Pages

Wednesday, June 30, 2010

[vallalargroups:3218] நாம் புளியம்பழமா? விளாம்பழமா?



குரு ஒருவர் கிராமத்தில் சில நாள் தங்கியிருந்தார். அவரைக் காண பலதரப்பட்ட மக்கள் வந்து போவார்கள். சீடர் ஒருவருக்கு சந்தேகம்.

"குருவே. எனக்கு ஒரு சந்தேகம். கேட்கலாமா?" என்றார்.

"கேள்" என்றார் குரு.

"ஆன்மீக அறிவைப் பெறவும், அதற்கான வழிகாட்டல் பெற வருபவர்களை எப்படி இனம் பிரிக்கிறீர்கள்? என்று கேட்டார் சீடர்.

"நாளை என்னைக் காண வருபவர்கள் எல்லோரிடமும் நான் சொல்லும் ஒரு கேள்வியைக் கேள்" என்றார் குரு.

"என்ன கேள்வி அது குருவே?" என்றார் சீடர்.

"குரு பாத யாத்திரையாக இமயமலை போகிறார். திரும்பி வருவதற்கு நீண்டகாலம் பிடிக்கும். குருவுடன் செல்ல விரும்புபவர்கள், தங்கள் பெயரை கொடுக்கலாம். யார் யார் வருகிறீர்கள் என்று கேள்" என்றார் குரு.

மறுநாள் காலை குருவைக் காண வந்தவர்கள் குருவை சந்தித்தபின், சீடர் அவர்களை தனியே அழைத்து குரு சொன்ன கேள்வியைக் கேட்டார். சிலர், மனைவியிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றனர். சிலர் வெளியூருக்கு போவதாக சொல்லி நழுவினர். சிலர் வயலில் நடப்பு வேலை இருக்கிறது. அது முடிந்த பிறகு சொல்கிறேன் என்று நடையைக் கட்டினார்கள். இப்படி எல்லோரும் ஒவ்வொரு காரணம் சொல்லி, இடத்தைக் காலி செய்து விட்டனர்.

ஒரே ஒருவர் மட்டும் தான் வருவதற்குத் தயார் என்றார். குரு அவரை அழைத்து அவரின் குடும்ப விவரங்களை விசாரித்தார். அவர்,"பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி அவரவர் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். வாழ்க்கையில் இன்ப துன்பங்களை அனுபவித்து விட்டேன். இனி நான் என் ஆத்ம பலத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்புகிறேன். உங்களுடன் வருகிறேன்" என்றார்.

குருவும், "மிக்க மகிழ்ச்சி. நீங்கள் நான் எப்போது அழைத்தாலும் வருவீர்கள் அல்லவா? நான் இமய மலை செல்லும் போது தங்களை அழைத்துப் போகிறேன்" என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார்.

குரு சீடரைப்பார்த்தார். சீடர், "வராதவர் ஒரு குழு. வருகின்றவர் என்று சொன்னவர் ஒருவர்." என்றார்.

குரு," இவர்களை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம் என்றார். வரமாட்டேன் என்று சொன்னவரெல்லாம் புளியம்பழம். இன்னும் உலக ஆசைகள் அவர்களோடு ஒட்டியுள்ளன. அவர்களைப் பிரித்தெடுப்பது சற்று கடினம். மனிதரில் பல பேர் இந்த வகைதான். எவ்வளவுதான் அனுபவங்கள் பெற்றாலும், மீண்டும், மீண்டும் உலக ஆசைகளில் மூழ்கியே இருப்பர்.

வருகிறேன் என்று சொன்னவரோ விளாம்பழம். விளாம்பழம் பழுக்கும் வரை ஓட்டோடு ஒட்டியிருக்கும். பழமான பின்பு ஓட்டோடு சேராமல் தனித்து நிற்கும்" என்றார் குரு.

நாம் புளியம்பழமா? விளாம்பழமா?



--
Regards,
Balamurugan.D




--
Regards,
Balamurugan.D

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment