Dear all,
We have above attached Great message of Arutperum jothi andavar.
World peace and world government will form in very short period and
soon...
If any more details needed, please contact below person in mobile numbers.
With loving regards,
Dr.M.V.M.Muthu Phd., Coimbatore. 094437 20089
Prof. Dr.R.Karthiyasamay Phd., Chennai. 094424 92948
Mr.K.Kamalakannan BA.,BL., Chennai. 095432 55092
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்வை பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். இது ஜாதி மதம் இனம் பணவசதி இதற்க்கு எல்லாம் அப்பாற்பட்டது . எல்லோரும் மனிதன் என்ற நிலையில் ஆரம்பம் செய்ய வேண்டியது.
ReplyDeleteஅடிப்படையாக ஒரு விசயத்தை கண்டுகொள்வது இல்லை! நான் யார் என்பது. நான் உயிர். உயிர் என்பது இறைவன் அம்சம் கொண்டது. இதை தான் கடந்து உள் சென்று பார்க்க வேண்டும். இது இரவும் பகலும் நம் உடம்பை சிறப்பாக பார்த்து கொள்கிறது. இப்படி ஒரு சக்தியை கண்டு கொள்வதே இல்லை. நாம் வாழும் வாழ்வே சரியற்றது அல்லவே!!
இறைவன் ஒருவரே! இதை தான் எல்லா மதங்களும் ஞானிகளும் சொல்கிறது.
அவர் ஒளி வடிவில் உள்ளார். அவரே அருட்பெருஞ்சோதி என வள்ளலார் சொல்லுகிறார்.
உயிர் சிறிய ஒளி ! அதன் இருப்பிடம் சிர நாடு ஆகும். தலை நடுவில் உள்ளது. சித்தர்கள் ஞானிகள் அனுபவமாக கண்ட ஒருவிசயம்..
அதுவே பேரானந்தம். நமது இயல்பு அதுவே. உலகில் உள்ள ஒருவரும் நம்மை நாம் கண்டால் உயிரை கண்டால் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பிறப்பின் காரணம் இதுவே.
நாம் உயிரை காண முடியாத தற்கு காரணம் கர்ம வினையே. இந்த வினையே நம் வாழ்வில் வரும் துன்பத்துக்கு காரணம். வாழ்வில் நலமாக இருக்க தன்னை உணரவேண்டும்.
நாம் வாழ்வில் எல்லா வற்றையும் கற்றது பிறரிடம் இருந்தே... அதுபோலே
இதையும், அனுபவம் பெற்றவரிடம் இருந்தே கற்க வேண்டும், அவர் குரு.
ஞானத்தில் - இறைவன் திருவடியை பரிபாசையாக அடி,தாள்,புருவமத்தி என்று பல பெயரை சொல்லி உள்ளனர்.
இறைவன் திருவடி என்பது நமது கண்மணியே. அதுவே ஒளியான உயிர் துலங்கும் இடம். அதுவே உட்புகு வாசல்.
குருவை சந்தித்து திருவடி தீட்சை பெற்று, தவம் செய்தால் கர்ம வினை தீரும். தவம் என்பது சும்மா இருப்பது. தீட்சை பெற்ற பிறகு கண்மணியில் உணர்வுடன் இருப்பதே நாம் செய்ய வேண்டியது. இதை கண் திறந்து தான் செய்ய வேண்டும்.
முக்கியமான ஒழுக்கம் புகை பிடிக்க கூடாது, மது கூடாது, அசைவ உணவு கூடாது.
இந்த விசயத்தை மற்றவரிடம் சொல்லுங்கள். அதுவே ஞான தானம். வள்ளல் பெருமான் அருள் கிடைக்கும். மற்றவரும் நல்ல படியாக வாழ வேண்டும் அல்லவா? ரகசியம் என்று மறைக்காதீர். வள்ளல் பெருமான் உலகி யலீர் வம்மின் இங்கே மரணமில பெருவாழ்வு பெறலாம் என்று சொன்னார்.
www.vallalyaar.com
sagakalvi.blogspot.in
kanmanimaalai.blogspot.in