நெற்றிக் கண்ணைத் திறப்பதற்கு
ஒரு கதவும் ,ஒரு பூட்டும் இருக்கிறது!
அந்தப் பூட்டை அருள் என்னும் திறவுகோலைக் கொண்டு
திறக்க வேண்டும்.
அருள் என்பது..
ஆன்ம இயற்கையாகிய
பெருந்தயவு என்கிறார்-- வள்ளல் பெருமான்!
தயவுதான் நம்மை
மனிதராக்கக் கூடியது!
பசியே கூட
இறைவன் அளித்த ஓர்
உபகாரக் கருவி என்கிறார் பெருமான்!
பசித்தாரைக் கண்டால்
அருள் சுரக்கிறது.
அருள் சுரந்தால் ஜீவகாருண்யம் பிறக்கிறது.
ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்
என்கிறார் -வள்ளலார்.
எந்த நெருடலும் இல்லாமல்
நெஞ்சம் திறக்கிறதா இல்லையா..?
வள்ளலார் நம்மை வாழ்விக்கவே வந்தவர் -
நாம் தான் அவரைச்
சிக்கெனப் பிடிக்கத் தெரியாமல்
சீரழிந்துவிட்டோம் !
கவிஞர் கங்கை மணிமாறன்
சென்னை-120
செல்:944308824.
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment