Pages

Monday, May 23, 2011

[vallalargroups:4126] பொன்மார்க்கம்.

அருட் பெரும் ஜோதி!             அருட் பெரும் ஜோதி!
தனிப் பெரும் கருணை!         அருட் பெரும் ஜோதி!

சன்மார்க்கம் பொன்மார்க்கம். ஏன் தெரியுமா?
சன்மார்கீ ஒவ்வொரு மனிதரையும் 
அருட் பெரும் ஜோதி உறையும் 
அன்பாளராகவும்,  பண்பாளராக்கவுமே காண்கிறான்.

சன்மார்க்கி எவரது குற்றத்தையும் காண்பதே இல்லை.
சன்மார்க்கி அடுத்தவர் குறைகளை மிகைப்படுத்தாமல்,
அவைகள் தாற்காலிக மானவை என்று அறிந்து 
அன்புடனே அவன் அனைவரையும் நோக்குகிறான்.
அன்புடை நோக்கால் அவன் அகிலத்தையும் நேசிப்பான்.
அகிலத்தில் அனைத்தையும் நேசிக்கும் பண்பால் 
அவன் அருளாளன் ஆகிப் பின்னர் அவ்வருளையும் 
அனைவருக்குமாக்கிக் கருணை கூர்வான்.
அன்பும் அருளும் கருணையாகி 
கருணையின் பெருக்கில் 
அருட் பெரும் ஜோதியாய்,  தனிப்பெரும் கருனையாய்
ஒளிர்வான்.
ஒளிரும் அவன் பொன்மேனி அடைந்து 
பெருவாழ்வில் ஒளிர்வான்.
எனவே, ஒவ்வொரு சன்மார்கியும் 
பொன்மார்க்கத்தில் என்றென்றும் பொலிவதே
வள்ளல் பெருமானாரின் உள்ளத்து அருளாம்.

இதோ வள்ளலின் அருள் மிகு திருவுளம்!

"சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய 

ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை ,

எங்களுக்குள் 
                எக்காலத்தும் 
                           எவ்விடத்தும்                                 
                                           எவ்விதத்தும் 
                                                            எவ்வளவும் விலகாமல் 
நிறைந்து விளங்கச் செய்தருளல் வேண்டும்.

                                              எல்லாமாகிய 
                                      தனிப்பெரும்தலைமை 
                              அருட்பெரும்ஜோதி ஆண்டவரே!
                         தேவரீர் திருவருட் பெரும் கருணைக்கு
                                          வந்தனம் !  வந்தனம்!!

             அருட் பெரும் ஜோதி!           அருட் பெரும் ஜோதி!
             தனிப் பெரும் கருணை!        அருட் பெரும் ஜோதி!

                                              பாலு குருசுவாமி.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment