Pages

Monday, July 19, 2010

Re: [vallalargroups:3269] வள்ளலார் உருவப்படம் தேவையா

ஆன்ம நேய அன்புடைய சன்மார்க்க அன்பர்கள் அனைவர்களுக்கும்,
என் அன்பையும் ஆதரவையும் தெரிவித்து கொள்கிறேன் .

வள்ளலார் அருட்பெரும்ஜோதி ஆண்டவரால் அனுப்பி வைக்கபட்டவராகும் .
அருட்பெரும்ஜோதியார் என்ன ஆணை யிட்டாறோ, அதன்படி சொல்வதற்கும் ,
அதனை மக்கள் தெரிந்து கொள்ளவதற்கும், திருஅருட்பா என்னும் அருள்பொருள் கொண்ட ,
அருள் நூலை இந்த உலகத்திற்கு தந்துள்ளார். .சொல்லியதுடன் அதன்படி வாழ்ந்து 
வழி காட்டியுள்ளார் .

நாம் வள்ளலார் வாழ்ந்தது போல் வாழ்வது முக்கியமா ?,வள்ளலார் படத்தை வைத்து
கொண்டு வழிபடுவது முக்கியமா ?

பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் பொம்மைகளை வைத்து வழிபாடு செய்து வந்துள்ளோம் ,
அவைகள் யாவும் பொம்மை விளையாட்டுகளாகும் என்கிறார் வள்ளலார் ..
உண்மைகளை உரைக்க வந்த தத்துவகங்களை, உண்மை என்று நம்பி ஏமாநது 
வீண் போது கழித்து விட்டோம் ,இனியும் வீண்காலம் கழித்து ஏமாறாதீர்கள் என்று 
அருட்பாவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் .அதுபோல் வள்ளலார் படமும் பொம்மை 
படங்களாகும் .நிழல் படம் உண்மையாகாது ,

அதைவள்ளலார் பின்வரும் பாடலில் தெளிவுப்படுத்தியுள்ளார் .

இலங்குகின்ற பொது உண்மை இருந்த நிலை புகலென்
இயம்புகின்றாய் மடவாய் கேள் யானறியும் தரமோ 
துலங்குமதை யுரைத்திடவும் கேட்டிடவும் படுமோ 
சொல்லளவோ பொருள் அளவோ துன்னும் அறிவளவோ 
விளங்குகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த 
மேனிலை என்று அந்தமெலாம் விளம்புகின்ற தன்றி 
வளங்கொளுமம் மேனிலையின் உண்மைஎது வென்றால் 
மவுனம் சாதிப்பதன்றி வாய் திறப்பதிலையே .

என்று அருட்பாவில் பதிவு செய்துள்ளார் .

நாம் பின்வரும் சந்ததிகளுக்கு வள்ளலாரை பற்றி வார்த்தைகளால் 
சொல்லலாம் ,வள்ளலார் நிழற்படத்தை காட்டி சொல்லிவந்தால் ,
பின்வரும் சந்ததிகள் வள்ளலாரைத் தெய்வமாக்கி ,
அருட்ப்ரும்ஜோதியான உண்மைக்கடவுளை மறந்துவிடுவார்கள் .

வள்ளலார்';---உண்மைக்கடவுளான அருட்பெரும்ஜோதியை ,
இவ்வுலகத்திற்கு அறிமுகப்படுத்த என்ன பாடுப்பட்டார் என்பதைப்பற்றி 
திருஅருட்பாவில் பதிவுசெய்துள்ளார் .
உண்மைக்கடவுளின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ள வடலூரில் 
சத்திய ஞான சபையை அமைத்துள்ளார் .ஞான சபையின் உண்மையை 
முதலில் நாம் தெரிந்துகொள்ளவேண்டும் ,

நாம் தேடுவதெல்லாம் புறத்தில் இல்லை ,
அகத்தில் உள்ள ஆன்மாவென்னும் உயிரொளி யைத்தான்
தொடர்பு கொள்ளவேண்டும் .

வள்ளலார் பதிவுசெய்துள்ள பாடல் ;---

ஆதியும் அந்தமும் மில்லாதோர் அம்பலத்தாடும் 
சோதிதன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்  
நீதி கொண்டுரைத்தேன் இது நீவிர் மேலேறும் 
வீதி மற்றைய வீதிகள் கீழ்ச செல்லும்வீதி .'

நாம் மேலே செல்லவேண்டுமா ?கீழே போகவேணுமா ?
நாம்தான் முடிவு செய்யவேண்டும் .
மேலே செல்வது என்பது,  அருட்பெரும்ஜோதியை அடைவதாகும்  .
கீழேப்  போவது என்பது  கீழ் பிறப்பு என்பதாகும் . 

மேலும் ஒருபாடல் ;---

குறித்துரைக்கின்றேன் இதனை கேண்மின் இங்கே வம்மின் 
கோணுமனக் குரங்காலே நாணுகின்ற வுல்கீர்
வெறித்த உம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது 
மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறு நினையாதீர் 
பொறித்த மதம் சமயம் எல்லாம் பொய் பொய்யே அவற்றில் 
புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் என கண்டறிமின் 
செறித்திடு சிற்சபை நடத்தைத் தெரிந்து துதித்திடுமின்
சித்தியெல்லாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே .

மேலும் பல பாடல்களில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

நாம் வள்ளலார் படத்தை வெறுக்கவில்லை .
வள்ளலார் இவ்வுலகத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்.
வள்ளலார் மற்றைய அருலாளர்கள் போல், கதை சொல்லவில்லை ,
கற்பனைகளைச சொல்லவில்லை, .உள்ளதை உள்ளவாறு ,
உண்மைகளை மட்டும் சொனனவராகும்.உண்மைகளைச 
சொன்னாலும் கேட்பாரில்லை என வேதனைப்பட்டவர் வள்ளலார் .
அவர் மனம் எவ்வளவு வேதனைப் பட்டு இருக்கும் என்பதை 
நினைத்துப் பாருங்கள் .
பற்றிய பற்று அத்தனையும் பற்று அற விட்டு,
அருள் அம்பலப் பற்றை பற்றுமினோ என்றும் இறவீரே.
 
ஆதலால் நாம்;-- வள்ளலார் என்ன சொனனாரோ அதைப் பின்பற்றி 
அவர்கள் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடை பிடித்து ,
பேரின்ப பெரும்சித்திப் பெற்று பெருவாழ்வு  வாழ்வோம் .

ஈன உலகத்திடர் நீக்கி இன்புறவே 
ஞான அமுதமது நான் அருந்த ----ஞான 
உருவே யுணர்வே யொளியே வெளியே 
திருவே கதவைத் திற .

ஆண்டவர் குடியிருக்கும் நம் உடம்பு என்னும் ஆலயத்தில் ,
சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடுவோம்.
இடைவிடாது நம் மனதை அகத்திலுள்ள புருவ மத்தியில் ,
தொடர்பு வைத்துக் கொண்டுவந்தால் ,நமக்கு தெரிவிக்க வேண்டியதை 
எல்லாம் தெரிவிப்பார் .

வீணே பராக்கில் விடாதீர் உமது உளத்தை 
நானேயுடைய நமரங்காள் ----ஊணாகத்
தெள்ளமுத் மின்றேனக்குச சேர்ந்தளித்தான் சித்தாட 
உள்ளிய நாள் அறிதுமின் உற்று .

கொல்லா நெறியே குவலயம் ஓங்குக 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க .

அருட்பெரும்ஜோதி 
தனிப்பெரும் கருணை .

அன்புள்ள ஆன்மநேயன்;---கதிர்வேலு .                     



17 ஜூலை, 2010 4:13 pm அன்று, s mani <vallalar6@gmail.com> எழுதியது:
nandri

On 6/24/10, sayeeganesh juttusaibabasubramanian <dayasayeeaug11@gmail.com> wrote:
DEAR MR. KATHIRVELU,
YOU ARE CORRECT. BUT FOR A STARTER WITH A VERY HIGH AMOUNT OF CAUTION WE CAN SHOW SOME FIGURE ABOUT VALLALAR. BECAUSE ONE CAN PERCEIVE ANYTHING WITH THE HELP OF PICTURE EASILY. ONE CANNOT MOVE TO FARMLESS PHILOSOPHY WITHOUT A FARM. THIS CONCEPT VERY WELL PROCLAIMED BY VALLALAR. WE CAN SHOW VALLALAR AS OUR FATHER,PHILOSOPHER,GUIDE TO OUR CHILDREN AND FRIENDS WHOM WE THINK THAT THEY ENTER IN TO SANMARGAM,PROVIDED WE CLEARLY INFORM THEM THAT IT IS MERE A REFERRENCE AND NOT TO BE WORSHIPPED.
DAYAVUDAN
SAYEEGANESH.

2010/6/23 Kathir Velu <aanmaneyan.kathirvelu@gmail.com>
 
      ஆன்ம நேய அன்புடையீர் அனைவருக்கும் வணக்கம் ,

சன்மார்க்க அன்பர்கள் மத்தியில் பல சந்தேகங்கள் இருந்துக்கொண்டு 
வருகிறது .
வள்ளலார் படத்தை வழிபடலாமா,வணங்கலாமா என்ற குழப்பம்
இருந்து கொண்டே இருக்கிறது ,
வள்ளலார் மரணத்தை வென்ற மகான் ஞான தேகம் பெற்றவர் ,
ஞானதேகம் என்பது ஒளிஉடம்பு ,ஒளிக்கு உருவம் கிடையாது,
ஊணுடம்பேஒளி உடம்பாய் ஓங்கிநிர்க்க ஞான அமுதம் நல்கிய 
நாயகனே என்று வள்ளலார் கூறுகிறார் ,

வள்ளலார் அருட்பெரும்ஜோதியுடன்கலந்துவிட்டார், இப்பொழுது
வள்ளலார் ஒளி உடம்போடு உலாவிக்கொண்டு இருக்கிறார் .
அருட்பெரும்ஜோதிவேறு,வள்ளலார் வேறுஅல்ல,
அருட்பெரும்ஜோதியைவணங்கினால் வள்ளலாரை வணங்கியது போலாகும் ,
உருவவழிபாடு கூடாது என்பது வள்ளலார் கொள்கையாகும்,

தன்னை கடவுளாக நினைத்து வழிபடுவார்கள் என்றுநினைத்து,
மண்ணால்செய்த தன் உருவத்தை போட்டு உடைத்தார் .
பொன்னால் ஆகவேண்டிய உடம்பை மண்ணாக்கிவிட்டீகளே
என்று வருத்தபட்டார் வள்ளலார்.
கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஜோதி யாக இருக்கிறார் 
அவரைத்தவிர வேறு எந்த உருவ வழிபாடும் கூடாது,என்பது 
வள்ளலாரின் அழுத்தமான் கொள்கையாகும் .
ஆதலால் வள்ளலார் உருவப்படத்தை வணங்கவோ,வழிபடவோ
கூடாது.
அப்படியும் மீறி செயல்ப்பட்டால்வள்ளலார் கட்டளையை மீறிய 
செயலாகும்.
நாம் இப்படி செய்வோம் என்று தெரிந்துகொண்டு வள்ளலார் 
அருட்பாவில் தெளிவாக எழுதிவைத்துள்ளார் .நம்காலில்விழுந்து 
வணங்கி கேட்டுக்கொள்கிறார் .
பாடல்கீழே;--
சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது 
தாழ்வணங்கிச சாற்றுகிறேன் தயவினொடும்கேட்ப்பீர் 
என்மார்க்கத்தில் எனை உமக்குள் ஒருவன் எனக்கொள்வீர்
எல்லாம்செய் வல்லநம் இறைவனையே தொழுவீர் 
புன்மார்க்கதவர்போலே வேறு சில புகன்றே 
ப்ந்திமயக்கடையாதீர் பூரண மெய்ச்சுகமாய்த் 
தன்மார்க்க்மாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே 
தன் ஆணை என்ஆணை சார்ந்து அறிமின் நீண்டே .

என்று வள்ளலார் தெளிவுபட தெரிவித்துள்ளார் .
இதையும் மீறி சன்மார்க்க அன்பர்கள் செயல்ப்பட்டால் ,
அவர்களுக்கு பக்குவம் வரவில்லை என்பதாகும் .
அனைத்தையும் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் 
கவனித்துகொல்வார் .
நன்றி ;--கதிர்வேல் 

  

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment