Pages

Thursday, June 23, 2011

Re: [vallalargroups:4222]

PUNNIAM SEIVOM, JEEVA VUDAMBU-SIVA VUDALAGA PIRARTHANAI&DHIYANAM SEIVOM. DHINAMUM THIRUVARUTPA PADIPPOM.
MANAM  VASAPPADUM.
2011/6/21 anandhan loganathan <anandhanl324@gmail.com>
THIRU ARUTPA..


பொய் விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர்
புலை கொலைகள் புரிகின்றீர் கலகல வென்கின்றீர்
கைவிளக்கு பிடித்து ஒரு பாழுங் கிணற்றில் விழுகின்றீர்
களியரெனக் களிக்கின்றீர் கருத்து இருந்தும் கருதீர்
ஐவிளக்கு மூப்பு மரனாதிகளை நினைத்தால்
அடிவயிற்றை முருக்காதோ கொடிய முயற்று உலகீர்
மெய்விளக்க எனது தனித்தந்தை வருகின்ற தருணம்
மேவியது ஈண்டு அடைவீரே ஆவி பெருவீரே.

என்கிறார் வள்ளலார் ஆதலால் ரஜினிக்கு எந்த குறை இருந்தாகும் அவர் புலால்
மறுத்து புகை பிடிப்பதை நிறுத்தினால் சீக்கிரம் நல்ல குணமடைவார் இது
சத்தியம் உண்மையாகும்.

ஏண் இதை எழுதுகிறேன் என்றால் ரஜினி மீது எனக்கு அளவில்லாத பற்றுண்டு
,அவர் நல்லவர் அவருக்கு போதித்த போதகர்கள் எப்படியோ தெரியவில்லை.எத்தனை
கோடி பணமிருந்தாலும்.எவ்வளவு புகழ் இருந்தாலும் ,தன்னுடைய உடம்பை
கவனிக்கவில்லை என்றால் அதில் எந்த பயனும் இல்லை.

அதைப்பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;-

உடம்பு வருவகை அறியீர் உயிர்வகையை யறியீர்
உடல் பருக்க உண்டு நிதம உறங்குதற்கே யறியீர்
மடம்புகு பேய் மனத்தாலே மயங்க்குகின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறை கற்றறியீர்
இடம்பெறு பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே
எண்ணி எண்ணி யிளைகின்றீர் ஏழை யுலகிரே
நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்னுமினோ புண்ணியம் சார்வீரே
                                 -VALLALAR..

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment