Pages

Thursday, September 9, 2010

[vallalargroups:3447] Bangalore , Dinakaran Veg News : 6 Sep 2010

 

Dear All,

புகை பிடிக்கும் பழக்கம் இருக்கிறதா?
பழம், காய்கறிகள் சாப்பிட்டால் நுரையீரல் புற்றுநோய் குறையும்
வாஷிங்டன், செப். 6:
பல்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து குறைவு என ஒரு ஆய்வு கூறுகிறது. குறிப்பாக புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அவசியம் பழம் சாப்பிட வேண்டும் என்கிறது அந்த ஆய்வு.
நெதர்லாந்தின் தேசிய பொது சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் புற்றுநோய் இயல் திட்ட இயக்குர் எச்.பஸ் பியூனோ&டி&மெஸ்கிட்டா தலைமையிலான குழுவினர் புற்றுநோயை தடுப்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 4.52 லட்சம் பேரிடம் புகைப் பழக்கம், பழம், காய்கறிகள் சாப்பிடும் பழக்கம் உட்பட பல்வேறு தகவல்களை சேகரித்தனர்.
இதில் 1,613 பேர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
ஆரோக் கியமாக இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், பல்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் சாப்பிடாதவர்களைவிட சாப்பிட்டவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் வருவதற்கான ஆபத்து குறைவாக இருந்தது.
மேலும் புகைப்பழக்கம் உள்ளவர்களில் பழம், காய்கறிகளை சாப்பிட்டவர்களை விட சாப்பிடாதவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிக அளவில் இருந்தது. அதாவது புற்றுநோய் செல்கள் வேகமாக பரவுவது தடுக்கப்படுகிறது.
பொதுவாக 14 வகையான பழங்கள் மற்றும் 26 வகையான காய்கறிகளை பெரும்பாலானவர்கள் சாப்பிட்டுள்ளனர்.
''பழங்கள் மற்றும் காய்கறிகளில் பல்வேறு வகையான நோய்க்கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் இருக்கிறது. இதனால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.
ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் புற்றுநோய் செல்கள் வேகமாக பரவாது. குறிப்பாக புகைப்பழக்கம் உள்ளவர்கள் இதை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் புகைப் பழக்கத்தை முற்றிலும் கைவிடாவிட்டால் தப்ப முடியாது'' என மெஸ்கிட்டா தெரிவித்துள்ளார்.

 




--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment