From: arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
Date: 2010/8/26
Subject: ஜீவ காருண்யமே முதல் படி ஏன் ?
To: vallalargroups@googlegroups.com
ஜீவ காருண்யமே முதல் படி ஏன் ? |
|
அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,
சுத்த சன்மார்க்க நிலை அடைவதற்கு நமது வள்ளல் பெருமான்
ஜீவ காருண்யமே முதல படி என்று கூறி இருக்கிறார்கள்.
ஏனென்றால்
ஆதியில் சிவம் அசைவற்று இருந்தது.
சிவம் அசைவு பெற்று சலனம் தோன்றியது.
அதன் பயனாய் சக்தி தோன்றியது. அதுவே ஆன்மா.
அதிலிருந்து ஜீவன் தோன்றியது. ஆதியில் அது மலம் அற்று
இருந்தது. இருப்பினும் சலனத்தின் காரணமாய் சுத்த மாயை வயப்பட்டது.
பின் ஜீவன் உடல் எடுத்தது. அதன் பயனாய் வினைகள் ஏற்பட்டன.
அவை நல் வினை, தீவினை என
மீண்டும் மீண்டும் பிறக்க காரணமாய் அமைந்தது.
நாம் இரு வினையை ஒழிக்க வேண்டும் என்றால். முதலில் நாம் அசுத்த மாயையை நீக்க
வேண்டும். அசுத்த மாயை நீங்குவதற்கு தடையாய் இருப்பது நான் என்கின்ற உணர்வு.
நான் என்கின்ற உணர்வு நீங்க வேண்டும் என்றால் அதற்க்கு ஜீவ காருண்யமே வழி.
ஏனென்றால் நாம் அனைவரும் ஒரே ஆன்மாவிலிருந்து பிரிந்து வந்த சகோதரர்கள்.
ஒரு சகோதரன் துன்பப் படுவதை மற்ற சகோதரன் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க
முடியுமா ?
ஆகவே அனைத்து ஜீவர்களின் மீதும் ஒத்துரிமை உடையவர்களாக நாம் இருக்கிறோம்.
அந்த ஒத்துரிமையின் காரணத்தினால் பிற ஜீவன் படுகின்ற துன்பம் தானே படுவதாக
உணரப்படும்.
இந்த ஜீவ காருண்யத்தினால் நம்மை பற்றியுள்ள அசுத்த மாயை நீங்கிவிடும்.
அசுத்த மாயை நீங்கினால் ஒருமை நம்மை பற்றும்.
ஒருமை நமக்கு வரப்பெற்றால் நம் மனம் அறிவை சாரும்.
மனம் அறிவை சார்ந்தால் நமது புலன் வழி வெளியாகும் தத்துவங்கள் முப்பத்தாறும்
ஒடுங்கும்.
தத்துவங்கள் ஒடுங்கினால் நம்மை பற்றிய ராக துவேஷங்கள் விலகும்.
அதன் பயனாய் நமது ஆன்மாவை பற்றிய திரைகள் விலகும்.
திரை விலகினால் ஜோதி தரிசனம் கிடைக்கும்.
ஆகவேதான் நமது வள்ளல் பெருமான் ஜீவகாருண்யத்தை முதல் சாதனமாக வைத்தார்கள்.
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
--
Anbudan,
Vallalar Groups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment