட்டால் நன்மை !
              பதியான பரமசிவன் பம்பரம்போல் நம்மை !
              விதியான கயிற்றினால் ஆடவிட்டான் உண்மை !
 
      19,   தேடிடும் செல்வத்தால் திமிர்கொண்  டாடாதே !
             வாடிட மனமதை துடிக்கநீ வையாதே !
             கூடிடும் பொன்பொருள் நிலையாய் தங்காதே !
             நாடிடும் உறவுகள் நம்மோடு வாராதே !
 
      20,  பிறவிதான் எத்தனை எடுத்திட்ட போதும் !
            துறவிபோல் வாழ்ந்திட்டால் தொல்லைகள் போகும் !
            அறம்பொருள் இன்பத்தால் இல்லறம் தங்கும் !
           அறமென்ற தருமத்தால் ஆனந்தம் பொங்கும் !
                        
                                                                                         (தொடரும் )
 
                                                                           இப்பாடல்களை எழுதியவர் 
                                                                           ( அன்பர் பொ.அன்பழக சாமி ,பேய் கோபுற வீதி, 
                                                                            திருவண்ணாமலை ) 
 
    எனவே அன்பர்களே நாமும் நம் வாழ்க்கையில் வாழும் கொஞ்சம் நாளில் பிற உயிர்களுக்கு உபகாரமாக வாழ்ந்து அதாவது பிற உயிர்களை தம்முயிர் போல் பாவித்து அவைகளின் துன்பங்களை 
கருணை உள்ளத்தோடு துன்பங்களை நீக்கி பசி என்று வருந்தும் உயிரினங்களுக்கு உணவு என்னும் மருந்தை கொண்டு அன்பர்களின் பசிப்பிணி போக்கி வாழ்ந்து வந்தால் ,கருணையே உருவான சின்னம்மையார்யீன்ற செல்வமாம்  நமது வடலூர் வள்ளல்பெருமான் வணங்கிய அருட்பெருஞ்சோதி ஆண்டவர் நம்முள்ளே காரியப்டுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை !
 
 
பசி என்று வருபவருக்கு  உணவுகொடு அதுவே ஜீவகாருண்யம் !
ஜீவகாருண்யமே மொட்சவீட்டீன் திறவுகோல் !
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன் !
 
ஆன்மநேய.அ .இளவரசன்
வள்ளலார் உயிர் வதை தடுப்பு இயக்கம் 
நெ.34,அண்ணா தெரு ,
திருவள்ளுவர் நகர் ,
ஜமின் பல்லாவரம் சென்னை -6000 043
கைபேசி:9940656549,9791076515
 

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
 
 

No comments:

Post a Comment