நேராக சன்மார்கிகலோடும் மற்ற ஞானிகலோடும் தொடர்பு கொள்ள இயலாதவர்களுக்கு இந்த தளம் ஒரு இணையற்ற சத்விசார மையம்.
அன்புடன்
சிவா
dear kathivelu ayya,நன்றாக கூறினீர்கள். விளக்கம் அற்புதம். இதில் 8 என்பது அ என்பதை குறிக்கும். அ - அகராம் என்றால் உயிராகும். 2 என்பது தமிழ் எண் வடிவத்தில் ௨ என்பதாகும். ௨ - உகாரம் உடலை குறிக்கும்."எட்டும் இரண்டும் அறியாத என்னை
எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்
எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்"
உடலையும் உயிரையும் சேர்க்கும் முறையை அறிவினால் அறிந்தால் உடலும் உயிரும் லிங்கம் (சிவம்) ஆகும் என்பது இறவாநிலை ஆகும். உயிர் உடலை பிரியவிட்டால் இறப்பு வராது. இறப்பு வரவில்லை என்றால் பிறப்பு வராது.எட்டோடு இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர்எத்துனை கொள்கில்லீர் பித்துலகீர்.எட்டோடு இரண்டு சேர்த்து எண்ணினால் என்ன வரும். 10 வரும். நம் உடம்பில் ஒன்பது வாசல் உள்ளது இது எல்லாருக்கும் தெரியும். ஆனால் பத்தாவதாக ஒரு வாசல் இருக்கிறது. அந்த வாசல் திறந்தால் தான் இறைநிலை விளக்கம் கிடைக்கும்.எட்டு இரண்டும் என்ன என்று மயங்கிய வென்தனக்கேஎட்டாத நிலையெல்லாம் மெட்டுவித்த குருவேஇடது மூக்கு வழியாக செல்லும் காற்றுக்கு - இடக்கலை என்றும். வலது மூக்கு வழியாக செல்லும் காற்றுக்கு - வடகலை என்றும் சொல்லுவார்கள். மூலாதாரம் என்பது எல்லோரும் முதுகு தண்டின் அடிவோரத்தை சொல்லுவார்கள். ஆனால் உடம்பு எடுப்பதற்கு மூலகாரணமாகிய உயிர் ஆகிய ஆகாரமே மூலாதாரமாகும். உயிர் இருக்கும் இடமே சுழுமுனை (உத்திர ஞானசபை) . ஆக எட்டு என்பது புலன்கள் ஐந்தும் ஆகாரம் ஒன்றும் இடகலை வடகலை இரண்டும் சேர்ந்த கூட்டுதொகை ஆகும். இந்த எட்டும் சேரும் போது சத்தம்( நாதம்) உண்டாகும். அந்த சத்தம் சங்கின் ஓசை ஆகும் அதில் பிரணவ ஒலியாகிய ஓம் என்று ஒலிக்கும் பின்னர் சத்தம் அடங்கி சத்தம் இல்லாத இடத்தில உகாரத்தில் என்ற உடம்பில் ஒடுங்கும். உடம்பு சித்தி பெரும்.தேகம் ஞானமடி- அகப்பை சித்தர் பாடல். ஞான வடிவம் பெற்றுகொள்ளலாம்.இதனால் தான் சிறு ஒளி கண்டு ஏமாந்து விடாதீர். அதற்கு பின்னல் நாதம் ஒலிக்கும் அது அடங்கும் பின்னரே சும்மாஇருக்கும் சுகம் கிடைக்கும்.ஆடாதீர் அசையாதீர் வேறொன்றை நாடாதீர்பொய் உலகைநம்பாதீர் என்கிறார் வள்ளலார்இது இறைவனாகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவர் மேல் அசையாத ஆடாத நம்பிக்கையுடன் மாறாத அன்புடன் இருந்தால் மட்டுமே விளங்கும்.சும்மா இருந்தால் சோத்துக்கு நஷ்டம் வரும். சும்மா இருந்தால் தானே சோத்துக்கு நஷ்டம் வரும். அப்போதுதான் சோற்றை மறந்து சுத்ததேகம் அடையலாம். ஆதலால் சும்மாயிருக்கும் வழி அறிந்து சும்மா இருக்க கற்போம்பெருமாள் கையில் சங்கு சக்கரம் எதற்கு நாமம் எதற்கு நாமத்தில் நடுகோடு சிவப்பு வர்ணம் ஏன். சிந்தியுங்கள்.சங்கு - நாதம்.சக்கரம் - ஒளிநாமம் - இடகலை, வடகலை. நடு - ஆகாரம்(உயிர்) (பொன்னம்பலம்) (செவ்வொளி) செஞ்சுடர்.இப்போது இறைநிலையை அடையும் வழியை நம் முன்னோர்கள் காட்டிய குறிபேடுகள் இப்போது விளக்கும்.என்றும் அன்புடன்,உயிர்.FYI
---------- Forwarded message ----------
From: Kathir Velu <aanmaneyan.kathirvelu@gmail.com>
Date: 2010/10/24
Subject: Re: [vallalargroups:3596] Answer : Request Clarifications
To: vallalargroups@googlegroups.com
ஆன்ம நேய அன்புடைய சன்மார்க்க அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .ஞான சபையின் விளக்கம்,ஒவ்வொரு உடம்பில் உயிர் இருக்கும் இடம்தான் ஞான சபையாகும்,கடவுள் உயிர் ஒளியாக இருக்கிறார் உருவமாக இல்லை என்பதை தெரியப் படுத்த ஞான சபையை கட்டி விளக்குகிறார்.உடம்பில்உயிர் இருக்கும்இடம் சிற்சபை,அருட்பெரும்ஜோதி ஆண்டவர்இருக்கும் இடம் பொற்சபை என்று பெயர்வைக்கிறார் வள்ளலார்.சிற்சபையும் பொற்சபையும் சொந்தமெனதாச்சு,தேவர்களும் முவர்களும் பேசுவது என்பேச்சு என்கிறார் .அதாவது உயிரொளியானது அருட்பெரும்ஜோதி ஒளியுடன் சேர்வதுதான் மரணம் இல்லா பெருவாழ்வு என்பதாகும் .ஞான சபை என்பது ஒன்றும் இல்லாதது வெற்று இடமாகும் .வெற்று இடத்தில் அருள் ஒளி நிறைந்து இருக்கும் இடமாகும் அங்கே நாம் வைக்கும் எண்னை விளக்கு ஆண்டவர் இல்லை .மங்கலமாம் ஏற்றுதலாம்கண்டாய் என்கிறார் .ஆண்டவர் வரும் வரைக்கும் வாசர்ப்படியின் உட்புறத்தில் விளக்கு வைக்கவேண்டும் என்கிறார் வள்ளலார் . ஞான சபையில் ஜோதி தரிசனம் காட்ட சொல்லவில்லை,தைப்பூசம் ஜோதி தரிசனம் காட்ட சொல்லவில்லை,ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காட்ட சொல்லவில்லை .மாதப்பூசம்ஜோதி தரிசனம் காட்ட சொல்லவில்லை,சமயவாதிகள் சமயக் கோவில்களில் வழிபாடு செய்வது போல் ஞான சபையில் வழிப்பாட்டு முறைகளை ஏறப்படுத்திவிட்டார்கள் ,இவைகள் எல்லாம் வள்ளலார் கொள்கைகளுக்கு விரோதமானதாகும்,ஞான சபை எல்லா மதத்தாருக்கும் சமயத்தாருக்கும் பொதுவானதாகும்.அதனால்தான் உலகப்பொதுவான அமைப்பை கொண்டு எண்கோண வடிவமாக பொதுவான அமைப்பை உருவாக்கியுள்ளார் அதற்க்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்று பெயர் மாற்றம் செய்துள்ளார் .ஆண்டவன் இருக்கும் இடம் பொற்சபை யாகும் ஜீவன் உள் இருக்கும் இடம் சிற்சபை யாகும் .ஆதலால் சிசபையும் பொற்சபையும் சொந்தமெனதாச்சு என்கிறார் வள்ளலார் .சிற்சபையான உயிரொளி பேரொளியான அருட்பெரும்ஜோதியுடன் கலப்பதை மரணமில்லா பெருவாழ்வு என்கிறார் வள்ளலார் .எட்டு என்பது உடம்பு இரண்டு என்பது உயிரொளி ,பேரொளியாகும் எட்டான எண்ஜான் உடம்பும்,உடம்பில்இயங்கும் உயிர் ஒளியும் ஒளியின் தந்தையான அருட்பெரும்ஜோதியும் ஒன்றுடன் ஒன்று சேர்வதுதான் இயற்கையின் நியதியாகும்,இதை தெரியாமல் மதவாதிகள் சமயவாதிகள் ஒன்று கிடக்க ஒன்று உளறி வைத்துவிட்டு போய்விட்டார்கள் என்று சாடுகிறார் வள்ளலார் .எட்டு இரண்டு என்பன இயலும் முற்படிஎனஅட்ட நின்று அருளிய அருட்பெரும்ஜோதிஎட்டு இரண்டும் என்ன என்று மயங்கிய வென்தனக்கேஎட்டாத நிலையெல்லாம் மெட்டுவித்த குருவேஎன்கிறார்எட்டு இரண்டு அறிவித்து எந்தனை ஏற்றிப்பட்டிமண்டபத்திற் பதித்த மெய்த் தந்தையேஎன்கிறார்எட்டோடு இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர்எத்துனை கொள்கில்லீர் பித்துலகீர்என்கிறார்எட்டும் இரண்டும் இது வென்று எனக்குச சுட்டி காட்டியேஎட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக் காட்டியேஎன்று பல இடங்களில் எட்டு இரண்டு என்ற வார்த்தைகளை உபயோகப் படுத்துகிறார்ஆதலால் எட்டு என்பது உடம்பு ,இரண்டு என்பது சிற்சபையில் இருக்கும் உயிரொளி, பொற்சபையில் இருக்கும் பேரொளி என்பது தெள்ளத் தெளிவாக தெரியப் படுத்தியுள்ளார் .துன்பமும் துயரமும் நிறைந்த உலகில் என்பது எஞ்சேல் என்பதாகும் ,ஆதலால் எஞ்சேல் உலகினில் யாதொன்றைப்பற்றியும் அஞ்சேல் என்ற அருள் அருட்பெரும்ஜோதி என்கிறார் .அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வள்ளலாருக்கு அனைத்து ஆற்றல்களையும் கொடுத்து விட்டதால் எதற்கும் கவலைப்படாதே ,அஞ்சாதே என்று தைரியம் கொடுக்கிறார் .நீ எண்ணியபடிக்கு விளையாடி மகிழ்க என்கிறார் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் .ஆறாம் திருமுறை அருட்பாவில் அனைத்தும் தெளிவாக எழுதி வைத்துள்ளார்,சாதாரண் மனித அறிவைக் கொண்டு பார்க்காமல் அருள் அறிவைக் கொண்டு பார்த்தால் தெரிந்து கொள்ளலாம் .அறிவை அறிவால் அறிகின்ற பொழுது அனுபவமாகும் .கடவுள் ஒருவரே அவரே அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்ற முழு நம்பிக்கையுடன் இருந்தால் அனைத்தும் தெளிவுப் படுத்துவார்,வேறு தெய்வங்கள் அனைத்தும் பொய்யானது கற்பனை யானது,என்பதை அறிவு பூர்வமாக உணர்ந்தால் அறிவு வேலை செய்யும்,அறிவுக்கு வேண்டிய அனைத்து உண்மைகளும் அருட்பெரும்ஜோதியார் காட்டிக் கொண்டேவருவார் இது சத்தியம் .ஆடாதீர் அசையாதீர் வேறொன்றை நாடாதீர் பொய் உலகைநம்பாதீர் என்கிறார் வள்ளலார் ,அவர் சொல்லியபடி நடந்தால் அனைத்தும் தெரிந்து அழி உடம்பை அழியாமை யாக்கும் வகையை தெரிந்து கொள்ளலாம் .அன்புடன் --செ,கதிர்வேலு .ஈரோடு .sell ,9865939896 , ph .0424-2401402.
23 அக்டோபர், 2010 1:54 pm அன்று, santhanam kumar <skumars61@yahoo.com> எழுதியது:
ஜோதி தரிசனத்தின் தத்துவம்
6 OCTOBER 2010 14 VIEWS NO COMMENTஞான சபை உள்ளே நுழைந்தவுடன் நடுவில் ஜோதி தரிசனம் காட்டுவது அனைவரும் அறிந்ததே………
ஆனால் வலது பக்கம் "பொற் சபை" என்று ஒன்றும் இடது பக்கம் "சிற் சபை" என்று ஒன்றையும் வள்ளல் பெருமான் அமைத்து வைத்து இருக்கிறார். மேலும் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காட்டுவது ஏன் என்றும் நிறைய மனிதர்களுக்கு தெரியாது!!!!
இதில் வள்ளல் பெருமான் "பொற் சபை" மற்றும் "சிற் சபை" என்று எதை சொல்ல வருகிறார் என்று பார்க்க வேண்டும்.
இதை பார்ப்பதற்கு முன்… நாம் வள்ளல் பெருமானின் தை பூச ஜோதி வழிபாட்டை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்
தை பூசம் அன்று காலை 6 மணிக்கு நீங்கள் ஞான சபை உள்ளே சென்று ஜோதி தரிசனம் பார்க்காமல் வெளியே நின்று பாருங்கள்…
நாம் அப்படி வெளியில் நின்று உற்று பார்க்க வேண்டும் என்றுதான் நடுவில் ஞான சபையை கட்டி அதை சுற்றிலும் காலி இடமாக அமைத்தார்
இப்பொழுது நீங்கள் தை பூசம் அன்று சரியாக 6 மணிக்கு வெளியில் நின்று பார்த்தால்….
இடது பக்கம் அதாவது மேற்கு பக்கம் சந்திரனும், வலது பக்கம் அதாவது கிழக்கு பக்கம் சூரியனும் ஒரே நேர்கோட்டில் நிற்கும் பொழுது நடுவில் ஞான சபையில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காட்டுவர்
இது அனைத்தும் நம் உடம்பில் இருக்கிறது….. ஆம் சூரியன், சந்திரன், ஏழு திரைகள் மற்றும் ஜோதி இவை அனைத்தும் நம் உடம்பில் இருக்கிறது… இதை நமக்கு விளக்கவே வள்ளல் பெருமான் சொன்னது…..
"அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது" என்று எம்பெருமான் இவ்வுலக மக்களுக்கு இதை உடைத்து சொன்னதாலே "வள்ளல் பெருமான்" என்று அன்புடன் அழைக்கபட்டார்.
இந்த தத்துவம்தான் ஞான சபை உள்ளே வும் இருக்கிறது…. ஆம் "பொற் சபை" பொன்னிற நிறத்திலும் "சிற் சபை" வெண்மை நிறத்திலும் காணப்படும்.
பொற் சபை – சூரியன்
சிற் சபை – சந்திரன்
இந்த சூரியனும், சந்திரனும் நம் உடம்பில் எங்கே உள்ளது என்று நாம் கண்டு பிடிக்க வேண்டும்
ஓம் என்ற வார்த்தையை நாம் எவ்வாறு பிரிப்போம்???
அ + உ + ம் என்றுதானே????
இதில் "அ" வும் "உ" வும் மறைந்து வருகிறது அதன் பொருள் என்ன??
அதன் பொருள் இதுதான்…….
பொற் சபை – சூரியன் – அ
சிற் சபை – சந்திரன் – உ
தமிழில் "அ" மற்றும் "உ" இன் எண் என்னவாக இருக்கிறது???
ஆம் 8 மற்றும் 2 ஆக இருக்கிறது
பொற் சபை – சூரியன் – அ – 8
சிற் சபை – சந்திரன் – உ – 2
ஒன்றுமே புரிந்து கொள்ள முடியாதவனை குறிக்க தமிழில் ஒரு வழக்கம் உண்டு அதாவது…… 8 ம் வாய்ப்பாடு, 2 ம் வாய்ப்பாடு கூட அவனுக்கு தெரியாது…. அவனிடம் போய் பேசி கொண்டிருகிறாய் என்று கேட்பார்கள்??
ஏன் அவ்வாறு 2, 8 ம் வாய்பாடை மற்றும் குறிக்கிறார்கள். அது ஏன் என்று என்றாவது சிந்தித்து இருக்கிறிர்களா?
மேலும் ஒரு அற்புதமான பழக்கம் கிராம புறங்களில் உண்டு….. சிறுவர்களை கடைக்கு அனுப்ப வேண்டும் எனில்
கண்ணா கடைக்கு போடா என்று அம்மா சொன்னால்……
அதற்க்கு அந்த பையன் சொல்வான்… போம்மா கடை ரொம்ப தூரம் என்று சொல்வான்….
அதற்க்கு அந்த தாய் சொல்வாள்…..
டேய் கண்ணா ஒரு ரெண்டு எட்டு வைச்சா கடைக்கு போயிடலாம் ஆனா இதுக்கு போய் சலித்து கொள்கிறாயே என்று சொல்வதை நீங்கள் கேள்வி பட்டு இருக்கிறிர்களா??
இதில் ரெண்டு, எட்டு மற்றும் கடை என்றால் என்ன வென்று உங்களுக்கு புரிகிறதா???
ரெண்டு – 2
எட்டு – 8
வைத்தால்
கடை – ஞானம் (கடைந்தேருவது …. என்று பொருள்)
தமிழ் ஞான மொழி என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் ஞானிகள்…….
இப்பொழுது நீங்கள் திருமூலர் தெய்வத்தின் பாடலை இங்கு ஓப்பிட்டு கொள்ளுங்கள்
"எட்டும் இரண்டும் அறியாத என்னை
எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்
எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்"
இதை வள்ளுவ பெருந்தகை….
எந்த இரண்டு எழுத்து எண்ணாகவும், எழுத்தாகவும் இருக்கிறதோ அதை ………… என தகும் என்று சொல்கிறார்
"எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு."
இப்படி உண்மையை பட்டென உடைத்து இருக்கிறார்.
பொற் சபை – சூரியன் – அ – 8 – வலது கண்
சிற் சபை – சந்திரன் – உ – 2 – இடது கண்.
ஆம் நம் கண் விழி வழி தான் நாம் கடவுளை அடைய முடியும்.
To: vallalargroups@googlegroups.com
Sent: Thursday, 21 October 2010 20:55:47
Subject: Re: [vallalargroups:3580] Answer : Request Clarifications
Hi கார்த்திகேயன் ,
தகவலுக்கு நன்றி. ஞானசரியை மின் நகல் அனுப்பமுடியுமா ?
அன்புடன்
சிவா
2010/10/21 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Inbutru Vazga,
Dear Siva,
நமது வள்ளலார், நமக்கு கொடுத்த மிக முக்கியமான பகுதி , "ஞான சரியை".
அந்த பகுதியில் "28" பாடல்களை கொடுத்து உள்ளார்கள்.
அதாவது "2" ,"8" -க்கான ரகசியம் அதனில் உள்ளது.
அந்த பகுதியை தாங்கள் ஆழ்ந்து பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
"எஞ்சேல்" - "யாமிருக்க(வள்ளலார்/அருட்பெருஞ் ஜோதி) பயம் ஏன்?"
அன்புடன்,
கார்த்திகேயன்.
---------- Forwarded message ----------
From: Shiv Kumar <shivonline@gmail.com>
Date: 2010/10/19
Subject: [vallalargroups:3567] Request Clarifications
To: vallalargroups@googlegroups.com
அன்பர்களே,--
எட்டும் இரண்டும் என்று பல பாடல்கள் அருட்பவிலும் , மற்ற மறை நூல்களில்லும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் விளக்கம் என்ன ?
மேலும் ஆறாம் திருமறைஇல் இந்த பாடலில் வரும் "எஞ்சேல்" என்ற சொல்லுக்கு முழு பொருள் என்ன?
எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும்
அஞ்சேல் என்றருள் அருட்பெருஞ் ஜோதி
அன்புடன்
சிவா
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
Anbudan,
Vallalar Groups--
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment