அன்பு சான்றோர்கள் அனைவருக்கும்
-- நாம் இது வரை கடவுள் யார் என்று பார்த்து வந்தோம்.
ஆனால் அதற்கு முன்னால் நாம் யார் ?
என்று நாம் புரிந்து கொண்டோமா ?
முதலில் நாம் யார் என்று தெரிந்தால்தானே
நமக்கு ஆதாரமான தலைவனான இறைவனை பற்றி அறிய முடியும்.
அகவே நான் என்று கூறிக்கொள்ளும் நாம் யார் ?
நாம் ஏன் இந்த உடல் எடுத்து வந்தோம் ?
இந்த காணும் உலகம் நம் கண்களால் காண்பது போலதான் உள்ளதா ?
இந்த உடல் நான் எனும் நானா ?
இந்த உடல் நான் என்றால் இந்த உடல் ஏன் இறந்து போக வெண்டும்.
உடல் இறந்தால் இந்த உடலை விட்டு எது வெளியேறுகிறது ?
உயிர் என்று ஒன்று உள்ளதா ?
உயிர் என்று ஒன்று இருக்கின்றது என்றால் அது எங்கு உள்ளது.
அது எப்படி இந்த உடலை அடைந்தது.
இந்த உடல் உயிர் என்று ஒன்று இருக்கும் வரை நன்றாக இருக்கின்றதே.
இந்த உடலை விட்டு உயிர் போன உடன் இந்த உடல் அழுக ஆரம்பிக்கின்றதே
அப்படியென்றால் இந்த உடலை அழுகாமல் பாதுகாப்பது உயிரா ?
ஆக இது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைத்தால் தானே
அடுத்து கடவுளை பற்றி நாம் ஆய்வு செய்ய இயலும்.
ஆக முதலில் நாம் நான் யார் என்பதற்கு விடை காண முயல்வோம்.
மேலும் சிந்திப்போம்.
அன்புடன்,
சிவம்
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment