Pages

Saturday, October 30, 2010

[vallalargroups:3644] இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.

 
  
                                         
    பசித்திரு           தனித்திரு              விழித்திரு  
 
                                      
    அருட்பெரும்ஜோதி      அருட்பெரும்ஜோதி 
   தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
 
கொல்லா நெறியே  குவலயமெல்லாம்  ஓங்குக!
ஜீவகாருண்யமே   மோட்சவிட்டின்   திறவுகோல்!
 
எல்லா  உயிர்களும்  இன்புற்று   வாழ்க!
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.
 
அன்பு உள்ளம் கொண்ட ஆண்மீக அன்பர்களுக்கு வந்தனம் நாம் செய்யும் நல்ல செயல்களினால் நாம் நம் வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடையலாம் என்பதற்க்கு உதாரணமாக சகவீரர்களின்   நிகழ்வு பற்றி பார்ப்போம்  
 
 
அன்பர்களே முன்பு ஒரு காலத்தில் திருக்குவளை என்ற நாடு அந்த நாட்டினை ஆண்டு வந்த சீராளன் என்ற  மன்னன் தன் நாட்டினை கண்ணை இமை காப்பதுபோல் தன் குடிமக்களை  யாதொரு குறையுமில்லாமல் சீறும் சிறப்புமாக ஆண்டுவந்தான் அவனுடைய நாட்டில் புலியும் பசுவும் ஒரு குளத்தில் நீர் அருந்தும் முயலும் மானும்  துள்ளிவிளையாடும்  ,ஆந்தையும் காகமும் கூடி  பழகும்   இப்படி நல்லதொரு அரசாட்சி நடைபெறும் நாட்டில் சில புல்லுருவிகளும்
 வாழத்தான் செய்வார்கள்   என்பதற்க்கு உதாரணமாக  அந்நாட்டின் போர்ப்படை தலைவன்  நந்திவர்மன் தன் வீரத்தின் மீது  மிகுந்த கர்வம்  கொண்டிருந்தான் தான் எப்படியாவது இந்த நாட்டின் மன்னனாகவேண்டும் என்ற பேராசை  இப்படி ஆசையும்  கர்வமும்   கொண்ட  நந்திவர்மனுக்கு  தகுந்த புத்தி புகட்டவேண்டும்  என்று நரேந்திரன் என்ற இன்னொரு   போற்படைவீரன் எண்ணினான்    நரேந்திரன் வடலூர் வள்ளல் பெருமான் கண்ட   அருட்பெருஞ்சோதி ஆண்டவரிடத்தில்   அளவுகடந்த  நம்பிக்கை  வைத்து பிற உயிர்கள்  படும் வேதனைகள் துயரங்கள்
துன்பங்களை   எல்லாம்  தான் அனுபவிப்பதாக எண்ணி  அவைகளின் துன்பங்களை போக்கி மகிழ்வான்  மற்றும் பசி என்று யார் வந்தாலும் அதாவது ஏழைகள் அருந்தபசிகள் என்று யார் வந்தாலும்  அவர்களை இன்முகத்தோடு உபசரித்து அவர்தம் பசியை போக்கி வந்தான் நரேந்திரன்
 
ஒருமுறை வேற்று   நாட்டு அரசன் ஒருவன் அவர்களின் நாட்டின் மீது படையெடுத்து  வந்தான் தன்னுடைய நாட்டையும் அரசனையும் காப்பது போர்ப்படை தலைவனுடைய கடமை அல்லவா  ஆகவே நரேந்திரன் உடனே அரண்மனை வாயிலை அடைந்து தன்தலைவனிடம் நம்நாட்டின் மீது வேற்று நாட்டு மன்னன் போர்முரசு  கொட்டி கொண்டு   தன்சேனை  பரிவாரங்களோடு நம் நாட்டின் மீது படையெடுத்து  வருகிறான் என்று கூறினான்     ஆனால் நந்திவர்மன் என்ற போர்ப்படை தலைவனோ இவற்றை எல்லாம்  கேட்டுவிட்டு  யோசிக்கலானான்  எவ்வாறுயெனில் தன் புஜபலத்தின் மீது கர்வம் கொண்டு  எப்படியாவது  மாற்று நாட்டு அரசனோடு நாம் போரிட்டு வெற்றி செய்தியோடு நாம்  நம் அரசனை சந்தித்தால்  நம்முடைய  ராஜாவின் மணம் மகிழ்ந்து நம்மை பாராட்டுவார் ராஜாவிர்க்கோ 
 பிள்ளை இல்லை  ஆகையால் அவருக்கு பிறகு இந்த நாட்டை ஆளும் தகுதி  எனக்கே இருக்கிறது  என்று  அவர்தம் ராஜியபொருப்பை நமக்கு அளிக்கலாம் அல்லவா என்று தன் வீரத்தின் மீது கர்வம் கொண்டவனாய்   உடனே சகவீரர்களை   அழைத்து போருக்கு  புறப்படுவோம்  வாருங்கள்  என்றான் நந்திவர்மன்  தன் தலைவன் ஆணைக்கிணங்க போர் முரசு கொட்ட அனைவரும் போருக்கு புறபட்டார்கள்  எதிர்நாட்டு படையின் அருகில் சென்று இப்படை தோர்க்கில் எப்படை வெல்லும் என்று   அரைகூவல் விடுத்து    அனைவரையும் தாக்குங்கள் என்று போரிட்டார்கள்  எவ்வாறுயெனில் பூமியே அதிரும் அளவிற்ர்க்கு   தரைப்படை  வீரர்கள்  தரைப்டையுடனும் அலைகடல் சீற்றத்தை போல்  குதிரைப்படை வீரர்கள் வெகுண்டெழுந்து   குதிரைப்படையுடனும் கார்மேகத்தில் இடியும் மின்னலும் ஒன்று சேர்ந்து தாக்கினால் எவ்வாறு இருக்குமோ அதைப்போல  யானைப்படை வீரர்கள் யானைப்படையுடனும்  மோதினார்கள்   சிங்கமும் சிறுத்தையும் சண்டையிட்டால் எவ்வாறு இருக்குமோ அதை போல் போர்ப்படை தலைவன் நந்திவர்மனும்  வேற்றுநாட்டு அரசனும் மோதினார்கள் இறுதியில் வேற்றுநாட்டு அரசன் தன்கையில் இருந்த வில்லில் நான்நேர்ரி அம்புதொடுத்தான்  வில்லில் இருந்து புறப்பட்ட அம்பானது
விண்ணுலகம் அதிரும் அளவிற்க்கு படைத்தலைவனை நோக்கி வந்துகொண்டிருந்தது இவற்றை கவனித்த நரேந்திரன் தம்படைதளைவனை காப்பதற்க்கு மாற்று நட்டு அரசன் தொடுத்த அம்பை எதிர்கொள்வதற்கு  ஆயத்தமானான்  ஆனால் அதற்க்குள் அம்பானது நரேந்திரனின் மார்பில் அம்பு பாய்ந்து விட்டது  இதை கவனித்த நந்திவர்மன்  அரண்மனை வைத்தியரை  அழைத்து தனக்கு நேர்ந்த ஆபத்தில் இருந்து என்னை காப்பதற்க்கு தன் உயிரையும் பொருட்படுத்தாமல் செயல்பட்ட  நரேந்திரனுக்கு வடலூர் வள்ளல் பெருமான் கண்ட இயற்க்கை மூலிகைகளை கொண்டு  
வைத்தியம்   செய்து  அம்பினால் ஏற்பட்ட காயங்களை குனம்மடைய செய்தார் அரண்மனை வைத்தியர்,  நரேந்திரன் சிதம்பரம் ராமலிங்க அடிகள் குறிப்பால் உணர்த்திய இயற்க்கை மூலிகைகளை தன்னுடல் பூரண குணம் அடைய செய்த அரண்மனை வைத்தியருக்கு நன்றி சொன்னான் நரேந்திரன்  
 
 இறுதியில் படைத்தலைவன் நாம் நம் வீரத்தின் மீது கொண்ட  ஆணவத்தினால்  அல்லவோ   இவ்வாறு நிகழ்ந்தது  என்று வேதனை அடைந்தான் அக்கணமே தன் வீரத்தின் கொண்ட கர்வம் அனைத்தையும் விடுத்தது    மீண்டும் அவன் தன் முழு பலத்தோடு  எதிர்நாட்டு அரசனோடு   போரிட்டு வெற்றிபெற்றான் 
இவ்வாறு அருட்பெரும்ஜோதியின் கருணையினால்  தன் கர்வம் நீங்க பெற்ற நந்திவர்மன் தக்க சமயத்தில் தன் உயிரையும்  பொருட்படுத்தாமல் என் உயிரை காத்த நரேந்திரனுக்கு அரசனிடத்தில் நடந்த நிகழ்வுகளை கூரி தக்க சன்மானம்  பெற்று தரவேண்டும் என்று அரண்மனை வைத்தியருடன்  படைத்தலைவன் போரின்  வெற்றி செய்தியை தெரிவிக்க    அரசனை காண அரசவைக்கு வந்தான் நந்திவர்மன் போரில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் ஒன்று விடாமல் அரசனுக்கு  நந்திவர்மனும்   வைத்தியரும்    எடுத்து சொன்னார்கள்  இவற்றை எல்லாம் கேட்ட மண்ணன் நரேந்திரனுக்கு அந்நாட்டின் பிரதான மந்திரி பதவியை கொடுத்தார்  உண்மையை  உள்ளவாறு  உரைத்த 
 படைத்தலைவனுக்கு தன் நாட்டின்  அரியணையை  கொடுத்து 
 இனிமேல் தாங்கள் எங்கள் முன்னோர்கள் கட்டி காத்த வடலூர் வள்ளல் பெருமான் கண்ட  ஜீவகாருண்யத்தையும்  பசிப்பிணி போக்குதலையும்  யாதொரு குறையுமில்லாமல்  செய்யுங்கள் அப்பொழுது எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி தங்களுக்கு யாதொரு குறையும் நிகழாவண்ணம் செயல்படுவார்  என்று கூரி அவர்களிடம் இருந்து விடைபெற்று கொண்டு  தன் இல்ல  துணைவியாரோடு அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி  தனிப்பெருங்கருணை  அருட்பெருஞ்சோதி  என்ற மகா மந்திரத்தை ஜெபித்தவாறு தன் இறுதி நாள் வரை வாழ்ந்து வந்தார்கள்  
 
இது நாள்வரை  தன் வீரத்தின் மீது கொண்ட  கர்வம் நீங்கி  படை தலைவன் நந்திவர்மன் தன் உயிரை காப்பாற்றிய பிரதான மந்திரி நரேந்திரனுடன்   தன் மனனன்  உரைத்தபடி வடலூர் வள்ளலார்  கண்ட  ஜீவகாருண்யத்தையும்   பசிப்பிணி போக்குவதற்க்கு அவர் தம்  நாட்டில் பல தரும சாலைகள்  தொடங்கி    அதில் நித்தம் பசி என்று யார் வந்தாலும் அவர்தம் பசிபினிபோக்கி வந்தார்கள் இவ்வாறு சீறும் சிறப்புமாக விளங்கிய நாடு இப்பொழுது எவ்வாறு உள்ளது என்றால் காக்கை குருவிகள் தானியங்களை உண்ண வ்ந்தால் அவற்றை விரட்டாத நாடாக மனனன் கொலோச்சும் நீதிமான்  நீர் வளமும் நிலவளமும் செழித்து ஒங்க பெற்று திருடர் பயமே இயல்லாத நாடாக திகழ்ந்தது  இவ்வாறு   ஆட்சி செய்த  நந்திவர்மனை மக்கள்  மாமன்னர்  வாழ்க  என்று  வாழ்த்தினார்கள்
 
எனவே அன்பர்களே நாமும் நம் கர்வம் நீங்கி பிற உயிர்கள் படும் துயரங்களை போக்கி  அவற்றின் பசிப்பிணி போக்கிவந்தால்  எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி நம்முள்ளே காரியபடுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
 
  
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
 
See full size image
 
 
 
 
 
 
கொல்லா நெறியே  குவலயமெல்லாம்  ஓங்குக!
 
  
See full size image
 
 
 
 
  
 
ஜீவகாருண்யமே   மோட்சவிட்டின்   திறவுகோல்!
   
பசித்தவருக்கு  உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்
 
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய  அன்பன்
 
அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
நெ.34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
கைபேசி எண்.9940656549
      

  

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment