தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!!
அற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா
அற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா!
எல்லோரும் இன்புற்றிருப்பது மட்டுமே அன்றி யாமொன்றும் அறியோம் பராபரமே!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி!!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!!
http://www.youtube.com/watch?v=E0UDLPUUqwg&feature=related
Dear Brother, If you could explaine the following songs to us that
would be great...thanks in advance...
மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்
மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ
*இருந்ததிசை சொலஅறியேன்* எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே
3314
அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்
அறிவறிந்த அந்தணர்பால் செறியும்நெறி அறியேன்
நகங்கானம் உறுதவர்போல் நலம்புரிந்தும் அறியேன்
நச்சுமரக் கனிபோல இச்சைகனிந் துழல்வேன்
மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்
மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
இகங்காணத் திரிகின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே
3315
கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த
கருத்தர்திருக் கூட்டத்தில் களித்திருக்க அறியேன்
நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன்
நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்
சிற்குணமா மணிமன்றில் திருநடனம் புரியும்
திருவடிஎன் சென்னிமிசைச் சேர்க்கஅறி வேனோ
இற்குணஞ்செய் துழல்கின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே
ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு
On Jul 1, 1:02 am, "arumugha arasu.v.t" <arumughaar...@gmail.com>
wrote:
> இறைவன் போட்ட முடிச்சு
>
> வானம் தொட்டுவிடும் தூரம்தான் என்றும்
> வானமே எல்லை என்றும் நம்மில் பலர்
> வானத்தை பற்றி கூறி வருகிறார்கள்.
> இவர்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ளாமல்
> வானம் எதோ நம்மை விட்டு விலகி வெகு தூரத்தில்
> இருப்பது போன்று கூறுகிறார்கள்.
> உண்மையில் வானம் நம்மை விட்டு வெகு தொலைவில் இருக்கிறதா ?
> இல்லை என்பதுதான் உண்மை.
> நாம் இருப்பதே வானத்தில்தானே.
> வானத்தில் இருக்கும் பூமியில் வானத்தை ஒவ்வொரு வினாடியும் நாம்
> தொட்டுக் கொண்டுதான் வாழுகிறோம்.
> அதே போல நமது உடலில் இருக்கும் வெற்றிடங்கள் அனைத்துமே
> வானம் தான் என்பதை நாம் உணர மறுக்கிறோம்.
> மேலும்
> ஒவ்வொரு அணுவினுள்ளும் இருக்கின்ற வெற்றிடம் அனைத்துமே
> வானம் என்பதை நாம் எண்ணுவதில்லை.
> அடுத்து
> வானம் எனக்கு மேலே இருக்கிறது என்று
> நமது தலைக்கு மேலே காண்பிக்கிறோம்.
> நமது தலைக்கு மேலே இருப்பது மேல் பகுதி என்று
> நாம் எவ்வாறு முடிவு செய்ய முடியும் ?
> நமது பூமி வானத்தின் மேல் பகுதியில் உள்ளதா ?
> அல்லது வானத்தின் கீழ் பகுதியில் உள்ளதா ?
> யார் அறிவார்கள்.
> நமது தலைக்கு மேலுள்ளது மேல் பகுதியா ?
> அல்லது கீழ் பகுதியா ?
> நாம் நேரே நிற்கிறோமா ?
> அல்லது
> புவி ஈர்ப்பு விசையின் காரணமாக
> தலை கீழாக தொங்குகிறோமா ?
> நாம் அறிவோமா ?
>
> ஆக மேல் எது கீழ் எது என்று தெரியாத நாம்
> மேலான இறைவனின் முடிச்சை அறிய முடியுமா ?
>
> அடுத்து சிந்திப்போம்.
>
> அன்புடன்
> ஆறுமுக அரசு
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment