Pages

Saturday, August 21, 2010

[vallalargroups:3364] இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!

 
          
          பசித்திரு             தனித்திரு            விழித்திரு
  
    அருட்பெருஞ்சோதி     அருட்பெருஞ்சோதி
    அருட்பெருஞ்சோதி     தனிப்பெருங்கருணை
 
கொல்லா விரதம் குவலயம்மெல்லாம் ஓங்குக!
ஜீவகாருண்யமே  மோட்சவீட்டீன் திறவுகோல் !
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 
ஆண்மீக அன்பர்களுக்கு வந்தனம்!
 
அன்பு உள்ளம் கொண்ட ஆண்மீக அன்பர்களுக்கு முன்பு ஒரு காலத்தில்  இந்த பழம்பெரும்  பாரதபூமியிலே ஆனந்தசேடன் என்ற குறுநிலமன்னன் அனந்தபுரி என்னும் நாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டுவந்தான் இப்படி ஆட்சி செய்துவரும் வரும் வேளையில் தன் நாட்டில் வாழும் குடிமக்கள்  குறை நிறைகளை  கண்டறிய தன் மதியுக மந்திரியாகிய ஆருடனுடன்  நகர்வலம் புறப்பட்டான் அப்பொழுது அவன் நாட்டில் வாழும் விவசாய குடிமக்கள் சிலர் நம் மண்ணன் எவ்வளவு சிறந்த மன்னர் நமக்கெல்லாம் ஒரு குறையும் இல்லாமல் ஒரு குடும்ப தலைவன் தன் இனிய குடுமபத்தை எவ்வாறு பார்த்துகொல்கிரானோ அவ்வாறு அல்லவா பார்த்துகொள்கிறார் ஆனாலும் நாம் அரும்பாடுபட்டு விளைவிக்கின்ற பயிர்களைஎல்லாம் வனவிலங்குகள் அழித்துவிடுகிறதே என்று வருந்தி கொண்டிருந்தார்கள் இவைகளையெல்லாம் கேட்டுகொண்டிருந்த மண்ணன் மறுநாள் தன்மந்திரி மற்றும் சேனை பரிவராங்களுடன் வேட்டைக்கு புறப்பட்டான் அடர்ந்த வனத்தை நெருங்கிய மண்ணன் அவன் பார்வையில் படும் கொடிய விளங்குகளைஎல்லாம் வேட்டையாடி வந்தான் அப்பொழுது அங்கே பார்ப்பவர் கண்களை மயக்கும் அளவிற்க்கு ஒரு புள்ளிமான் குட்டி  துல்லிவிளையாடி கொண்டிருந்தது  அதை கண்ட அரசனும் அவனுடைய சேனைகளும் அதைபிடிக்க ஆயத்தமானார்கள் ஆனால் அந்த மான் குட்டியானது  நீண்டதுரம் அவர்களை அலைகழிக்க செய்து பிறகு அருகில் தனக்கு அடைக்கலம் கொடுத்த முனிவரின் ஆசிரமத்திரக்குள் போய் புகுந்துகொண்டது மானை பின்தொடர்ந்த அரசனும் சேனைகளும்  தாங்கள் வந்த குதிரைகளைவிட்டு  இறங்கி ஆசிரமத்திற்கு அருகாமையில் வந்து சேர்ந்தார்கள்  அங்கே சாந்தமே உருவாக ஒரு தபோசீலர் வெண்ணிற ஆடையை போர்த்தியவாறு ஆசிரமத்தின் உள்ளிருந்து வெளியேவந்தார் அங்கே தன்சேனை பரிவாரங்களோடு   வந்திருக்கும் மன்னனை வரவேற்று தன் ஆசிரமத்தின் உள்ளே அழைத்து  சென்று மன்னருக்கும் வீரர்களுக்கும் அவர்கள் வந்த களைப்பு தீர காமதேனுவின் உதவியால் அவர்களுக்கு அறுசுவை விருந்து கொடுத்தார் முனிவர்  பிறகு மன்னனை பார்த்து இந்த மான்குட்டி தங்களுக்கு எந்தவிதத்தில் தொல்லை கொடுத்தது இவற்றை ஏன் துரத்தினீர்கள்  என்றார் முனிவர் இதற்க்கு மண்ணன் எங்கள் நாட்டில் வாழும் விவசாய குடிமக்கள்  அரும் பாடுபட்டு   சாகுபடி செய்யும்  பயிர்களை எல்லாம் இந்த காட்டு விலங்கினங்கள்   பாழ் படுத்தி விடுகின்றது  ஆகையால் குடிமக்களின் குறை தீர்ப்பது மன்னனின் கடமை அல்லவா எனவே நாங்கள் அவ்வப்போது வேட்டைக்கு வருவோம் இந்தமுறையும் நிறையை மிருகங்களை வேட்டையாடி கொன்றோம்  இந்த மானை பிடிக்க முயன்று முடியாமல் இங்கு வந்துவிட்டோம்  இந்த மானை தாங்கள் வளர்க்கிறீர்களா என்றான் மண்ணன்  ஆமாம் சிலவருடங்களுக்கு முன்னாள் இதன் தாயை ஈவு இரக்கமின்றி யாரோ ஒருகுறுநில மண்ணன் வேட்டை என்ற பெயரால்  கொன்றுவிட்டான்  தன் தாயை இழந்த இந்த மான் குட்டியானது அன்றிலிருந்து நமது ஆசிரமத்திலேயே தங்கிவிட்டது அதுசரி  மன்னா தங்களின்  குடிமக்களை காப்பாற்றும்  தங்கள் கடமை உணர்வை  பார்த்து பெருமைகொள்கிறேன் குடிமக்களின் பயிர்களை பாதுகாக்க வேறுவழியை கையாண்டு இருக்கலாமே அதாவது பயிர்களுக்கு வேலி அமைத்து இருக்கலாம் அல்லது தங்களது படைவீரர்களை காவல் பணிசெய்ய உத்தரவு பிறப்பித்து இருக்கலாம் இவற்றைஎல்லாம் விடுத்து உங்களை கண்டாலே பயந்து ஓடும் இவைகளை துரத்தி  வேட்டை என்ற பெயரால் இவைகளை கொன்று அதன் வாரிசுகளை தவிக்க விடுவது  எந்த விதத்தில் நியாயம்  மன்னா    இருந்தாலும் இறந்துபோன மற்ற மிருகங்களும் இந்த மானும் என்ன பாவம் செய்தன ? உங்களை துன்புறுத்தினவா  ?  
கடவுள் பிற உயிர்களை  படைத்து  வாழ வைத்து மறைய வைக்கிறார் அது இயற்கையின் நியதி நம்மையும் அப்படித்தான் படைத்து வாழ வைத்து மறைய  வைக்கிறார் ஆனால் நமக்கு இந்த உலக நடைமுறைகளை பகுத்துதரிந்து  வாழ்வதற்காக ஆறாவது  அறிவை அருளியிருக்கிறார்   கடவுள் ஆனால் நாம் இவற்றை சிந்திக்காமல் கடவுளின் படைப்பை அழிக்க நமக்கு என்ன உரிமை      இருக்கிறது தாங்கள்   அரியணையில் அமர்ந்து நீதி தவறாமல் ஆட்சி செய்பவர்  தாங்கள்  மக்களின் முறையீடுகளை விசாரித்து நீதி தர்மசாஸ்திரம் தவறாமல் நீதி வழங்குபவர் இப்படிப்பட்ட தாங்கள் இந்த வேட்டை என்ற பெயரால் பிற உயிர்களை கொள்ளலாமா  இவைகள்  எல்லாம் தங்களை  போன்று சிந்திக்க தெரியாதவை  இந்த  ஐந்தறிவு கொண்ட மிருகங்கள் யாரிடம் போய்
முறையிடமுடியும்  சற்றே சிந்த்து  பாருங்கள் அரசே என்றார் அந்த தபோசீலர் ,
அரசனுக்கு முனிவர் உரைத்த ஒவ்வொரு சொல்லும் பசுமரத்தாணிபோல் அவன் மனதிலே பதிந்தன மண்ணன் அந்த தபோசீலரை பார்த்து ஐயா என் மணம் இதுவரையில்  குழம்பின குலத்தை போல் இருந்தது  இபோழுது தங்களின் அருளுரையின் பயனால் தூய பசும் பாலைப்போல் எந்தன் உள்ளம் தெளிவடைந்துவிட்டது   அனைத்து ஜீவராசிகளையும் பாதுகாப்பது என்னுடைய கடமை என உணர்ந்து கொண்டேன் இனி வேட்டையாடுதல் என்ற பேச்சுக்கே  இடமில்லை இருந்தாலும் இதுவரை நான் வேட்டை என்ற பெயரால் செய்த கொலைபாதகத்திர்க்கு ஆளாகிவிட்டேன் எனவே  தாங்கள் தான் நான் இதுவரையில் செய்த பாவம் தீர  ஒரு உபாயம் கூர வேண்டும் என்றான் மண்ணன் 
இதை கேட்ட அந்த தபோசீலர் தன்குடிலின் உள்ளே சென்று நமது சிதம்பரம் ராமலிங்க வள்ளலார் எழுதிய திருவருட்பா என்ற நூலையும்
மற்றும் ஜோதிமனிவிளக்கையும் மன்னனின் கையில் கொடுத்து இத்திருவிளக்கின் முன்னாள் அமர்ந்து ஐயா அவர்கள் எழுதிய அருட்பாவை வாசிதுவாருங்கள் மற்றும் பசி என்று வருபவர்களுக்கு உணவு என்னும் மருந்தை கொடுப்பதற்கு தருமசாலையை தாங்கள் நாட்டிலே அமைத்து அவற்றை செவ்வனே நடத்திவாருங்கள் விரைவில் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் வருவார்
அவர் தாங்கள் நாட்டையும் தாங்கள் நாட்டின்  குடிமக்களையும் நல்வழி நடத்தி செல்வார் என்றார் அந்த தபோசீலர்
இவற்றை கேட்ட மண்ணன் தன் நாட்டிற்கு வந்து அந்த தபோசீலர் உரைத்தபடி தருமசாலை பலவற்றை தன் நாட்டிலே நிறுவி அதிலே நித்தியம் பசி என்று வருபவர்களுக்கு உணவு என்னும் மருந்தை கொண்டு அவர்தம் பசிப்பிணி போக்கிவந்தார், மன்னனின் இச்செயலை கண்டு நாட்டு மக்கள் அனைவரும் நம் அரும் பசியை போக்கிய மாமன்னர் வாழ்க என்று வாழ்த்தினார்கள் இவ்வாறு மக்களின் வாழ்த்துகளோடும் அவர்தம் நாட்டை சீறும் சிறப்புமாக ஆண்டுவந்தார் அந்த குருநில மண்ணன்
 
எனவே அன்பர்களே நாமும் பசி என்று வருபவர்களுக்கு உணவு என்னும் மருந்தை கொண்டு அவர்தம் பசி பிணி போக்கி வந்தால் எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவர்  நம்முள்ளே காரியபடுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை
பிற உயிரனங்கள் படும் வேதனை வெளிபாடு இதோ
உங்கள் உணவிற்காக, எங்களை கொள்ளும் போது எங்கள்   குழந்தைகள் ஆதரவு இல்லாத அநாதை பிள்ளைகளாகி விடுகின்றனர் ....
எங்கள் குழந்தைகளை கொன்று, உங்கள் குழந்தைகளை வளர்கின்றீர்களா?
எங்களை சாப்பிடுவதால், உங்கள் குழந்தைகளிடம் , எங்களுடைய சாபம் தங்கிவிடுமே ... 
இதனை சிந்தித்து பாருங்கள் ....  நன்மை பல பெறுவீர்கள்..
பசி என்று வந்தவருக்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்!
 
ஜீவகாருண்யமே  மோட்சவீட்டீன் திறவுகோல் !
 
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
 
அ. இளவரசன்
வள்ளலார் உயிர்கொலை தடுப்பு இயக்கம்
நெ. 34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
கைபேசி. 9940656549,9677160065

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment