தேகம் நீடிப்பதற்குத் தீபப் பிரமாணம்: அகல் - தேகம், எண்ணெய் - இரத்தம், திரி - சுக்கிலம், பிரகாசம் - ஆன்மா, ஆதலால் மேற்குறித்த தீபத்தினது திரியைத் தூண்டிவிட்டாலும், காற்றுள்ள இடத்தில் வைத்தாலும், காற்றில்லா விடத்தில் வைத்தாலும், பெருந்தீபச் சமீபத்தில் சேர்த்தாலும், விட்டில், பிரமரம், மூஷ'கம், மார்ச்சாலம் முதலிய அஜாக்கிரதையாலும், மேற்படி தீபம் நஷ்டமாகும். புத்திமானிடத்தில் தீபத்தினது உபகரணங்களைக் கொடுத்து ஒரு நாளைக்குத் தீபம் பார்க்கச் சொன்னால், புத்தி விசாலத்தால் மேற்குறித்த அஜாக்கிரதையின்றி, தகளிக்குச் சூடேறாமலும், எண்ணெயில் அழுக்கு ஏறாமலும், வர்த்தி தூசு இறுகல் தளர்ச்சி பருமன் இவைகளில்லாது - சிறு திரி போட்டு, அடிக்கடி தூண்டாமல், தீபத்தை மற்றொரு தினமுமிருக்கச் செய்விப்பான். மேற்குறித்த குற்றங்களோடு தீபமேற்றினால், பதினைந்து வினாடி அல்லது கணம் இதில் சிட்டம் கட்டுவது இயற்கை. தூசு போக்கி வைத்தால், பதினைந்து நிமிஷத்திற்கொருவிசை சிட்டங் கட்டும். விசேஷ அறிவுடையவன் மேற்குறித்த லோகம் முதலியவற்றில் தீபம் வையாது, வைர படிகங்களில் அமைத்த தீபத்தகளியில், மேற்குறித்த தீபோபகரணங்களைத் திராவகமாக்கி, சுத்தாக்கினியால் பிரகாசமுண்டாக்குவான். அப்போது சிட்டமும் பிரகாச நஷ்டமும் நேரிடாது. ஆதலால் நம்முடைய தேகத்தில் சுக்கிலமாகிய திரியை விசேஷம் தூண்டி அடிக்கடி பெண்ணிடத்தாகிலும் வேறு தந்திரத்தாலாயினும் செலவு செய்து விட்டால், திரிபோய் ஆயுளாகிய பிரகாசம் நஷ்டமாய்விடும். ஆனால் சிட்டத்தை மாத்திரம் - தொள்ளாயிரத்து அறுபது நாழிகைக் கொருதரம் தேகசம்பந்தஞ்செய்து ஆபாசப்பட்ட சிட்டமாகிய சுக்கிலத்தை வெளிப்படுத்திவிட வேண்டும். இது மந்தனுக்கு. அதிதீவிர பக்குவியாய் மேற்குறித்த வண்ணம் கடவுளிடத்தில் இலக்ஷியமும் ஜீவர்களிடத்தில் தயவுமுடையவனுக்கு சிட்டம் போன்ற சுக்கிலாபாசம் நேரிடாது. தேகம் நீடிக்கும்.பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க சுத்த சன்மார்க்க அன்பன் பாலமுருகன்
காஞ்சிபுரம் --
To register to this vallalargroups, and Old Discussions
http://vallalargroupsmessages.blogspot.com/ To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment