Pages

Friday, November 25, 2011

Re: [vallalargroups:4390] இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.

உயர் திரு அன்பர அவர்களே !!

தொடரட்டும் உங்கள் பணி ...


 
Best Regards,

Saravanan MC
_______________________________________________________________
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி !!
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !



2011/11/24 sasikumar dilli <dsasikumar6@gmail.com>
Thanks
 
Regards
 
Sasi

௮ நவம்பர், ௨௦௧௧ ௧௦:௨௩ பிற்பகல் அன்று, mahalakshmi maruthapillai <mahalakshmi.m@gmail.com> எழுதியது:

Ayyah,
          Valgha Valamudan.Arutperumjothi Aandavaar karunaiyiyinaal Ellam Seiyal Kuda Aandavarai Vendikolgireen.
Anbudan Sakotharar Maruthapillai

2011/11/5 ELAVARASAN ANNAMALAI <elavarasansumathi@gmail.com>
 
 
 
     
                           
 பசித்திரு           தனித் திரு                விழித்திரு  
 
                                       
    அருட்பெருஞ்ஜோதி      அருட் பெருஞ்ஜோதி  
   தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி  
 
கொல்லா நெறியே  குவலயமெல்லாம்  ஓங்குக!
ஜீவகாருண்யமே   மோட்சவிட்டின்   திறவுகோல்!
 
எல்லா  உயிர்களும்  இன்புற்று   வாழ்க!
 
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.
 
இன்புறு சித்திகள் எல்லாம் புரிகவென்று
அன்புடன் எனக்கு அருள் அருட்பெருஞ்சோதி (அகவல் )
 
 
அன்பு உள்ளம் கொண்ட  சன்மார்க்க மற்றும் ஆண்மீக அன்பர்களுக்கு வந்தனம்  இந்த பழம்பெரும் பாரத பூமியிலே சேவூர் என்ற நகரத்தில் சந்துரு எனும் அன்பர் வாழ்ந்து வந்தார் இவருக்கு நற்குணம் வாய்த்த மனைவி அவள் பெயர் சாந்தா  இவள் தன் பெயருக்கு  தகுந்தாற்போல்  சாந்தகுனமுடையவள்  இவர்களுக்கு  இரண்டு பிள்ளைகள்  ஒருவன் பெயர் சுந்தர்  இன்னொருவன் பெயர் சுப்புராமன்    தம் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இனிது வாழ்ந்து வந்தார் அன்பர் சந்துரு இவருக்கு வடலூர்  வள்ளல் பெருமான் வணங்கிய கந்த பெருமான் மீது மிகுந்த பக்தி இவர் நாள்தோறும் அருகாமையில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று அந்த மால்மருகனை மனமுருகி வணங்கி வருவது வழக்கம் இப்படி இவர் மால்மருகனை வணங்கினாலும்  இவருக்கு வடலூர் வள்ளல் பெருமான் மீது அளவுகடந்த  மரியாதை  ஏன் என்றால் அவர்கள் காட்டிய ஜீவகாருண்ய நெறி மற்றும் பசிதவிர்த்தல் இவ்விரண்டும் சந்துருவை நெகிழவைத்தது ஒருமுறை வடலூர் சென்றுவரலாம் என்று தன் இனிய    குடும்பத்துடன் வடலூர் வந்து அய்யா அவர்கள் ஏற்றிய அணையா அடுப்பு தருமசாலை வேதபாடசாலை ஞானசபை முதலானவற்றை கண்டு பேரானந்தம் அடைந்தார்கள் இப்படி வடலூரில் கண்டுகளித்த நிகழ்வுகளில் தருமசாலையில் பசிதவிர்த்தல் நிகழ்வு இவரை மிகவும் ஈர்த்தது நாமும் நம் ஊரில் சாலை ஒன்று அமைத்து அதில் நித்தம் வரும் அடியார்களுக்கு பசிதவிர்த்தல் செய்யவேண்டும் என நினைத்து தம் ஊர் திரும்பியதும் அவர்தம்மில்லத்தில் அன்னதானசாலை அமைத்து அதில் நித்தம்  நல்லவன் தீயவன் ஜாதிமத பேதம் பார்க்காமல் அனைவருக்கும் பசிஎன்னும் நோய்க்கு உணவு என்னும் மருந்தை கொண்டு பசிப்பிணிபோக்கி  வந்தார்கள் இப்படி சீறும் சிறப்புமாக வாழ்ந்தும் வரும் இவர்களின் பிள்ளைகள் பருவவயதை அடைந்தார்கள்     அதில் மூத்த மகன் நற்குணம் கொண்டவன்  அவன் தம் தந்தையை போலவே ஜீவகாருண்ய சிந்தனையோடு செயல்பட்டுவந்தான்  இளையமகன் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றி கொண்டிருந்தான்  தம் இளைய மகன் பொறுப்பில்லாமல் இருக்கிறானே என நினைந்து இறைவன் அருட்பெரும்ஜோதியிடம் முறையிடலானார் இப்படி வேண்டும் அன்பருக்காக கருணை உள்ளம் கொண்ட வடலூர் வள்ளல் பெருமான் வணங்கிய அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அன்பரின் சொப்பனத்தில் தோன்றி தாம் தம் பிள்ளையை அருகில் உள்ள நகரத்திற்க்கு சென்று அங்கு உள்ள ஒரு ஏழை விவசாயிடம் ஒரு மூட்டை அரிசி பெற்று வருமாறு அனுப்பிவையுங்கள் என்று கூறி மறைந்தார் ஆண்டவர் இப்படி ஆண்டவர் சொப்பனத்தில் உரைத்தவாறு மறுநாள் காலை நித்திரை நீங்கியவுடன் காலைகடன்களை முடித்து நீராடி ஆண்டவனை வழிபட்டு தன் இளைய மகனை அழைத்து அருகில் உள்ள நகரத்திர்க்கு சென்று அங்கு உள்ள ஒரு ஏழை விவசாயிடம் ஒரு மூட்டை அரிசி பெற்று வருமாறு அனுப்பிவைத்தார் தந்தை உரைத்த படி  பக்கத்து ஊருக்கு புறப்பட்டு சென்றான் சுப்புராமன் போகும் வழியில் வேடன் வில்லினால் அடிப்பட்ட மான் ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் இருந்தது அவற்றை கண்டதும் இவன் மணம் நெகிழ்ந்து செய்வது அறியாது திகைத்தான் என்ன காரணம் இவனிடம் ஒரு சல்லிகாசு கூட கிடையாது அவற்றிற்கு வைத்தியம் செய்வதற்கு  இருந்தாலும்  மானின்  நிலைமையை  பார்த்த இவன் எப்படியாவது மானை காப்பாற்றவேண்டும் என நினைத்தான் அங்கே அவ்வழியாக செல்வந்தர் ஒருவர் வந்துகொண்டிருந்தார் சுப்புராமன்  அந்த   பெரும்செல்வந்தரிடம் சென்று அய்யா எனக்கு தாங்கள் சிறிது பணம் கொடுத்து உதவினால்  இங்கே உயிருக்கு போராடும் இந்த மானை காப்பாற்ற உதவியாக இருக்கும் நான் தங்களிடம் வாங்கும்  தொகையை திரும்பகொடுத்துவிடுகிறேன் என்றான் சுப்புராமன் செல்வந்தர் சுப்புராமனை பார்த்து எனக்கு உன்னை முன்பின் தெரியாது உன்னை நம்பி நான் எவ்வாறு பணம் தர இயலும் உன்னை பார்த்தாலும் பாவமாக இருக்கிறது ஒன்று செய்கிறாயா அருகாமையில் எனது மாட்டு தொழுவம் உள்ளது அவற்றை சுத்தம் செய்வதாக உறுதி அளித்தால் உனக்கு இப்பொழுதே பணம் தருகிறேன் என்றார் செல்வந்தர் சுப்புராமன் அவற்றிற்க்கு சம்மதம் தெரிவித்து சிறிதளவு பணம் பெற்றுகொண்டு அருகாமையில் உள்ள நகரத்திர்க்கு சென்று வைத்தியரை அழைத்து வந்து உயிருக்கு போராடிய நிலையில் உள்ள மானிர்க்கு வைத்தியம் செய்து அவற்றை நல்ல முறையில் குணம் அடைய செய்தான் சுப்புராமன் குனம்மடைந்த மான் சுப்புராமனை பார்த்து  தாங்கள் தங்கள் வாழ்வில் இறைவன் அருட்பெரும் ஜோதியின் கருணையினால் எல்லா நலன்களும் பெற்று  வாழ்க என  வாழ்த்தி சென்றது 
 
சுப்புராமன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற  செல்வந்தரின்   வீட்டிற்க்கு  அவருடன் சென்றான்  செல்வந்தரின்  மாட்டு தொழுவம் பல நாள் சுத்தம் செய்யாமல் சேறும் சகதியுமாக இருந்தன அவற்றை எல்லாம் கொஞ்சமும் மணம் சுளிக்காமல் சுத்தம் செய்துவிட்டு அங்கிருந்து விடைபெற ஆயத்தமானான் ஆனால் அந்த செல்வந்தர் சுப்புராமனை பார்த்து  நீ எங்கிருந்து வருகின்றாய் எங்கு என்ன காரியமாக   செல்கின்றாய் என விசாரித்தார் சுப்புராமன் தான் தன் தந்தை சொல்லி அனுப்பிய படி அருகில் உள்ள நகரத்திர்க்கு சென்று அங்கு உள்ள விவசாயிடம் ஒரு மூட்டை அரிசி பெற்று வருமாறு அனுப்பிவைத்தார் தந்தை உரைத்த படி  வந்து கொண்டிருந்தேன் இவ்வாறு நான் வரும் வழியில் இந்த  மானின் நிலை கண்டு உதவினேன் என்று உள்ளதை உள்ளவாறு கூரினான் அவன் அருகாமையில் இருந்த அந்த செல்வந்தர் உன்னுடைய தந்தையார்  அரசி  வாங்கி வரும்படி அனுப்பிவைத்த அந்த ஏழை விவசாயி நான்  தான் என்றார் சுப்புராமன் அவரைப்பார்த்து இவ்வளவு செல்வம் படைத்த தங்களையா என் தந்தையார் ஏழை என்று கூறினார் அதற்க்கு அவர் இவ்வளவு செல்வம் இருந்து என்ன ஏழைகளின் பசிப்பிணி போக்காத  செல்வம் இருந்தும்  நான்  மனதளவில்  இன்னும் ஏழைதான்   தான் என்றார் அவர் சுப்புராமன் தான்  இவ்வளவு  காலம் பொறுப்பில்லாமல் வீண் காலம் கழித்துவிட்டேன் தாங்கள் உணர்த்திய இந்த செயலால் உண்மை பொறுப்பினை உணர்ந்து கொண்டேன் ஆகையால்  இதுமுதற்கொண்டு  நான் என் வாழ்நாளை உழைத்து   செம்மைபடுத்திகொல்வேன் என்றான் அந்த  செல்வந்தரின் வேண்டுகோளுக்கிணங்க தன் தந்தையின் சம்மதத்துடன் அங்கேயே  தருமசாலை மற்றும் வடலூர் வள்ளல் பெருமான் உபதேசித்த இயற்க்கை மூலிகை  மருத்துவமனை     அமைத்து  பசிஎன்று வருபவர்களுக்கும் உடல் உபாதை என்று வருபவர்களுக்கும் அவர்தம் நோய் நீக்கி செம்மையாக செயல் பட்டு வந்தார்கள்  
     
  
 எனவே அன்பர்களே நாமும் நம் வாழ்வில் ஜீவகாருண்ய சிந்தனையோடு வாழ்ந்து பசிஎன்று வருபவர்களுக்கு உணவு என்னும் மருந்தை கொண்டு அவர் தம் பசிப்பிணி போக்கி வந்தால் எல்லாம் வல்ல அருட்பெரும்ஜோதி நம்முள்ளே காரியப்டுவார் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை.
 
எங்கெங்கிருந்து உயிர் ஏதேது வேண்டினும்
அங்கங்கிருந்து அருள் அருட்பெரும்ஜோதி (அகவல் )
 
 
பசி என்று வருபவர்களுக்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம் !
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திரவுகோல்!
 
 
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன் !
 
ஆன்மநேய: அ.இளவரசன்,
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்!
34, அண்ணா தெரு ,
திருவள்ளுவர் நகர்,
ஜமீன் பல்லாவரம்,
சென்னை-600 043
9940656549

 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க




--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment