Pages

Friday, October 8, 2010

[vallalargroups:3529] Vallalar Thoughtz : பயம் கூடவே கூடாது

Dear All,

* சூரியோதயத்திற்கு முன் தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். அதிகாலைப் பொழுது கடவுளைத் தியானம் செய்ய ஏற்றவேளை. இவ்வேளையில் விபூதி தரித்துக் கொண்டு கடவுளை சிந்திப்பது மிகவும் நல்லது.

* எந்த விதத்திலும் உணவில் புலால் சேர்க்கக்கூடாது. எவ்வளவு சுவையுள்ளதாக இருந்தாலும் அளவோடு உண்பது சிறப்பு. பகலில் சிறிது நேர ஓய்வும் கூட உடலுக்கு மிகவும் பயனுடையதாகும்.

* மாலை வேளையில் கொஞ்ச தூரம் வியர்க்கும்படியாக நடை பயில வேண்டும். இரவு உணவு பகல் உணவைக் காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும். எப்போதும் பயப்படுதல் கூடாது

* கொலை, கோபம், சோம்பல், உரத்துப் பேசுதல், பொய், பொறாமை, கடுஞ்சொல் இவையெல்லாம் அறவே தவிர்க்க வேண்டியவை. உற்சாகத்தை எப்போதும் இருக்கும்படியான நல்ல மனநிலை வேண்டும்.

* உடலுக்கு உயிர் ஒன்றே. அதுபோல, இவ்வுலகம் முழுமைக்கும் கடவுள் ஒருவரே. தெய்வங்கள் பல என்று சிந்திப்பது திருவருளைப் பெறாதவர்கள் சொல்வதாகும்.


--
With Regards,
S.Sathesh Kumar
+919444426032.



--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment