Pages

Wednesday, July 28, 2010

[vallalargroups:3293] வித்து , காய் , கனிகளில் உயிர் இல்லையா ? அதனை உண்பதும் உயிர் கொலையா என நீங்கள் கேட்கலாம்?



வித்து , காய் , கனிகளில் உயிர் இல்லையா ? அதனை உண்பதும் உயிர் கொலையா என நீங்கள் கேட்கலாம்?

 

மனிதனின் கை , கால்களில் உள்ள நகங்களை வெட்டும் போதும் , முடியை வெட்டும்போதும்  எவ்வாறு  துன்பம் ஏற்படுவதில்லையோ , அதே போல் செடி , கோடி , மரம் முதலிய தாவரங்களில் உள்ள வித்து , காய் , கனி வகைகளை  பறித்து   உண்ணுவதால்  அவைகளுக்கு ( தாவரங்களுக்கு) துன்பம் ஏற்படுவதில்லை .
வித்து , காய் , கனிகளில் உயிர் கிடையாது . மண் , நீர் , வித்து முதலிய மூன்றும் சேரும் பொழுதுதான் உயிர் உண்டாவதற்கான சூழ்நிலை ஏற்படுகின்றது.

மேலும் , உயிர்களுக்கு இன்பம் மற்றும் துன்பங்கள் , அந்த கரணங்கள் மூலம் ஆன்மாவை சென்று அடைகின்றன. இந்த அந்த கரணங்கள் தாவரங்களில்  விருத்தி அடையவில்லை. எனவே , தாவர வகை உணவை உண்பதால்  அது கொலை அல்ல. ஆதலால் , தாவர உணவே மனிதனுக்கு உகந்த உணவு.  

மாமிச உணவை உண்பது கொலையா என நீங்கள் கேட்கலாம்? 

கொலையே!! எவ்வாறெனில் , அனைத்து விலங்குகளுக்கும் மனம்  முதலான  அந்தகரணங்கள் நன்றாக விருத்தி அடைந்து உள்ளன,  எனவே , அந்த  உயிர்களை இம்சை செய்யும்  போது ( அதாவது கொலை செய்யும் போது )
அந்த உயிரின் துன்பங்கள் அதனுடைய உடைய ஆன்மாவை சென்று அடைகின்றது . எனவே மாமிச உணவை (அசைவ உணவை)  உண்பது கொலையே.  ஆதலால் , மாமிச உணவு(அசைவ உணவு)  மனிதனுக்கு உரிய உணவல்ல. 




Anbudan,
Vallalar Groups | Cell: 099022-68108

Rounded Rectangle: JOIN VALLALAR GROUPS 




அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment