அறிவு வடிவென்று அறியாத என்னை
அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென்று அருளால் உணர்ந்தே
அறிவு வடிவென்று அறிந்திருந் தேனே.
பொருள்: எல்லாவற்றையும் கருவியில்லாது அறியும் ஆற்றல் உண்டு என்பதை அறியாதிருந்த என்னை, என்னுடைய இயல்பான சொரூபம் அறிவு தவிர வேறு இல்லை என்று அவன் கருணையால் உணர்த்தினான். நான் அறிவு சொரூபன் என்று அவனது சக்தியால் உணர்ந்தபோது, நான் அறிவு வடிவு என்று அறிந்து கருவி கரணங்களை விட்டு அறிவாகவே இருந்தேன்.
விளக்கம்: அங்கு எழும் ஒலி பரையின் ஆற்றலாகும். அதன் வழியே சென்றால் அகவுணர்வு பரனுடன் சேர்ப்பிக்கும். அப்போது ஆன்மா அறிவுமயமாக விளங்கும். இதுவே அருளால் அறிவது.
கருத்து: திருவருள் உணர்த்த ஆன்மா தான் அறிவு மயம் என்பதை உணரும்.
[நன்றி : திருமந்திர விளக்கம் - ஜி. வரதராஜன்]
Anbudan,
Vallalar Groups
To Receive Vallalar Messages - Click Subscribe
E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
No comments:
Post a Comment